Monday , September 25 2017
விஷேட செய்திகள்
முகப்பு / சினிமா / இந்திய சினிமா

பதிவு வகை: இந்திய சினிமா

Feed Subscription

அதெல்லாம் கேட்காதீங்க! டென்ஸனான ராணா

நடிகர் ராணா இன்று பாகுபலிக்கு பின் ஒரு முக்கிய நடிகராகவிட்டார். தமிழ், தெலுங்கு என இரு படங்களிலும் அவர் நடித்து வருகிறார். சர்ச்சைகளில் சினிமா பிரபலங்களின் பெயர்கள் அடிபடுவது இயல்பே. அதே போல இவருக்கும் நடிகை திரிஷாவுக்கும் காதல் என பல கிசுகிசுக்கள் எழுந்தது. இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவரிடம் கேட்க சற்று உணர்ச்சிவசம் அடைந்தார். காதல், நிச்சயதார்த்தம் என பல செய்திகள் வந்துள்ளது. ஆனால் நான் கடந்த 3 வருடங்களில் 6 படங்களில் நடித்துவிட்டேன். சில டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறேன். மேலும் ... Read More »

வீட்டுக்கு செல்லாமல் வேறு எங்கு செல்கிறார் சுஜா?

நடிகை சுஜா இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேற்றப்பட்டார். வெளியில் வந்த அவரிடம் வீட்டில் சென்று அனைவரையும் எப்படி எதிர்கொள்வீர்கள் என கேட்டார். “நான் இப்போதைக்கு வீட்டுக்கு செல்ல மாட்டேன், 100 நாட்கள் முடியும் வரை வேறு எங்காவது தங்கியிருப்பேன்” என கூறினார். அதற்கு கமல், “தோல்வியை தைரியமாக கொண்டு செல்லவேண்டியது அன்பானவர்கள் தான்” என கூறினார். Read More »

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த பிரபல நடிகை யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் முடியப்போகிறது. நேற்று சுஜா எலிமினேட் ஆனார். தற்போது 5 பேர் மட்டுமே மீதம் உள்ளனர். நேற்றைய நிகழ்ச்சியின் முடிவில் நடிகை ஒருவர் வீட்டுக்குள் நுழைவதைக்காட்டினர். ஆனால் அவரது முகம் காட்டவில்லை. அவரது கையில் பலூனுடன் உள்ளே வந்தார். அந்த பலூனை கவனிக்கையில் அதிலும் பலூன் என்ற எழுத்து உள்ளது. ஆகவே ஜெய் நடித்துள்ள பலூன் படத்தின் நாயகி அஞ்சலி அல்லது ஜனனி இருவரில் ஒருவர் தான் உள்ளே வந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. Read More »

சிம்புவின் திடீர் மாற்றம் ! வைரலான புகைப்படம் உள்ளே

நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளிவந்த AAA படம் மோசமான விமர்சனங்களை மட்டுமே பெற்று பாக்ஸ் படுதோல்வியை சந்தித்தது. அந்த படத்தில் சிம்பு அடையாளமே தெரியாத அளவுக்கு உடல் எடை கூடியிருந்ததும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் சிம்புவின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. அதில் அவர் புதிய ஸ்டைலில் கொஞ்சம் ஒல்லியாக காட்சியளிக்கிறார். இந்த மாறுதல் மணிரத்னம் படத்திற்காகதான் என கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு ஒரு ஆங்கில படத்தை சிம்பு இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Read More »

பிரபல நடிகையை திருமணம் செய்துகொள்ள போகும் ஆர்.கே. சுரேஷ்

தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி தயாரிப்பாளராக வலம் வருபவர் ஆர்.கே. சுரேஷ். தாரை தப்பட்டை, மருது போன்ற படங்களில் மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தன்னுடைய திருமண தகவலை கூறுவதற்காக அண்மையில் சுரேஷ் பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர், சுமங்கலி பட புகழ் திவ்யா என்ற நாயகியை திருமணம் செய்ய போவதாக கூறியுள்ளார். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது இந்த திருமணம், எனக்கு அவர்களை மிகவும் பிடித்திருக்கிறது, அதோடு அவர் என்னுடைய சொந்த ஊரான ராமநாதபுரம் பெண் என்றார். Read More »

நடிகை அஞ்சலியின் அக்கா பற்றி பரவும் வதந்தி

சினிமாவில் கேரக்டர் அர்ட்டிஸ்ட் என்று கூறுவார்கள். அப்படி பெயர் வாங்கியவர் நடிகை அஞ்சலி. இவரது நடிப்புக்கு ஏற்றார் போல் ஒரு கதையும் அமைவதில்லை என்பது பல சினிமா ரசிகர்களின் ஆசை. இந்த நிலையில் நடிகை அஞ்சலியின் அக்கா விரைவில் சினிமாவில் நுழைய இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த தகவலை தற்போது முற்றிலுமாக மறுத்துள்ளார் அஞ்சலி. Read More »

ராஜமௌலியின் அடுத்த படம்- எந்த நடிகருடன் கூட்டணி தெரியுமா?

பாகுபலி என்ற பிரம்மாண்ட வெற்றி படத்தை கொடுத்து இந்திய சினிமாவை தலைநிமிர வைத்தவர் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி. இவர் அடுத்து யாருடன் கூட்டணி அமைப்பார் என்று ரசிகர்களிடம் பெரிய கேள்வி இருக்கிறது. இந்த நிலையில் ராஜமௌலி அடுத்து நடிகர் மகேஷ் பாபுவுடன் தான் கூட்டணி அமைக்கிறார் என்று புதிய தகவல் வந்துள்ளது. மகேஷ் பாபு, முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள ஸ்பைடர் படம் வரும் புதன்கிழமை 27ம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்கான புரொமோஷன் நிகழ்ச்சிகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார் நடிகர். Read More »

ஓட்டுகாக கிராம மக்களை ஏமாற்றுகிறாரா சினேகன்?

கவிஞர் சினேகன் தற்போது பிக் பாஸ் வீட்டின் இறுதி போட்டியாளராக நுழைந்துவிட்டார். “நான் பிக் பாஸ் டைட்டில் வென்றால் வரும் 50 லட்சம் ரூபாயை கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு பயன்படும் வகையில் பிக்பாஸ் நூலகம் அமைத்து அதை கமல் கையால் திறக்க செய்வேன்” என இன்று கூறினார் சினேகன். வெற்றி பெற்றால் அந்த மேடையிலேயே இதற்கான அறிவிப்பை வெளியிடுவேன் என அவர் மேலும் உறுதியளித்தார். ஆனால் இதுப்பற்றி பின்னர் பேசிய நடிகர் ஹரிஷ், “ஓட்டு வாங்குவதற்காக தான் சினேகன் கிராமங்கள் பற்றி பேசி சிம்பதி ... Read More »

Scroll To Top