Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / சினிமா / இந்திய சினிமா (page 10)

பதிவு வகை: இந்திய சினிமா

Feed Subscription

டீஸர் ரிலீஸ் தேதி பற்றி மெர்சல் தயாரிப்பாளர் புதிய ட்வீட்

விஜய் நடித்துள்ள மெர்சல் படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது. அதனால் படத்தின் போஸ்ட் பிரோடக்ஷன் பணிகளை முடித்து சென்சாருக்கு அனுப்பும் முனைப்பில் பணியாற்றி வருகிறது படக்குழு. டீஸர் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகும் என அட்லீ மெர்சல் இசை வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார். ஆனால் தற்போது வரை டீஸர் தேதி பற்றிய எந்த அறிவிப்பும் வராததால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் இது பற்றி ட்விட்டியுள்ள தயாரிப்பாளர் ஹேமா “டீஸர் விரைவில் வெளியாகும், தேதி அறிவிக்கப்படும். ரிலாக்ஸாக இருங்கள், உங்கள் காத்திருப்புக்கு தகுதியானது ... Read More »

நிஜத்துல ஓவியா எப்படி தெரியுமா? இயக்குனரின் பார்வை

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் மனங்களை ஈர்த்தவர். இவர் நடித்துள்ள ஓவியாவ விட்டா யாரு படம் அடுத்தமாதம் வெளியாகயிருக்கிறது. இது பற்றி இயக்குனர் ராஜ துரை கூறும் போது இந்த படத்தின் ட்ரைலருக்கு நல்ல ரெஸ்பான்ஸ். சில காரணங்களால் தாமதம் ஏற்பட்டது. படத்தில் ஓவியா பத்திரிக்கையாளரா நடிச்சிருக்காங்க. எதுக்கும் பயப்படாம கெத்தா இருப்பாங்க. எம்.பி.ஏ படித்த இளைஞன் வேலைக்கு போக பிஸ்னஸ் மூலமா கோடீஸ்வரன் ஆகனும்னு ஆசை. அவனுக்கு ஓவியா எப்படி உதவி செய்யுறாங்க என்பது தான் கதை. செம காமெடியும் இருக்கும். பிக்பாஸ்ல ... Read More »

தயவு செய்து இதை கொஞ்சம் கவனியுங்கள்- ரசிகர்களிடம் கெஞ்சும் தொகுப்பாளினி டிடி

தொகுப்பாளினிகளில் எப்போதுமே ரசிகர்களின் பேவரெட் என்றால் அது டிடி என்கிற திவ்யதர்ஷினி தான். பலர் இப்போது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் இவரின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. இவர் சமூக வலைதளமான டுவிட்டரில் எப்போதுமே ஆக்டீவாக இருப்பார். அதேபோல் இவரது பக்கத்தை போலவே ஒரு போலியான பக்கமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. தன் பக்கத்தை போல் இருக்கும் போலியான பக்கம் குறித்து பல முறை டிடி ரசிகர்களிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று மீண்டும் டிடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நண்பர்களே ... Read More »

அனிருத் இசையை கேட்டு பிரம்மித்து பாராட்டி தள்ளிய பிரம்மாண்ட இயக்குனர்

அனிருத் தமிழில் வெற்றி இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்றுவிட்டார். அண்மையில் அஜித் நடித்த விவேகம் படத்திற்கு இசையமைத்து ரசிகர்களின் பாராட்டை பெற்றிருக்கிறார் அனிருத். இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் பவன் கல்யாண் படத்தின் மூலம் அனிருத் அங்கு அறிமுகமாக இருக்கிறார். பவன் கல்யாண் பிறந்தநாள் ஸ்பெஷலாக படத்தில் இடம்பெறும் ஒரு பாடலின் டீஸரை அனிருத் வெளியிட்டிருந்தார். அதனை கேட்ட பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி அனிருத் இசையை பாராட்டி டுவிட் செய்துள்ளார். Read More »

என்னை அப்படி கூப்பிடாதீங்க… விஜய்க்கு தெறி பேபி வைத்த வேண்டுகோள்என்னை அப்படி கூப்பிடாதீங்க… விஜய்க்கு தெறி பேபி வைத்த வேண்டுகோள்

கடந்த வருடத்தில் வசூலில் பட்டைய கிளப்பிய படம் தெறி. இளையதளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகா விஜய்க்கு மகளாக நடித்திருந்தார். இதில் இருவரும் மாறி மாறி தெறி பேபி என்று கூறுவார்கள். படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் விஜய் நைனிகாவை பேபி என்று தான் அழைப்பாராம். ஆனால் இது நைனிகாவுக்கு பிடிக்க வில்லையாம். இதை நைனிகா விருது விழா ஒன்றில் கூறியுள்ளார். நான் பேபி இல்லை, என்னை நைனிகா என்று கூப்பிடுங்கள் விஜய் அங்கிள் என்று கூறியுள்ளார். Read More »

விஜய்-சிவகார்த்திகேயன் மோதல், உச்சத்தை தொடப்போவது யார்?

தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவையே பாக்ஸ் ஆபிஸில் அதிர வைப்பவர் விஜய். இவருடைய படம் வருகின்றது என்றால் பலரும் தங்கள் படங்களை தள்ளி வைப்பார்கள். அந்த வகையில் விஜய்யின் பார்முலாவை அப்படியே பின் தொடர்ந்து தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வேலைக்காரன் படம் செப்டம்பர் மாதம் வருவதாக இருந்து தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தை தீபாவளிக்கு ரிலிஸ் செய்யலாம் என முடிவெடுத்துள்ளார்களாம், ஆனால், அன்றைய தினம் விஜய்யின் மெர்சல் படமும் வருகின்றது. ஆனால், சிவகார்த்திகேயனும் படத்தின் ... Read More »

கண்டிப்பாக போராடியே ஆகவேண்டும், அனிதாவிற்காக கலங்கிய முன்னணி இயக்குனர்

நீட் தேர்வால் மருத்துவ படிப்பிற்கு செல்ல முடியாமல் இறந்தவர் அனிதா. இவரின் இழப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல திரைப்பிரபலங்கள் தங்கள் இரங்கலை சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர், அமீர், சீமான் போன்றோர் நேரிலேயே சென்று இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் பிரபல இயக்குனர் சுசீந்திரன் இதுபோன்ற தவறுகள் இனி நடக்காமல் இருக்க, அனைவரும் இன்றிலிருந்தே போராட்டத்தை தொடங்கவேண்டும் என்று கூறியுள்ளார். Read More »

10 நாளில் இத்தனை கோடி வசூலா? சென்னையை அதிர வைத்த விவேகம்

விவேகம் படம் திரைக்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகின்றது. ஆனால், இப்படம் மிகவும் கலவையான விமர்சனங்களை பெற்றது. விமர்சனங்களால் படம் தோல்வியடையும் என்று எதிர்ப்பார்த்தால் வசூல் வேற லெவலில் தான் உள்ளது. 10 நாள் முடிவில் இப்படம் சென்னையில் மட்டுமே ரூ 8 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். இன்னும் ரூ 2 கோடி வசூல் செய்தால் தெறி சாதனையையும், ரூ 3 கோடி வசூல் செய்தால் கபாலி சாதனையையும் முறியடிக்கும். இந்த இரண்டு சாதனைகளையும் முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம், ஆனால், பாகுபலி-2 ... Read More »

பிக்பாஸ் வீட்டில் இன்று நடந்த ஓவியா-ஜுலி சண்டை – ரசிகர்கள் ஷாக்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிட்டானதற்கு முக்கிய காரணம் ஓவியா தான். இவர் வெளியேறியதால் நிகழ்ச்சியின் டிஆர்பி குறைந்துள்ளது. இதை ஈடுகட்டுவதற்காக பிக்பாஸ் புதிய போட்டியாளர்களை உள்ளே இறக்கினார். இருந்தாலும் மக்களை கவரவில்லை. ஜுலியும், ஆர்த்தியும் மீண்டும் உள்ளே வந்துள்ளனர். இந்நிலையில் இன்று ஞாபகம் வருதே என்ற டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். இதன்படி முன்பு நடந்த நிகழ்வுகளை நடித்துக்காட்ட வேண்டும் என்று கூறினார். இதற்காக ஓவியா-ஜுலிக்கு இடையே நடந்த சண்டையை அரங்கேற்றி வருகின்றனர். இதைக்கண்டு ஜுலி நொந்து போய் அழுது கொண்டிருக்கிறார்.   Read More »

Scroll To Top