Friday , October 20 2017
விஷேட செய்திகள்
முகப்பு / சினிமா / இந்திய சினிமா (page 2)

பதிவு வகை: இந்திய சினிமா

Feed Subscription

மெர்சல் முதல் நாள் பிரமாண்ட வசூல், அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்த படம் மெர்சல். இப்படத்தை பார்க்க லட்சகணக்கான ரசிகர்கள் காத்திருக்க, அவர்களுக்கு விருந்தாக படம் இன்று வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு இருந்தது, ஏனெனில், ஏற்கனவே விஜய்-அட்லீ கூட்டணியில் வெளிவந்த தெறி செம்ம ஹிட் அடித்தது. இந்நிலையில் மெர்சல் ப்ரீமியர் நேற்று அமெரிக்காவில் தொடங்க, இப்படம் 273K டாலர் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் ரஜினிக்கு பிறகு அமெரிக்காவில் ப்ரீமியரில் அதிக வசூல் செய்தது மெர்சல் தான் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். Read More »

விஜய்க்கு அடுத்து உதயநிதி ஸ்டாலின் – மெர்சல் தயாரிப்பாளரின் பிளான் !

சரவணன் இருக்க பயமேன், பொதுவாக எம்மனசு தங்கம் படங்கள் மூலமாக பி அன்ட் சி ஆடியன்ஸிடம் வெகுவாக வரவேற்பைப் பெற்ற உதயநிதியின் அடுத்த ரிலீஸாக வெளிவரவிருக்கும் ‘இப்படை வெல்லும்’ திரைப்படம் மல்டி ப்ளக்ஸ் ஆடியன்ஸையும் சேர்த்து டார்க்கெட் செய்திருக்கிறது. நவம்பரில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படும் ‘இப்படை வெல்லும்’ படத்தை கௌரவ் நாராயணன் இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தயாரிப்பாளராக தனது பயணத்தைத் துவங்கி தற்போது ஹீரோவாக வரிசையாக படம் செய்து வரும் உதயநிதி அடுத்ததாக தேனாண்டாள் ஃபிலிம்ஸ் ... Read More »

மெர்சல் படம் வெளியாகும் திரையரங்கு முன்பு தீக்குளிப்போம் – அரியலூர் மாவட்டம் இயக்கத்தில் பிரச்சனை !

வரும் தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் வெளிவருகிறது தளபதியின் மெர்சல். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது, பல பிரச்சனைகளை தாண்டி இப்படம் வெளிவரவுள்ளது, ஆனால் இன்னும் பிரச்சனைகள் ஓய்ந்த பாடியில்லை. அரியலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவர் சிவா மீது ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் நகர நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.’16 வருஷமாக உழைத்த நகர நிர்வாகிகளை நீக்கிவிட்டுப் புதிய நிர்வாகிகளைத் தலைமைக்குத் தெரியாமல் அவராகவே நியமித்துக் கொண்டிருக்கிறார். நாங்கள் கேள்விகேட்டால் எந்தப் பதிலும் சொல்வதும் கிடையாது அதேபோல் அவரிடம் கேட்காமல் தலைமையிடம் பேசக் ... Read More »

மீண்டும் போலீஸ் கதையில் அஜித் – இயக்குனர் யார்?

விவேகம் படத்தின் சுமாரான வெற்றிக்கு பிறகு ஓய்வு எடுத்து வருகிறார் அஜித். அடுத்த படமும் இயக்குனர் சிவாவுடன் மீண்டும் இணைகிறார் என்று செய்தி வலம் வருகிறது. இந்நிலையில் அடுத்த படத்தில் அஜித் போலீஸ் கதை களத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் கசிகிறது. ஏற்கனவே இயக்குனர் சிவா கார்த்தி வைத்து போலீஸ் கதைக்களத்தில் சிறுத்தை எடுத்தார், இப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அதே போல் ஒரு லோக்கல் போலீஸ் கதை தான் களமாக ஐடியா வைத்துள்ளார் என்கிறார்கள் இயக்குனர் சிவா வட்டாராம் இதுபற்றி விரைவில் அறிவிப்பு வரும் என்று தல தரப்பில் சொல்லப்படுகிறது Read More »

மெர்சலுக்கு சான்றிதழ் கிடைத்துவிட்டது, ஆனால் ஒரு ஏமாற்றம்

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் பிரமாண்டமாக தீபாவளிக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பில் உள்ளது. முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே படத்திற்கு பல இடங்களில் ஹவுஸ்புல் போர்ட் தான் உள்ளது, இந்நிலையில் மெர்சல் படத்தை நேற்று விலங்குநல வாரியம் பார்த்து எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று சான்றிதழ் வழங்கிவிட்டது. அதை தொடர்ந்து தற்போது படத்தின் சென்ஸார் சான்றிதழ் முறைப்படி வழங்கப்பட்டுவிட்டது, ஆனால், படத்தில் இரண்டு காட்சிகளை கட் செய்துள்ளார்களாம். அந்த காட்சி என்ன என்று தெரியவில்லை, இது ... Read More »

பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த போட்டியாளர்கள் இவர்கள்! இனிதே ஆரம்பம்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் தொடங்கி, கன்னடம், தமிழ், தெலுங்கு என நீண்டது. இதில் தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, இதிலும் தெலுங்கிலும் முதல் சீசன் முடிந்துவிட்டது. இம்மாதம் தொடக்கத்தில் ஹிந்தியில் 11 வது சீசன் தொடங்க, நேற்று கன்னடத்தில் 5 வது சீசன் தொடங்கியுள்ளது. மீண்டும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கன்னட நடிகர் சுதீப், 17 போட்டியாளர்களையும் வரவேற்று மனசே மனசே என பாடலை பாடி ஆரம்பித்துவைத்தாராம். இதில் எண்கணிட நிபுணர் ஜெய ஸ்ரீநிவாசா நான் எனக்கு ராசியான எண் 8. ஏற்கனவே எட்டாவது ... Read More »

இதுவரை பார்க்காத சாதனை இது! மெர்சல் ரிசர்வேஷன் பற்றி பிரபல திரையரங்கு

மெர்சல் படத்தில் ரிசர்வேஷன் தொடங்கி நடந்துவருகிறது. படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் தொடர்பாக சிக்கல் இன்னும் நீடிக்கும் நிலையிலும் ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் ரீசர்வ் செய்துவருகின்றனர். நெல்லை ராம் முத்துராம் தியேட்டரில் முன்பதிவு தொடங்கி 20 நிமிடத்தில் விற்று தீர்ந்துவிட்டதாம். வழக்கமாகி ரிலீஸுக்கு முந்தைய நாள் அல்லது இரண்டு நாட்கள் முன்பு தான் FDFS டிக்கெட்டுகள் விற்று தீருமாம். ஆனால் மெர்சல் 20 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டும் விற்று தீர்ந்துவிட்டது. அதை வாங்க சென்னை, கேரளாவில் இருந்து கூட ரசிகர்கள் அங்கு வந்துள்ளனர். Read More »

தீபாவளி அன்று தலைவி ஓவியா ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்பெஷல்

தீபாவளி என்றால் பொதுவாக வீட்டில் பூஜை செய்து பட்டாசு வெடித்து மகிழ்வோம். ஆனால் இப்போதெல்லாம் புதுப்படம் வருகிறதா, தொலைக்காட்சியில் ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் வருகிறதா என்பதை பார்க்க தான் பலரும் ஆவலாக இருக்கின்றனர். இந்த நிலையில் வரும் அக்டோபர் 18ம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக சன் தொலைக்காட்சியில் அன்புடன் ஓவியா என்ற நிகழ்ச்சி காலை 9 மணியளவில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பல விஷயங்களை பற்றி ஓவியா மனம் திறந்து பேசியிருப்பதாக கூறப்படுகிறது. Read More »

அது மட்டும் நடக்கலனா வீட்டுல அடி பின்னியிருப்பாங்க: ஆரவ்

பிக் பாஸ் போட்டியாளர்களை மீண்டும் ஒன்றிணைக்கும் ஒரு விழா சமீபத்தில் நடந்தது. அதற்கு ஆரவ், ஓவியா உட்பட அனைவரும் வந்திருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் ஓவியா-ஆரவ் இடையே ஒரு விவாதம் நடந்தது. அப்போது ஓவியா “பிக்பாஸ் விட்டு சென்று வீட்டில் என்ன சொன்னீங்க?” என கேட்டார். அதற்கு ஆரவ், “என்னோடு இருந்து இதெல்லாம் நடந்திருந்தால் எனக்கு அப்போதே தர்ம அடி விழுந்திருக்கும். 100 நாள் இருந்து டைட்டில் ஜெயித்ததால் சந்தோசமாக இருந்தார்கள்.. அடி விழவில்லை” என கூறினார். Read More »

Scroll To Top