Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / சினிமா / இந்திய சினிமா (page 20)

பதிவு வகை: இந்திய சினிமா

Feed Subscription

மீண்டும் ஓவியா வர வாய்ப்பு உள்ளதா? காயத்ரியை ஏன் காப்பாற்றினோம் – விளக்கமளித்த பிக் பாஸ்

ஒவ்வொரு வாரமும் ரசிகர்கள் எதிர்பார்ப்பது வார இறுதியில் வரும் கமலின் அதிரடியைத்தான். மக்களின் சந்தேகங்களை அதிரடியான கேள்விகள் மூலம் தீர்த்து வைப்பார்.இன்று மேலும் ஒருபடியாக பிக்பாஸ் பற்றி தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் ஸ்ரீப்ரியா, சதிஷ் இருவரையும் அழைத்து பேசியுள்ளார். இதில் ஸ்ரீப்ரியா கமலிடம் ஏன் காயத்ரியை திடிரென்று நேற்று காப்பாற்றியுளீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு கமல் இந்த கேள்விக்கு எனக்கும் விடை தெரிய வேண்டும் என்று ஆசைப்பட்டார். உடனே பிக் பாஸ் ஒவ்வொரு வாரமும் நடக்கும் நாமினேஷன் வழிமுறைகளை பங்கேற்பாளர்கள் சரியாக ... Read More »

கவுதமியின் முதல் கணவர் யார் தெரியுமா? அவர் ஏன் கமலுடன் குடும்பம் நடத்தினார்

ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் கவுதமி. இவர் கடந்த 1987ம் ஆண்டு தெலுங்கில் தயமாயுடு என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் 1988ம் ஆண்டு தமிழில் ரஜினியின் குருசிஷ்யன் படத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து கமலுடன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் இணைந்து நடித்தபோது அவருடன் நல்ல நட்பு ஏற்பட்டது. 1998ல் சந்தீப் பாட்டியா என்ற தொழில் அதிபரை கவுதமி காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1999ம் ஆண்டு சுப்புலட்சுமி என்ற பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அதே வருடம் கருத்துவேறுபாடு காரணமாக சந்தீப்பாட்டியாவை விட்டு பிரிந்தார். ... Read More »

பிக் பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பரபரப்பு பேச்சு

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஜூலி தான் ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்பட்டவர் என சொல்லலாம். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான அவரை முதலில் ரசிகர்கள் ஆதரித்தாலும், ஒரே வாரத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அனைவரும் ஓவியாவுக்கு ஆதரவாக பேச துவங்கிவிட்டனர். பிக்பாஸில் இருந்து ஜூலி ஏற்கனவே வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில், அவர் தன் முகநூல் பக்கத்தில் இந்த ஷோ பற்றி ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். “வெளியுலகத்தில் நான் எப்படி நடந்துகொள்கிறேன் என்பது தான் என் உண்மையான கேரக்டர், ஷோவில் நான் எப்படி நடந்துகொண்டேன் என்பதல்ல” என ... Read More »

விஐபி-2 இரண்டு நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை- முழு விவரம்

தனுஷ் நடிப்பில் விஐபி-2 சமீபத்தில் வந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது, பலரும் இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் தான் கொடுத்தனர். ஆனால், ஆச்சரியம் என்னவென்றால் படத்தின் வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை, தொடர் விடுமுறை என்பதால் இன்னும் நல்ல வசூல் வரும் என கூறுகின்றனர். தமிழகத்தில் இரண்டு நாட்களில் இப்படம் ரூ 10 கோடி வரை வசூல் செய்துவிட்டது, உலகம் முழுவதும் விஐபி-2 ரூ 15 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். Read More »

காயத்ரியை திட்டமிட்டு காப்பாற்றி ரசிகர்களை ஏமாற்றிய பிக்பாஸ் – கொந்தளித்த நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா போன பிறகு ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். இதனையடுத்து ஜுலியானா ரசிகர்களால் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் ரசிகர்கள் அனைவரும் காயத்ரியைத்தான் குறிவைத்திருந்தனர். இதற்காக அவரைத்தவிர மற்றவர்களுக்கு ஓட்டுக்களை பிரித்து போட்டனர். இதனால் இந்த வாரம் காயத்ரி நிச்சயம் செல்வார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் இன்று பிக்பாஸ் ஒவ்வொருவரிடம் கேள்விகள் கேட்டார். இதில் காயத்ரி அனைத்திற்கும் சரியாக பதில் சொன்னதாக கூறி அவரை எவிக்ஷனிலிருந்து காப்பாற்றிவிட்டார். காயத்ரிக்கு ஆதரவாக பிக்பாஸ் செயல்படுவதாக இருந்த குற்றச்சாட்டு தற்போது உறுதியாகியுள்ளதாக நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர். Read More »

ஆரவ் கொடுத்த முத்தத்தின் பெயர் என்ன? பிந்து மாதவியிடம் பிக்பாஸ் கேட்ட கேள்வி

பிக்பாஸ் நிகழ்ச்சி ஓவியா சென்ற பிறகு விறுவிறுப்பு குறைந்துள்ளது என்பதே உண்மை. கடந்த சில நாட்களாக சுவாரசியம் இல்லாத நிலையில் இன்று ஒவ்வொருவரிடமும் 5 கேள்விகள் கேட்கப்பட்டது. இதில், ஓவியாவை நீச்சல்குளத்தில் தள்ளிவிட்டது யார், பரணி வெளியே சென்ற போது அணிந்திருந்த சட்டை நிறம் என்ன என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் பலர் சரியான விடைகளை அளித்தனர். ஆனால் பிந்து மாதவி ஒரு கேள்விக்கு மட்டுமே சரியாக பதில் அளித்தார். அவரிடம், ஆரவ் கொடுத்த முத்தத்தின் பெயர் என்ன என்று பிக்பாஸ் கேட்டார். ... Read More »

பிக்பாஸ் கேட்ட கேள்வியால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சினேகன்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்தை கொச்சை படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டு முன்னர் எழுந்தது. மேலும், ஜூலி தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியது தாயுமானவர் என தவறாக சொன்னதால் அவரை சமூக வலைத்தளங்களில் விமர்சித்தனர். இந்நிலையில் மீண்டும் அதே கேள்வியை கவிஞர் சினேகனிடம் பிக்பாஸ் கேட்டார், அதற்கு நீண்ட நேரம் யோசித்த அவர் “தாயுமானவர்” என தவறாகவே பதிலளித்தார். இதனால் அவரை மீண்டும் ரசிகர்கள் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர். Read More »

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிரான வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி முடிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியை குடும்பத்தினருடன் பார்க்க முடியாத அளவுக்கு ஆபாசமாக இருப்பதாக கூறி அதற்கு தடை விதிக்கக்கோரி,சென்னை நங்கநல்லூரை சேர்ந்ந சரவணன் என்பவர், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை யார் கண்காணிப்பது என்பது தொடர்பாக, ஒரு வாரத்திற்குள் மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு என தமிழக அரசு தரப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. Read More »

ஆகஸ்ட் 18ம் தேதி ஓவியா ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்பெஷல்

ஓவியா இருந்தால் தான் நாங்கள் BiggBoss நிகழ்ச்சியை பார்ப்போம் என்று சுற்றி வருகிறார்கள் சில இளைஞர்கள். அவர் இருந்த வரை நிகழ்ச்சி மிகவும் நன்றாக இருந்தது. அவர் செய்யும் சின்ன சின்ன குறும்புத்தனம் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்திருந்தது. சில காரணங்களால் அவர் வெளியேற்றப்பட்டாலும் மீண்டும் அவர் WildCard மூலம் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்பது ரசிகர்களின் பெரிய ஆசை. இந்த நிலையில் ஓவியா தெலுங்கில் நடித்திருக்கும் Idi Naa Love Story என்ற படம் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாக இருக்கிறது. BiggBoss நிகழ்ச்சிக்கு ... Read More »

ரஜினிக்கு பிறகு விஜய் தான் அதை நன்றாக செய்வார்: தனுஷ்

தனுஷ் நடிப்பில் விஐபி2 இன்று திரைக்கு வரவுள்ளது. நேற்று தனுஷ் மற்றும் படக்குழு ரசிகர்களுடன் பேஸ்புக் லைவ் மூலம் உரையாடினர். அப்போது ஒரு ரசிகர் “எந்த ஹீரோ காமெடி செய்தால் நன்றாக இருக்கும்?” என கேட்டதற்கு, “சூப்பர்ஸ்டார் ரஜினிக்குதான் காமெடி நன்றாக வரும். அவருக்கு பிறகு விஜய் சாரோட காமெடி டைமிங் ரொம்ப பிடிக்கும்” என தெரிவித்துள்ளார் தனுஷ். Read More »

Scroll To Top