Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / சினிமா / இந்திய சினிமா (page 3)

பதிவு வகை: இந்திய சினிமா

Feed Subscription

விஜய்யின் மெர்சலில் இந்த விசயங்களும் உள்ளதா?

மெர்சல் தமிழ் சினிமாவின் அடுத்த பரபரப்பு. விவேகம் படத்தை எதிர்பார்த்தது போல அனைவரின் பார்வையும் மெர்சல் மீது திரும்பியுள்ளது. இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இன்னும் ஒரு மாதம் கூட முழுமையாக இல்லை. இப்படத்தில் விஜய்யின் முந்தைய படங்களான ஜில்லா, துப்பாக்கி போலவே காஜல் அகர்வால் இப்படத்திலும் ஜோடி சேர்ந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் அதே போல சில ரொமானஸ் காட்சிகள் உள்ளதாம். லவ் மூடில் இருப்பவர்கள் இதை எஞ்சாய் பண்ணலாம். மேலும் விஜய்யுடன் பாட்டுக்கு நடனம் ஆடுவது ஒரு நல்ல அனுபவம். ஆனால் கஷ்டம். அவர் வேகமாக ... Read More »

பிக்பாஸ் வீட்டுக்குள் அரங்கேறிய அடிதடி சண்டை – அத்துமீறும் சினேகன்

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு வாரங்களில் முடிவடைய இருக்கிறது. தற்போது 6 பேர் மட்டுமே மீதம் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பல டாஸ்க் கொடுக்கப்படும். இத்தனை நாட்கள் நடந்த போட்டியை விட இந்த வாரம் மிகவும் கடுமையான போட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது இரண்டு டீம்களாக பிரிக்கப்பட்டு பலகையில் பலுன் ஒருவர் ஒட்ட வேண்டும் அதை ஒருவர் உடைக்க முயல மற்றொருவர் தடுக்க வேண்டும். இதில் கணேஷை ஆரவ்வும், பிந்துமாதவியும் தடுக்கின்றனர். சினேகனை சுஜாவும், ஹரிஷும் தடுக்கின்றனர். இதனால் ஒவ்வொருவரும் கைகால்களை உடைத்துக்கொள்ளும் அளவுக்கு மோசமாக விளையாடி ... Read More »

தவறாக நடந்து கொண்டாரா சினேகன்? சுஜா வைக்கும் புதிய குற்றச்சாட்டு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்கு பஞ்சமேயில்லை. இந்நிகழ்ச்சியில் சினேகன் அனைவரையும் கட்டிப்பிடிக்கின்றார் என்று ஏற்கனவே மக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் நடந்த பலுன் உடைக்கும் போட்டியில் சுஜாவுடன் மிகவும் மோசமாக சண்டையிட்டார். இதனால் அவருக்கும், சுஜாவுக்கும் வாக்குவாதமும் ஏற்பட்டது. இதனையடுத்து கணேஷிடம் சுஜா பேசுகையில், நீங்கள் பிந்துமாதவியுடன் விளையாடும்போது தவறாக கைபட்டு விடக்கூடாது என்பதற்காக கண்ணியமாக விளையாடினீர்கள். ஆனால் சினேகன் அப்படியில்லை. இப்போது தான் கூடையில் பந்து போடும் விளையாட்டிலிருந்து பிந்து மாதவி சினேகனுடன் சண்டையிட்டு ஏன் வெளியேறினார் என்பது புரிகிறது என்று கூறியுள்ளார்.   Read More »

இந்தியாவை விட்டு பறந்த விஜய் எங்கிருக்கிறார் தெரியுமா?

பைரவா படத்தை தொடர்ந்து விஜய் நடித்துள்ள படம் மெர்சல். அட்லீ இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நேற்று நிறைவடைந்தது. படக்குழுவினருடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜய் இன்று இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். சென்னையிலிருந்து துபாய்க்கு சென்று அங்கிருந்து பார்சிலோனாவுக்கு செல்கிறார். மெர்சல் தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது. Read More »

ஆண்கள் டாய்லெட்டுக்கு சென்று செல்பி எடுத்த பிக்பாஸ் காஜல்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமில்லாத பலரும் பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில் படங்களிலிலும், சின்னத்திரையிலும் சிறு வேடங்களில் நடித்து வந்த காஜல் பசுபதி பிக்பாஸில் கலந்து கொண்டார். இதன்மூலம் தமிழ் மக்கள் பலருக்கும் பரிட்சயமானார். பிக்பாஸில் எலிமினேஷன் ஆன இவர் இன்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் பிரபல திரையரங்கத்தின் ஆண்கள் கழிவறைக்குள் செல்பி எடுத்துள்ளார். நான் ஏன் இங்கிருக்கேன் என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என ரசிகர்களுக்கு ஒரு கேள்வியும் எழுப்பியுள்ளார். Read More »

3 இல்லை 30-திலும் அது இருக்கும்- விஜய் படம் குறித்து முருகதாஸ்

முருகதாஸ் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர். இவர் படங்கள் வெறும் பொழுதுப்போக்கு என்று மட்டும் யாரும் பார்ப்பதில்லை, இவர் சமுதாயாத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை கமர்ஷியலாக கூறுபவர். இவர் விஜய்யுடன் 3வது முறையாக இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளார், இப்படம் குறித்து இவர் பேசுகையில் ‘விஜய்யுடன் 3 படம் இல்லை. 30 படம் கூட இணைந்து செய்வேன், அந்த அனைத்து படத்திலும் ஏதாவது ஒரு சமுதாயக்கருத்து இருந்துக்கொண்டே தான் இருக்கும்’ என அவர் தெரிவித்துள்ளார். Read More »

ரெஜினாவுக்கு பதிலாக ரம்யா நம்பீசன்! புது சேஞ்ச்

நடிகை ரெஜினா கசண்ட்ரா தமிழ், தெலுங்கு, கன்னடம் என படங்களில் நடித்து வருகிறார். கன்னடத்தில் குருச்சேத்திரா என புராண படம் ஒன்று கடந்த ஆகஸ்ட் 6 ம் தேதி முதல் ஷூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் துரியோதனின் மனைவி கதாபாத்திரத்தை ரெஜினா நடிக்கயிருந்தார். தற்போது அவருக்கு பதிலாக ரம்யா நம்பீசன் நடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதின் படப்பிடிப்பு அடுத்த மாதம் எடுக்கப்படுகிறது. இது கன்னடத்தில் இவரின் இரண்டாம் படமாகும். ஏற்கனவே ஸ்டைல் கிங் என்னும் படத்தில் நடித்துள்ளார். Read More »

இந்த பலூன் அஞ்சலி எங்க தான் போனாங்க! போட்டோ உள்ளே

தமிழ் படங்களில் நடித்து வந்த நடிகை அஞ்சலி தெலுங்கிலும் நடித்து வருகிறார். ஒரு பக்கம் நடிகர் ஜெய் உடனான காதலிலும் அடிக்கடி செய்திகள் வருகிறது. எங்கேயும் எப்போதும் படத்திற்கு பிறகு இருவரும் ஜோடியாக நடித்து வரும் படம் பலூன். சினிஷ் இயக்கிவரும் இப்படம் ஒரு திகில் கலந்த திரில்லர் படமாக உருவாகி வருகிறது. இதன் ஷுட்டிங் விறுவிறுப்பாக முடிக்கப்பட்டு தற்போது டப்பிங் பணிகள் துவங்கிவிட்டது. அஞ்சலி தான் டப்பிங் பேசுவதை போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். Read More »

Scroll To Top