Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / சினிமா / இந்திய சினிமா (page 331)

பதிவு வகை: இந்திய சினிமா

Feed Subscription

விருது வேட்டையை தொடங்கிய பாகுபலி.

ராஜமௌலி இயக்கத்தில் மிகப்பிரம்மாண்டமாக பலரின் எதிர்ப்பார்ப்புடன் வெளியான பாகுபலி திரைப்படம் இந்தியா சினிமா வரலாற்றில் வெற்றிக்கான ஒரு மாபெரும் இடத்தை பிடித்தது. இன்று வரை இதன் வசூல் வேட்டை குறைந்தபாடில்லை. தற்போது ஒரு பிரபல தொலைக்காட்சி ஒன்று நடத்திய விருது விழாவில் சிறந்த எபெக்ட்-கான விருதினை பெற்றுள்ளது பாகுபலி. படக்குழுவின் சார்பாக விருதினை ராணா டக்குபதி பெற்றுக்கொண்டார். விருதை பெற்ற ராணா நாங்கள் படப்பிடிப்பை 320 நாட்களிலே முடித்து விட்டோம். ஆனால் இதன் கிராஃபிக்ஸ் வேலைகள் மட்டும் மூன்று ஆண்டுகள் நடந்தது என கூறினார். ... Read More »

வசூல் ராணியாக மாறிய நயன்தாரா.

தமிழ் சினிமாவில் பொதுவாக நடிகர்களை மையப்படுத்தியே படங்கள் வருகின்றன. ஒரு சில படங்களே நடிகைகளுக்கு முக்கியத்துவம் தந்து வெளிவருகின்றன. அந்த வகையில் நயன்தாராவின் நடிப்பில் திரில்லர் கதையம்சத்துடன் கடந்த வாரம் வெளிவந்த படம் மாயா. வெளியான 5 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 6 கோடி வசூல் செய்துள்ளது. தெலுங்கிலும் மயூரி என்ற பெயரில் வெளியாகியுள்ள இப்படம் 300 திரையரங்கில் வெளியாகி மொத்தம் ரூ. 15 கோடி வசூலித்துள்ளது. Read More »

வீரமா? அதுக்கு மேல! தல – 56 ஸ்பெஷல்.

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் அனைத்து ஏரியாக்களிலும் படம் விற்றுவிட்டது. இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக அமைந்த படம் வீரம். ஏனெனில் அதில் அத்தனை பன்ச் வசங்கள் இருந்தது, இதையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு தல-56 படத்தில் நிறைய பன்ச் வசனம் உள்ளதாம், அதைவிட பல அதிரடி சண்டைக்காட்சிகளும் இருக்க, இப்படம் வீரத்தை விட ரசிகர்களை வெகுவாக கவருமாம். Read More »

தனி ஒருவன் படத்தால் பிரபல நிறுவனத்திற்கு தடை. அதிர்ச்சியில் கோலிவுட்.

தமிழ் சினிமாவிற்கு என தற்போது பல விதிமுறைகள் வந்துவிட்டது. அதிலும் தயாரிப்பாளர்கள் ஒரு படத்திற்கு விளம்பரத்திற்காக இத்தனை கோடி தான் செலவு செய்ய வேண்டும் என ஒரு விதிமுறை வந்துள்ளது. இதனால் பல படங்கள் சரியான விளம்பரம் இல்லாமல், தோல்வியை சந்திக்கின்றது. இதற்கு பெரிய உதாரணம் பாயும் புலி. தற்போது தனி ஒருவன் படத்தை அதிக விளம்பரப்படுத்திய காரணத்திற்காக இனி படம் தயாரிக்க தடை என கூறியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது. இது நடைமுறைப்படுத்த படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். Read More »

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை அந்த நடிகரே வாழ்த்தி விட்டார்.

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. ஆனால், குடும்பம் மற்றும் பெண்கள் மத்தியில் இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு இருந்து வருகின்றது. இதுபோன்ற கதைக்களம் கொண்ட படத்தில் தைரியமாக நடிப்பது என்றால் அது எஸ்.ஜே.சூர்யா மற்றும் சிம்புவும் தான். சிம்பு நடித்த மன்மதன் மற்றும் வல்லவன் படம் கூட கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போதும் சிம்புவே தனக்கு த்ரிஷா இல்லன்னா நயன்தாரா தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக டுவிட் செய்துள்ளார். Read More »

சிவகார்த்திகேயனிடம் ரஜினி போனில் கூறியது என்ன? சூடு பிடிக்கும் மதுரை விவகாரம்.

சிவகார்த்திகேயன் மதுரையில் தாக்கப்பட்டது தான் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பிய செய்தி. இவரை கமல் ரசிகர்கள் தான் தாக்கினார் என்று அனைவராலும் கூறப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த சம்பவத்தை அறிந்த ரஜினி உடனே சிவகார்த்திகேயனை தொலைப்பேசியில் அழைத்து ‘கவனமா இருங்க. பொது இடங்களுக்கு போவதை குறைச்சுக்குங்க’ என்று அறிவுரை கூறினாராம். இதனால், சிவகார்த்திகேயன் மிகவும் மனம் உருக, இந்த செய்தி இதோடு இல்லாமல் மேலும் தற்போது சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. Read More »

சூர்யாவை நம்பி சமந்தா எடுக்கும் பெரிய ரிஸ்க்.

சூர்யா, சமந்தா நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் அஞ்சான். இப்படம் படுதோல்வியடைந்ததால், இந்த ஜோடி ராசியில்லாத ஜோடி என தெரிவித்தனர். ஆனால், அதைப்பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை என்று சமந்தா மீண்டும் சூர்யாவுடன் 24 படத்தில் நடிக்க சம்மதித்தார். இது மட்டுமின்றி இப்படத்தின் தெலுங்கு உரிமையை கூட, சமந்தா தான் வாங்கியுள்ளாராம். சாதாரண விலைக்கு இல்லை, கிட்டத்தட்ட சுமார் 15 கோடிகளுக்கு மேல் கொடுத்து இப்படத்தின் தெலுங்கு உரிமையை சமந்தா வாங்கியுள்ளாராம். ஏனெனில் இப்படத்தின் மீது சமந்தாவிற்கு அத்தனை நம்பிக்கையாம். Read More »

ரசிகர்கள் செய்கிற குழப்பம் – அதிருப்தியில் விஜய், அஜித்.

இளைய தளபதி விஜய் தன் ரசிகர்களை மிகவும் மதிப்பவர். எந்த ஒரு சூழ்நிலையிலும் தன் ரசிகர்களை விட்டுக்கொடுக்காதவர். இந்நிலையில் நேற்று சிவகார்த்திகேயனை மதுரையில் தாக்கியது அஜித் ரசிகர்கள் தான் என்று ஸ்ரீகாந்த் டுவிட்டரில் கூறியதாக ஒரு கூறப்பட்டது. பின் விசாரிக்கையில் அது ஒரு போலி என்று தெரிய வந்தது. இதே நபர் தான் வாலு படத்தின் போதும் அஜித்தை வைத்து உங்களை பிரபலப்படுத்தாதீர்கள் சிம்பு என கூறி, பெரிய பிரச்சனை வரை வந்து, பின் ஸ்ரீகாந்தே ’அது நான் இல்லை’ என்று கூறி முற்று ... Read More »

இத்தனை திரையரங்கில் புக் ஆகிவிட்டதா தல-56

தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர் அஜித். இவர் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்பு கூட முடியவில்லை, ஆனால், அனைத்து ஏரியாக்களிலும் படம் விற்றுவிட்டது. சமீபத்தில் வந்த தகவலின் படி இப்படம் கோயமுத்தூரில் மட்டும் சுமார் 63 திரையரங்குகள் தற்போதே புக் ஆகிவிட்டதாம். மேலும், இது அதிகரிக்கும் பொருட்டு அஜித் புது சாதனை படைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. Read More »

மைனஸை, பிளஸாக்கும் ஒரு யுத்தி, அமானுஷியம் நிறைந்த ஓர் படம்.

தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் சிறு பட்ஜெட் படங்களே மிகவும் கவனம் ஈர்க்கின்றது. அந்த வகையில் நாத் ராமலிங்கம் இயக்கத்தில் இந்த வாரம் வெளிவரும் படம் தான் உனக்கென்ன வேணும் சொல்லு. இப்படம் பற்றி இவர் கூறுகையில் ’ஒவ்வொரு மனிதனுக்கும் முன்னேற்றம் தடைபடும்போது, ஏன் என்ற கேள்வி எழும். நம் ஆழ்மனதில், நம்மையும் அறியாமல் பல விஷயங்கள் உறங்கிக் கிடக்கின்றன. அதை ஹிப்னோதெரபி என்கிற ஆழ்மனக்கலை மூலம் கண்டுபிடித்து சிகிச்சை பெற்றால், நமது மைனஸ் பாயின்டுகள் பிளஸ் பாயின்டுகளாக மாறும். அதேபோல் தவறான அணுகுமுறையில் ஓர் ... Read More »

Scroll To Top