Tuesday , August 22 2017
விஷேட செய்திகள்
முகப்பு / சினிமா / இந்திய சினிமா (page 369)

பதிவு வகை: இந்திய சினிமா

Feed Subscription

அமெரிக்க அதிபர் ஒபாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்பு!

இந்திய குடியரசு தின விழாவுக்கு வருகை தரவுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிசேல் ஒபாமா ஆகிய இருவருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசை நிகழ்ச்சிக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி வரும் 26 ஆம் திகதி பரோடா நகரில் நடைபெறவுள்ளது. இந்த இசை நிகழ்ச்சிக்கு வருகை தருமாறு அமெரிக்க அதிபருக்கு அழைப்பு விடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் தனக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த வெள்ளை மாளிகை நிர்வாகிகளுக்கு ... Read More »

‘ஐ’ பட திரைவிமர்சனம்!

நடிகர் : விக்ரம் நடிகை : ஏமி ஜாக்சன் இயக்குனர் : ஷங்கர் இசை : ஏ. ஆர். ரகுமான் ஒளிப்பதிவு : பிசி ஸ்ரீராம் ஜிம் வைத்து நடத்தி வரும் விக்ரம், மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வெல்வதற்காக அதிக ஈடுபாட்டுடன் பயிற்சி எடுத்து வருகிறார். இவருக்கு சர்வதேச மாடலான எமி ஜாக்சன் மீது அதீத பிரியம். அவர் எந்த விளம்பரத்தில் நடித்தாலும், அவர் விளம்பரப்படுத்தும் பொருளை வாங்கி வைத்துக் கொள்ளும் அளவுக்கு எமி மீது பைத்தியமாக இருக்கிறார். இந்நிலையில், தனது நண்பன் சந்தானம் ... Read More »

சிவகார்த்திகேயனின் அதிரடி ஆக்சனில் ‘காக்கி சட்டை’ ட்ரெய்லர்!

மான் கராத்தே’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் காக்கி சட்டை. இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். இப்படத்தை ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க படத்தை தயாரித்திருக்கிறார் தனுஷ். முதன் முறையாக இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் வேடம் ஏற்று நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரை காண கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணுங்க. Read More »

“ஐ” திரைப்படத்திற்கு இடைக்கால தடை

“ஐ”  திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ஐ படம் பொங்கலன்று திரைக்கு வரும் என அறிவிக்கபட்டிருந்தது. பிக்சர் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம்இ தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரன் கடனை திருப்பி செலுத்த வில்லை என கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் 3 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு ஆஸ்கார் ரவிசந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் அதுவரை படத்தை திரையிடவும் தடை விதித்தனர். இதனால் பொங்கலுக்கு படம் ... Read More »

என்னை அறிந்தால் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அஜீத்தின் என்னை அறிந்தால் படப்பிடிப்பு முடிந்துள்ளது. டப்பிங், ரீ ரிக்கார்டிங், மிக்சிங் உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. விக்ரமின் ‘ஐ’ படமும் அதே நாளில் கூடுதல் தியேட்டர்கள், வெளியாக இருப்பதால் என்னை அறிந்தால் படம் தள்ளிப் போகலாம் என பேச்சு அடிப்பட்டது. இந்த நிலையில் பொங்கலுக்கு என்னை அறிந்தால் படம் வரும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:– உலகெங்கும் உள்ள அஜீத் ரசிகர்களுக்கு புது வருடம் ... Read More »

மீண்டும் இணையும் சுப்ரமணியபுரம் டீம்

ஜெய், சசிகுமார், சமுத்திரகனி ஆகியோர் நடிப்பில் 2008-ம் ஆண்டு வெளியான படம் ‘சுப்ரமணியபுரம்’. இப்படத்தை சசிகுமார் இயக்கியிருந்தார். காதல் கதையை மையமாக வைத்து 80-களில் உள்ள கால கட்டத்திற்கு ஏற்றார்போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இப்படம் உருவாகியிருந்தது. இதில் ஜெய்க்கு ஜோடியாக சுவாதி நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. ஜேம்ஸ் வசந்தன் இசையில் உருவான ‘‘கண்கள் இரண்டால்’’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்தது. தற்போது இதே கூட்டணியில் மற்றொரு படம் உருவாக இருக்கிறது. இப்படத்தை அறிமுக இயக்குனர் வசந்த ... Read More »

அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘என்னை அறிந்தால்’ படம் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் இசை ஜனவரி 1ம் தேதி இரவு 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது அதே தினத்தில் தற்போது டிரெய்லரும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் கூறுகையில் , சமீபத்தில் வெளியான ‘என்னை அறிந்தால் ‘ திரைப்படத்தின் அட்டகாசமான டீஸர் உலகெங்கும் பரவியதோடு, குறைந்த காலக்கட்டத்தில் அதிகம் பேர் பார்த்த வரலாற்றையும் உண்டாக்கியுள்ளது. ... Read More »

ரஜினி , ஜெயலலிதாவை காட்டிலும் பெரிய மனிதர் ஷங்கர்: ராம் கோபால் வர்மா

ஷங்கரின் ‘ஐ’ டிரெய்லரை பார்த்த பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த டிரெய்லரை பார்த்த பிரபல தெலுங்கு இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் விடாது மழையாக பாராட்டி வருகிறார். ’ஐ’ படத்தின் டிரெய்லைரை பார்த்த பிறகு வெளி ஒரு மனிதனாக ஷங்கர் , ரஜினி மற்றும் ஜெயலலிதாவை விட தமிழ் நாட்டில் பெரிய ஆள் என உணர்கிறேன் என ட்வீட் செய்துள்ளார். ஒருவேளை இந்திய படங்கள் ஹாலிவுட்டின் பார்வைக்கு செல்கிறது என்றால் அதற்கு ஷங்கரின் ‘ஐ’ படம் ... Read More »

மீண்டும் ‘மருதநாயகம்’ படத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்.

1997ம் ஆண்டு நிதிப் பிரச்சினை காரணமாக கைவிடப்பட்ட ‘மருதநாயகம்’ படம் மீண்டும் தொடங்கவிருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 1997-ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து, தயாரிக்க இருப்பதாக தொடங்கப்பட்ட படம் ‘மருதநாயகம்’. அவரே இயக்குநர் பொறுப்பையும் ஏற்று இருந்தார். இப்படத்தின் தொடக்க விழாவில் இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத் பங்கேற்றார். மிகப் பிரம்மாண்டமான முன்னோட்டக் காட்சிகள், தொடக்கவிழா என அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய படம் ‘மருதநாயகம்’ நிதி நெருக்கடி காரணமக ‘மருதநாயகம்’ படம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கமல் அளித்த பல பேட்டிகளில் ‘மருதநாயகம்’ பற்றிய கேள்விக்கு ... Read More »

இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் இயற்கை எய்தினார்!

பாலசந்தரின் அதிகளவான படங்களை விரும்பிப் பார்த்ததற்கான காரணம் தனிமனித பிரச்சினைகளையும் சமூகச்சிக்கல்களையும் தனது படைப்புகளில் அதிகமாகத் தொட்டிருப்பார். அவற்றிற்கான முடிவுகளை தானே கொடுப்பதைவிட மக்களையே தீர்மானிக்க விட்டுவிடுவார். உண்மையில் படைப்பாளியொருவன் சமூகத்தில் புரையோடிப்போயிருக்கின்ற பிரச்சினையொன்றைத் தொடுகின்றபோது மிதிவெடி புதைத்த நிலத்தில் கால்பதித்துச்செல்வதைப்போல் மிகுந்த அவதானமெடுக்கவிளைகின்றான். எந்தவொரு சமூகச்சிக்கலையும் தள்ளிநின்று வேடிக்கைபார்பவன் சிறந்த படைப்பாளியாக முடியாது. அதேநேரம் அச் சிக்கலினைத் தொடுகின்றபோது அதனோடு தானும் அடிபட்டவனாகின்றான். ஆனால் எந்தவொரு பிரச்சினைக்குமான தீர்வினை படைப்பாளியால் கொடுக்கமுடியாது, கொடுக்கவும்கூடாது. அது அவனது கடமையுமல்ல. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ... Read More »

Scroll To Top