Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / சினிமா / இந்திய சினிமா (page 4)

பதிவு வகை: இந்திய சினிமா

Feed Subscription

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது

சிங்கம் 3 படத்திற்கு பின்பு சூர்யா நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். விக்னேஷ் சிவன் இயக்கி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார். அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் இப்படத்தின் டீசர் இன்னும் வெளியாகவில்லை. இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர். 1980 காலகட்டத்தில் நடப்பதுபோல் இப்படம் அமைந்துள்ளது.   Read More »

கோல்டன் டிக்கெட் யாருக்கு? இறுதி சுற்றில் நேரடியாக நுழைந்தது யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடத்தப்பட்ட போட்டிகளில் அதிக புள்ளிகள் பெறுபவருக்கு கோல்டன் டிக்கெட் கொடுக்கப்படும் எனவும், அவர் இறுதி போட்டியில் நேரடியாக நுழைந்துவிடலாம் என கூறப்பட்டது. கோல்டன் டிக்கெட் யாருக்கு கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் அது கவிஞர் சினேகனுக்கு கிடைத்துள்ளது. அவர் 100 நாட்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. அவரை யாரும் இனி நாமினேட் செய்ய முடியாது. Read More »

ரஜினி பார்ப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது- BiggBoss நிகழ்ச்சியில் கமல்ஹாசன்

BiggBoss நிகழ்ச்சியில் கடந்த வாரம் வையாபுரி அவர்கள் வெளியேற்றப்பட்டார். பொதுவாக எலிமினேட் ஆகுபவர்கள் கமல்ஹாசனுடன் கலந்துரையாடிவிட்டு தான் செல்வார்கள். அப்படி வையாபுரியும் கமல்ஹாசனுடன் சிறுது நேரம் கலந்துரையாடினார். அப்போது வையாபுரி, அண்மையில் தன் குடும்பத்துடன் ரஜினி அவர்களை நேரில் சந்தித்தேன். அப்போது நான் உங்களுடன் நடித்த படங்களை பற்றி அவர் பேசினார் என்று கூறினார். உடனே கமல்ஹாசன் ரஜினி என்னுடைய படங்களை பார்த்தது தனக்கு பெருமையாக இருப்பதாக கூறியுள்ளார். Read More »

140 நாட்கள் கடந்த பாகுபலி-2வின் மொத்த வசூல் இது தான், அதிகாரப்பூர்வ தகவல்

பாகுபலி-2 வெளிவந்து 140 நாட்கள் ஆகிவிட்டது. இப்படத்தின் வெற்றியை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை, இந்தியாவே தலையில் தூக்கி கொண்டாடிய படம். இப்படத்தின் வசூல் எவ்வளவு என்பது தற்போது அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது. இதோ… ஆந்திரா/தெலுங்கானா- ரூ 327 கோடி தமிழ்நாடு- ரூ 152 கோடி கர்நாடகா- ரூ 129 கோடி கேரளா- ரூ 75 கோடி வட இந்தியா- ரூ 719 கோடி அமெரிக்கா- ரூ 139 கோடி மற்ற நாடுகள்- ரூ 151 கோடி Read More »

விஷாலின் துப்பறிவாளன் மூன்று நாள் வசூல் விவரம்

விஷால், மிஷ்கின் புதுக் கூட்டணியில் கடந்த வாரம் வெளியாகி இருந்த படம் துப்பறிவாளன். விஷால் இதுவரை நடிக்காத மாறுபட்ட கதைக்களத்தில் நடிக்க அசல் இயக்குனர் மிஷ்கின் ஸ்டைலில் படம் தயாராகி இருந்தது. படத்திற்கு விமர்சகர்கள் அமோக விமர்சனங்களை கொடுத்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு மூன்று நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. முதல் நாள்- ரூ. 2.40 கோடி இரண்டாம் நாள்- ரூ. 3 கோடி மூன்றாம் நாள்: ரூ 4 கோடி விரைவில் படம் ரூ. 10ல் இருந்து 15 கோடியை எட்டும் ... Read More »

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது யார் தெரியுமா? வெளியான புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேற்றப்படுவார். அந்த வகையில் இந்த வார நிகழ்ச்சியில் நாமினேட் ஆன 4 பேரில் ஹரிஷ் காப்பாற்றப்பட்டார் என உலகநாயகன் அறிவித்து விட்டார். மற்ற மூவரில் யார் வெளியேறுவார்கள் என நாளை கூறுவதாக இருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே வையாபுரி தான் வெளியேறினார் என்ற தகவல் புகைப்படம் மூலம் கசிந்துள்ளது. இவர் தன்னுடைய வீட்டில் நுழையும் புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. Read More »

பல நிகழ்ச்சிகள் செட் போட்டு எடுக்கப்பட்ட பிரபல ஸ்டூடியோவில் தீ விபத்து

மும்பையில் பிரபலமான ஸ்டூடியோக்களில் ஒன்று RK ஸ்டூடியோஸ். இதில் நேற்று (சனிக்கிழமை) யாரும் எதிர்ப்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் யாரும் அப்போது ஸ்டூடியோவில் இல்லை என்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. தற்போது அந்த ஸ்டூடியோவில் ஒரு நடன நிகழ்ச்சி செட் போட்டு எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. Read More »

மெர்சல் தற்போதைய நிலை என்ன ? ஒரு அப்டேட்

விஜய் அட்லீ கூட்டணியில் மீண்டும் உருவாகி வரும் திரைப்படம் மெர்சல். இசை வெளியீட்டு விழா, பாடல்கள் என ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிவிட்டது. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நேற்று சென்னை துரைப்பாக்கம் ஐடி கம்பெனிக்களில் ஆரம்பிக்கப்பட்டது. நேற்று இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் விஜய் ஒரு பக்கம் டப்பிங் பேசுவதை முடித்துவிட்டாராம். மற்றொரு பக்கம் இப்படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தன் இசைக்குழுவுடன் சேர்ந்து பின்னணி இசைக்கான வேலைகளை செய்து வருகிறார். விரைவில் எல்லாம் முடியும் தருணத்தை நெருங்கும் வேளையில் ... Read More »

ஷங்கரின் அடுத்தப்படத்தின் ஹீரோ அஜித் இல்லை, இவர் தான்?

ஷங்கர் படத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் வெயிட்டிங். அப்படியிருக்க இவர் தற்போது 2.0 படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளார். இப்படம் முடிந்து அடுத்து அஜித் நடிக்கும் படத்தை இயக்குவார் என கூறப்பட்டது, ஆனால், அது வெறும் வதந்தி தான் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஷங்கரும், கமல்ஹாசனும் நீண்ட நாட்களாக இந்தியனுக்கு பிறகு ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நினைத்து வருகின்றார்களாம். தற்போது அதற்கான நேரம் வந்துள்ளது, ஷங்கர் கமலை வைத்து இந்தியன் 2 எடுக்கலாம் என்று ஒரு ... Read More »

Scroll To Top