Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / சினிமா / இந்திய சினிமா (page 5)

பதிவு வகை: இந்திய சினிமா

Feed Subscription

தளபதி விஜய் போல நீங்களும் வருவீங்க! தெலுங்கு பட விழாவில் பேசிய SJ சூர்யா

விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் நடித்துள்ளார் SJ சூர்யா. அவர் முருகதாஸின் ஸ்பைடர் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக விழா நேற்று ஆந்திராவில் நடைபெற்றது. அதில் பேசிய SJ சூர்யா, “மகேஷ் பாபு போல தமிழில் விஜய் உள்ளார். அவர் பல ஆக்ஷன் படங்களில் நடித்தவர். அவர் முருகதாஸுடன் துப்பாக்கி படத்தில் நடித்தபிறகு ஒரு புதிய லெவலுக்கு சென்றுவிட்டார். அதுபோல் மகேஷ் பாபு ஸ்பைடர் படத்திற்கு பிறகு புதிய லெவலுக்கு போவார்” என கூறினார். Read More »

துப்பறிவாளன் இரண்டாம் பாகம் வருமா? விஷால் அறிவிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்ததால் இரண்டாம் பாகம் வருமா என தொடர்ந்து ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில் விஷால் நேற்று அது பற்றி புதிய அறிவிப்பு ஒன்றை செய்துள்ளார். மலேசியாவில் நடந்த துப்பறிவாளன் விழாவில் பேசிய விஷால் துப்பறிவாளன் 2 நிச்சயம் வரும், படப்பிடிப்பு விரைவில் துவங்கும் எனவும் கூறியுள்ளார். Read More »

தோழிக்கு கிட்னியை கொடுத்த பிரபல நடிகை! இதுதான் உண்மையான நட்பு?

உலகப்புகழ் பெற்ற பாடகர்களில் ஒருவர் செலினா கோம்ஸ். இவரது பாடல்கள் கோடிக்கணக்கில் ஹிட்ஸ் அள்ளுவது ஒருபுறம் இருக்க, சமூக வலைத்தளங்களில் செலினா கோம்ஸ் வெளியிடும் புகைப்படங்கள் குறைந்தபட்சம் 5 முதல் 10 மில்லியன் லைக்குகள் பெற்றுவிடும். இவர் எந்த அளவுக்கு பிரபலம் என்பதை இதன் மூலமே கணிக்கமுடியும். இந்நிலையில் அவர் சமீபத்தில் கிட்னி மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார். அவரது நெருங்கிய தோழியான நடிகை Francia Raisaதான் இவருக்கு சிறுநீரகத்தை அளித்துள்ளார். இதுதான் உன்மையான நட்பு என சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டு குவிந்து ... Read More »

ஓவியா வேண்டாம், தமன்னாவுடன் டூயட் பாடிய ஆரவ்

நடிகை ஓவி யாவின் காதலை ஆரவ் நிராகரித்தது தான் அவர் வெளியேறுவதற்கு காரணமாக அமைந்தது. தனக்கு ரசிகர்களின் பலமான ஆதரவு இருந்தும், ஓவியா வெளியேறினார். இந்நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஜோடியாக பிரிந்து, இருவருக்கும் நடுவில் உள்ள கயிறை தனியாக பிரிக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. அது முடியும் வரை அவர்கள் அனைத்து பணிகளையும் ஒன்றாகவே செய்யவேண்டும் என கூறப்பட்டது. ஆரவ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் ஜோடியாக பிரிந்தனர். கொஞ்ச நேரம் கழித்து ஹரிஷ் பாத்ரூம் சென்றபோது ஆரவ் வெளியில் ... Read More »

பிக் பாஸ் 2ல் நிச்சயம் நான் இருப்பேன்! பிரபல நடிகை அறிவிப்பு

பிரபல நடிகை ஒருவர் தமிழ் பிக் பாஸ் ஷோவின் இரண்டாவது சீசனில் கலந்துகொள்வேன் என அறிவித்துள்ளார். துருவங்கள் பதினாறு படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் தான் இப்படி கூறியுள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர் “எனக்கு பிக் பாஸ் ஷோவில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது, ஆனால் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் நிச்சயம் இரண்டாவது சீசனில் கலந்துகொள்வேன்” என யாஷிகா அவர் கூறியுள்ளார்.   Read More »

உறவுகளை இழந்துவிட்டேன்! உண்மையை சொல்லி கலங்கும் அறந்தாங்கி நிஷா

கலக்கப்போவது யாரு காமெடி ஷோ மூலம் பலரையும் சிரிக்கவைத்தவர் அறந்தாங்கி நிஷா. என்னை மாதிரி ஒரு அழகு என அடிக்கடி சொல்லி சிரிப்பு மூட்டுவார். தன் டிவி பயணம் குறித்து பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயனுடன் பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ரொம்ப சந்தோசம். இந்த மாதம் 21 ம் தேதி வரை கால்ஷீட் இருக்கிறது. என்னோட ஷோ பண்ணும் பழனியும் நானும் ஒரு படம் பண்ணிருக்கோம். என்னோட கணவருக்கு ஹீரோ ஆசை வந்திருச்சு. அவருக்காகவும் ஒரு ஷார்ட் ஃபிலிம் பண்ணிருக்கேன். ... Read More »

இது சரியில்லை! சினேகனுக்கு ஆதரவாக பேசிய முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்

சினேகன், சுஜா இடையே நடந்த போட்டியில் சினேகன் ஏமாற்றினார் என கூறி அவர் தோற்றதாக அறிவிக்கப்பட்டது. காரின் ஓரத்தில் அவர் கால் உரசியதற்காக இப்படி செய்தது சரியில்லை என நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார். சுஜா, சினேகன் ஆகிய இருவருக்கும் புள்ளிகளை பகிர்ந்தளித்திருக்கவேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார். நான் இந்த வாரத்தோடு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறேன் என சினேகன் கூறியது குறிப்பிடத்தக்கது. Read More »

Scroll To Top