Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / சினிமா (page 362)

பதிவு வகை: சினிமா

Feed Subscription

படப்பிடிப்பில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார் ஹன்சிகா.

தென்னிந்திய சினிமாவின் நமபர் 1 ஹீரோயின் என பெயர் எடுத்து விட்டார் ஹன்சிகா. இவர் கையில் தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ஒரு படப்பிடிப்பில் திடிரென்று மயக்கம் போட்டு விழுந்துள்ளார். என்ன என்று விசாரித்தால், உடம்பை குறைப்பதற்காக இவர் எடுத்த சிகிச்சை தான் காரணமாம். பின் படப்பிடிப்பில் இருந்தவர்கள் உடனே மருத்துவமனைக்கு ஹன்சிகாவை அனுப்பி வைத்துள்ளனர். பல கதாநாயகிகள் உடல் எடையை குறைக்க இப்படி செய்வது குறிப்பிடத்தக்கது Read More »

ஜிகர்தண்டா இயக்குனர் மீது மான நஷ்ட வழக்கு போட்டுள்ள பிரபல தயாரிப்பாளர்.

ஜிகர்தண்டா என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். சில மாதங்கள் முன்பு ஜிகர்தண்டாவின் தெலுங்கு மற்றும் இந்தி உரிமையை தனக்கு தெரியாமல் விற்பதாக ‘Fivestar Films’ கதிரேசன் மீது வழக்கு போட்டார் கார்த்திக் சுப்பராஜ். இந்நிலையில் இன்று ‘Fivestar Films’ சார்பாக கலைச்செல்வி கொடுத்த அறிக்கையில் ஜிகர்தண்டா’ படம் பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது. வேண்டுமென்றே, இயக்குனர் படப்பிடிப்பினை தாமதப்படுத்திய வகையில் ஏறத்தாழ ரூ.1 கோடியே 36 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. மேலும், கார்த்திக் சுப்புராஜ் எங்கள் நிறுவனத்தின் ... Read More »

விஜய்யை தங்கமான மனிதர் என கூறுகிறார் பிரபல நடிகர்.

இளைய தளபதி விஜய் எல்லோரிடத்திலும் அன்பாக பழக கூடியவர். இவர் நடிப்பில் விரைவில் புலி படம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சுதீப் நடித்துள்ளார். அவர் சமீபத்தில் விஜய் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இதில் ‘நான் பார்த்த மனிதர்களில் விஜய் தான் மிகவும் எளிமையானவர், மிகவும் நல்ல மனிதர் அவர்’ என கூறியுள்ளார். Read More »

கமலின் பாவநாசம் திரைப்படம் ஓர் ஈழத்துப்பார்வையில்!

பாபநாசம் பெயரைப்போலவே படமும் அருமை. படத்தின் வெற்றிக்கு வாய்ப்பளித்த விடயங்கள் ஏராளம். 1) கௌதமியின் இயல்பான நடிப்பு 2) கமலின் யதார்த்த பாத்திரபுனைவு 3) படத்தின் காட்சியமைப்பு 4) மொழி நடை 5) காமெரா, இசை, ஒளிப்பதிவு, திரைக்கதை…. விறுவிறுப்பான அதேநேரம் அழகான திரைக்கதையுடன் அமைந்த அற்புதமானதொரு கலைப்படைப்பு. ஒவ்வொரு பாத்திரங்களின் கண்கள் பேசும் மொழியையும் ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளது காமெரா. எப்படி ஒரு நடுத்தர குடும்பம் அன்பாலும், அழகாலும் பின்னப்பட்டிருக்கும் என்பதை வாழ்ந்துகாட்டியிருக்கிறார்கள். படம் பார்க்கும் போதே நாமும் அவற்றோடு வாழ்ந்து விடுகிறோம். ... Read More »

கிராமிய பாடலுக்கான சிறந்த விருது பெற்ற படைப்பு!

நம்மவர்களது படைப்புக்களில் 2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த கிராமியப் பாடலுக்கான இலங்கை தேசிய விருது கிடைத்த பாடல். பாடலைப் பாா்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும். இசை : கந்தப்பு ஜெயந்தன் பாடல் வரிகள் : கவி.அகிலன் பாடியவா்கள் : ஜெயப்பிரதா, ஜெயரூபன் இயக்கம் : எஸ்.வினோத் ஒளிப்பதிவு : பிரியந்தன். Read More »

“விஜய்-60“ படத்தை இயக்கப்போவது யார்? வெளிவந்த தகவல்.

‘புலி’ படப்பிடிப்பை முடித்த கையோடு, இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார் இளையதளபதி விஜய். அடுத்த மாத இறுதியில் ‘புலி’ படம் வெளியாகவுள்ள நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை இயக்கபோவது யார் என்ற கேள்வியால் ரசிகர்களிடையே ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்போது வெளியாகியுள்ள தகவல்படி, எஸ்.ஜே.சூர்யா தான் விஜய்யின் 60வது படத்தை இயக்குவாராம். புலி படப்பிடிப்பு நடக்கும் போதே விஜய்யிடம் ஒரு வரி கதையை கூறி, அவரின் ஒப்புதலை பெற்றுவிட்டாராம். இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் ... Read More »

பாகுபலி மிகப் பெரிய நஷ்டத்தை எதிர்நோக்குகிறது.

பாகுபலி நேற்று உலகம் முழுவதும் வெளியான பாகுபலி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூல் சாதனை புரிந்து வருகிறது. பிரேமம் படத்தின் சென்சார் காபி திருடப்பட்டு இணையதளங்கள் மற்றும் DVDக்களாக வெளியான பிரச்சனை மலையாள சினிமா உலகில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. படம் வெளியாகி ஒன்றிரண்டு நாட்களிலேயே திருட்டு DVD வெளியாகிவிடுவதால், தங்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்படுவதாகவும், இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் கேரளா முழுவதும் உள்ள திரையரங்குகள் நேற்று முதல் மூடப்பட்டுள்ளன. 400க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.இதன் காரணமாக, நேற்று ... Read More »

ரஜினி ஆகஸ்டில் ஆட்டத்தைத் தொடங்குகின்றார்.

ரஜினி நடிப்பில் சென்ற வருடம் வெளியான ‘லிங்கா’ படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. அதனால் அடுத்த படத்தை தேர்வு செய்வதில் முகுந்த அக்கறை காட்டி வந்த அவர், கடைசியாக மெட்ராஸ், அட்டக்கத்தி போன்ற படங்களை இயக்கிய ரஞ்சித்தின் கதை பிடிக்கவே, உடனே ஒப்புக்கொண்டு 60 நாள் கால்ஷீட் கொடுத்துவிட்டார். முதல் கட்ட படப்பிடிப்பை மலேசியாவில் நடத்த திட்டமிட்டுள்ளனர். சற்று முன் வந்த தகவல் படி படப்பிடிப்பு ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கும் என தெரிகிறது. படப்பிடிப்பை திட்டமிட்டு முடிப்பதற்காக, இப்போதே ரஞ்சித் மற்ற ... Read More »

விஜய்யை நான் கலாய்த்தேனா? விளக்கமளிக்கும் ஆர்யா.

ஆர்யா, சந்தானம் நடித்த ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தின் கட்டிங் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்த டீசரில் சந்தானம் “நீ போதையானதுக்கு அப்பறம் குடிக்கிற ஒவ்வொரு பீரும் இன்னொருத்தனுக்கு சொந்தமானது” என கூறும் வசனம், கத்தி படத்தில் விஜய் பேசும் வசனத்தை கேலி செய்வது போல உள்ளதாக ரசிகர்கள் கூறிவந்தனர். “நம்ம பசி தீர்ந்ததுக்கப்புறம் சாப்பிடற அடுத்த இட்லி இன்னொருத்தருடையது” என விஜய், கம்யூனிசம் பற்றி ஒரு வரியில் பேசியிருப்பார். இது பற்றி ட்விட்டர் தளத்தில் விளக்கமளித்துள்ள ஆர்யா, ... Read More »

முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் என எல்லோரையும் ஓரங்கட்டியது பாகுபலி வசூல்.

பாகுபலி படம் இன்று இந்தியாவில் ரிலிஸானாலும், நேற்றே வெளிநாடுகளில் ஸ்பெஷல் ஷோ (Premier Show) திரையிடப்பட்டது. சமீபத்தில் வந்த தகவலின் படி அமெரிக்காவில் இப்படம் வசூலில் மாபெரும் புரட்சி செய்துள்ளதாம். இதுநாள் வரை தெலுங்கு படங்களில் முதல் நாள் வசூலில் மகேஷ் பாபு படம் தான் அரை மில்லியன் டாலர் வசூல் செய்திருந்ததாம். தற்போது இந்த சாதனையை பாகுபலி முறியடித்து 1 மில்லியன் டாலர் வசூலித்துள்ளதாக கூறப்படுகின்றது. அப்படி பார்த்தால் தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய், பவன் கல்யான், மகேஷ்பாபு ... Read More »

Scroll To Top