Saturday , August 19 2017
விஷேட செய்திகள்
முகப்பு / சினிமா (page 5)

பதிவு வகை: சினிமா

Feed Subscription

ஹாலிவுட்டில் விமர்சனம் செய்யப்பட்ட தனுஷ் படம், VIP2 இல்லை- எத்ந படம் தெரியுமா?

தனுஷ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார். அவர் சிறந்த நடிகர் என்று பெயர் வாங்கிக் கொடுத்த படம் புதுப்பேட்டை. அண்மையில் பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுடன் தனுஷ் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் புதுப்பேட்டை 2 வருமா என்று கேட்டுள்ளார். அதற்கு தனுஷ், எனக்கு மிகவும் பிடித்த படம் புதுப்பேட்டை, என்னை ஒரு சிறந்த நடிகராக காட்டிய படம். ஹாலிவுட்டில் விமர்சனம் செய்யப்பட்ட என்னுடைய முதல் படம். அதோடு இரண்டாம் பாகத்திற்கு கதை எழுதுவது சாதாரண விஷயம் இல்லை என்று கூறியுள்ளார். Read More »

காதலருடன் ஸ்ருதிஹாசன் (கசிந்த படங்கள்)

நடிகை ஸ்ருதி ஹாசன், தற்போது இந்தியா வந்துள்ள தன் காதலர் Michael Corsaleவுடன் விடுமுறையை கழித்துவருவதாக சில நாட்கள் முன்பு செய்தி வெளியானது. இந்நிலையில் Michael Corsaleவை வழியனுப்ப ஸ்ருதிஹாசன் ஏர்போர்ட் வந்துள்ளார். இருவரையும் அங்கிருந்த ரிப்போர்ட்டர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். அதை சற்றும்பொருட்படுத்தாமல் இருவரும் சென்றுவிட்டனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.   Read More »

அஞ்சலி அரசியலில்…

நடிகை அஞ்சலி தற்போது தமிழ் படங்களில் மிகவும் பிசியாக இருக்கிறார். இவர் நடிகை ஜெய்யை காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. படங்களுக்காக தன் திருமணத்தை தள்ளி வைத்து வரும் இவர் விரைவில் திருமணம் செய்யவுள்ளார். ஏற்கனவே சினிமா நடிகைகள் பலர் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அஞ்சலி அரசியல் பற்றி தன் மனம் திறந்து பேசியுள்ளார். எனக்கு அரசியல் ரொம்ப பிடிக்கும். அதில் நான் எப்போதும் தனி கவனம் செலுத்துவேன் என கூறியுள்ளார். Read More »

ஓவியா தான் என் மருமகள் ! சொன்னது யார் தெரியுமா?

ஓவியா அனைவரும் அறிந்த ஒரு முகம். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரின் மனதையும் தொட்டவர். ஒட்டுமொத்த ஆதரவுகளும் இவருக்கு வந்துவிட்டது. இவரின் இயல்பான குணமாகவே பலரும் பார்க்கிறார்கள். இதில் கலந்துகொண்ட சகபோட்டியாளரான ஆரவ் மீது ஓவியாவுக்கு காதல் மலர்ந்தது. காதலை தெரிவித்தும் ஆரவ் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இருவரும் ஆரம்பத்திலிருந்தே நல்ல நண்பர்கள். பிக்பாஸை விட்டு வெளியே வந்தாலும் இன்னும் ஆரவை நான் காதலிக்கிறேன் என ஓவியா கூறிவருகிறாராம். இவ்வளவு நடந்தும் ஆரவ்வின் பெற்றோருக்கு தெரியாமல் இருக்குமா என்ன. அவரின் அம்மா ஓவியாவின் காதலுக்கு சம்மதம் ... Read More »

இதனால் தான் நான் கெட்ட வார்த்தை பேசுகிறேன்! காயத்ரியின் விளக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள டான்ஸ் மாஸ்டர் காயத்ரி அடிக்கடி கெட்ட வார்த்தை பேசியதால் அவருக்கு எதிராக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கமல் கூட அவருக்கு பலமுறை அறிவுரை கூறியுள்ளார். இந்நிலையில் காயத்ரி தனக்கு ஏன் கெட்டவர்த்தை பேசும் பழக்கம் வந்தது என்று இன்று விளக்கியுள்ளார். “நான் ஆணாதிக்கம் அதிகமுள்ள துறையில் பணியாற்றுகிறேன். அதற்காகவே ஒரு வேஷம் போடவேண்டியதாகி விட்டது. கெட்ட வார்த்தை பேச பழகிக்கொண்டேன். மனசில் பட்டத்தை கேட்டுவிடுவேன் ஆனால் எந்த கெட்ட வார்த்தையும் மனசில் இருந்து வராது” என தெரிவித்துள்ளார். Read More »

30 நிமிடத்தில் மெர்சல் பாடல் டீஸர் செய்த சாதனை

விஜய்யின் ஆளப்போறன் தமிழன் பாடல் மாலை 5 மணிக்கு வெளிவரவுள்ள நிலையில், அதன் டீஸர் இன்று நள்ளிரவு வெளிவந்தது. வெளிவந்த சில நிமிடங்களிலேயே ஒரு லட்சம் பார்வைகளை பெற்றது. அரை மணி நேரத்தில் 50 ஆயிரம் லைக்களும், கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் வியூஸ் பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் அனைத்து பாடல்களும் ஆகஸ்ட் 20ம் தேதி சென்னையில் ஒரு பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்படவுள்ளது. Read More »

‘ஆளுமா டோலுமா’ பாடலை வைத்து பாடம் சொல்லித்தரும் ஆசிரியை! வைரல் வீடியோ

தல அஜித்தின் வேதாளம் படத்தில் வரும் ‘ஆளுமா டோலுமா’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலம். அனிருத் இசையமைத்த இந்த பாடல் குழந்தைகள் மத்தியிலும் பிரபலமாக உள்ள நிலையில் அதை பயன்படுத்தி மாணவர்களுக்கு சுலபமாக கணிதம் சொல்லித்தருகிறார் ஒரு ஆசிரியர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. Read More »

பிரமாண்ட தொகைக்கு விவேகத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி

விவேகம் படம் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் வியாபாரம் மட்டுமே ரூ 100 கோடி வரை ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை சன் டிவி கைப்பற்றியுள்ளது, இதுவரை வந்த அஜித் படங்களிலேயே அதிக தொகைக்கு சாட்டிலைட் ரைட்ஸ் போனது விவேகம் தானாம். இதோடு சன் டிவி, சூர்யாவின் சிங்கம்-3, தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களையும் கைப்பற்றியுள்ளது. Read More »

ஓவியா வெளியேறிய பிறகு இரண்டாக பிரிந்த பிக்பாஸ் வீடு

40 நாட்களுக்கு மேல் பரபரப்பாக சென்றுகொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஓவியா வெளியேறியபிறகு விறுவிறுப்பு முற்றிலும் குறைந்துவிட்டது. பலருக்கும் இதில் பல முரண்பட்ட கருத்துக்கள் நிலவி வருகிறது. இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீடே இரண்டாக பிரிந்துவிட்டது. இரண்டு அணிகளாக பிரிந்து டாஸ்க் செய்யவேண்டும், மேலும் தனித்தனியாக சமைத்து சாப்பிட வேண்டும் எனவும் பிக்பாஸ் உத்தரவிட்டுவிட்டார். இன்று துணிதுவைக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில், இதே போல இன்னும் சில தினங்களுக்கும் பிக்பாஸ் வீடு இரண்டாக தான் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. Read More »

Scroll To Top