Saturday , April 29 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள்

பதிவு வகை: செய்திகள்

Feed Subscription

கனடாவின் தற்போதைய பிரபல்யமற்ற கிரேன் பெண் யார்?

22-வயதுடைய பெண் டவுன்ரவுன் ரொறொன்ரோவின் மையப்பகுதியில் நடு ராத்திரி வேளையில் கட்டுமான பணி நடந்த இடமொன்றில் கிரேன் ஒன்றில் அதிஉயரத்திற்கு சென்றார் என பொலிசாரால் குற்றம் சாட்டப்பட்டார். இவர் ஒரு “மிகவும் சாகசமான பெண்” என இவரது நெருங்கிய சினேகிதி ஒருவர் தெரிவித்தார். இச்சம்பவத்தின் பின்னர் மரிசா லசோ என்ற இப்பெண் ‘கிரேன் பெண்’ என பெயரிடப்பட்டார். வியாழக்கிழமை நீதி மன்றத்தில் ஆஜரான இவர் மீது குறும்புத்தனத்திற்கான ஆறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. கூரைகளின் மேல் மற்றும் கட்டுமான பணிநடக்கும் பகுதிகளில் இருந்து விலகி இருக்குமாறு ... Read More »

கன்சர்வேடிவ் கட்சியின் தலைமை பதவிக்கான போட்டியிலிருந்து கெவின் ஓ’லீரி விலகல்

கனேடிய கன்சர்வேடிவ் கட்சியின் தலைமை பதவிக்கான போட்டியிலிருந்து பிரபல தொழிலதிபரான கெவின் ஓ’லீரி விலகியுள்ளார். கனடாவின் டொனல் ட்ரம்ப்பாக வர்ணிக்கப்பட்ட ஓ ‘லீரி, தனது ஆதரவினை சக வேட்பாளரான மெக்ஸிம் பெர்னியருக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமை பதவிக்கான போட்டியில் வெற்றிபெற முடியும் என நம்பிக்கை கொண்டுள்ள போதிலும் அடுத்த தேர்தலில் பிரதமர் ஜஸ்ரின் ரூடோவை தன்னால் தோற்கடிக்க முடியாது என நம்பும் நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Read More »

கனடா அகதிகளுக்கு விரைவில் தீர்வு

அகதி கோரிக்கைகளை பரிசீலிக்க எடுக்கும் நீண்டகால அவகாசம், 1 வருடங்களுக்கும் குறைவான காலமாக திருத்தியமைக்கப்படுமென கனேடிய குடிவரவு அமைச்சர் அஹமட் ஹூஸென் தெரிவித்துள்ளார். எனினும், இந்த தாமதம் கடந்த பழமைவாத அரசின் காலத்திலிருந்தே தொடருவாதாக சுட்டிக்காட்டிய அவர், இதுதொடர்பான பிரச்சினைக்கு எதிர்வரும் 2019ஆம் ஆண்டுக்குள் தீர்வு எட்டப்படுமெனவும் குறிப்பிட்டார். கனடாவிற்குள் அகதிகளை தனியார் அனுசரணை மூலம் அழைத்துவரும் நிறுவனங்களின் அகதி கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட எடுக்கும் நீண்ட கால அவகாசம், கவலையளிப்பதாக அண்மைய கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவிக்கின்றது இந்நிலையில், இந்த விடயத்தினை கருத்திற்கொண்டே கனேடிய ... Read More »

தீயினால் வீட்டை இழந்த சோகம் லாட்டரியால் நீங்கியது!

வோர்ட் மக்முறே, அல்பேர்ட்டா-கடந்த வருடம் மே மற்றும் டிசம்பர் மாதங்களிற்கிடைப்பட்ட பகுதியில கிறிஸ் விலிட் என்பவரிற்கு வாழ்க்கையை புரட்டி போடக்கூடிய சம்பவங்கள் இரண்டு நடந்துள்ளன. தீயினால் வீடு எரிந்து சாம்பலாகியது. அவர் லாட்டரியில் வெற்றி பெற்றது. வோர்ட மக்முரேயை காட்டு தீ பரவ ஆரம்பித்த சமயம் இவர் அவசர அவசரமாக தனது மகளை பாடசாலையில் இருந்து அழைத்து வந்து வீட்டில் இருந்த அவரது உடைமைகளில் சில வற்றை எடுத்து கொண்ட சம்பவத்தை நினைத்து பார்க்கின்றார். “கொடிய மிருகம்” என புனை பெயர் கொண்ட  இந்த ... Read More »

இந்தியாவிலிருந்து கனடாவிற்கு நாடு கடத்தப்படும் இலங்கையர்கள்

கனேடிய குடியுரிமை பெற்ற மூன்று இலங்கையர்கள் இன்றைய தினம் நாடு கடத்தப்படவுள்ளனர் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த இலங்கையர்கள் இன்றைய தினம் கனடாவிற்கு நாடு கடத்தப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து தொழில் அதிபர்களின் கடன் அட்டைகளை போன்று போலிகளை தயாரித்து கடன் அட்டை மோசடியில் குறித்த இலங்கையர்கள் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே இலங்கையர்கள் கைது செய்யப்பட்டு இந்திய சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது குறித்த இலங்கையர்களின் ... Read More »

ஏற்றுமதி இல்லாத அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது

ஏற்றுமதி இல்லாமல் அபிவிருத்தி ஒன்றை இந்த நாட்டில் எதிர்பார்க்க முடியாது என்று பிரதி வௌிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார். ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை இலங்கைக்கு மீள வழங்குவதற்கு எதிரான யோசனை மீது ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நேற்று நடந்த வாக்கெடுப்பு மூலம் மேலதிக 317வாக்குகளால் அந்த யோசனை தோற்கடிக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பு இடம்பெற்ற போது பிரதி வௌிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவொன்று அங்கு சென்றிருந்தது. இது தொடர்பாக இன்று வௌிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த பிரதி வௌிவிவகார ... Read More »

நாட்டில் பட்டதாரிகளின் பற்றாக்குறை

தற்போது நாட்டில் தொழில் தேவைகளுக்கு ஏற்ற பட்டதாரிகளின் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சர மஹிந்த அமரவீர கூறியுள்ளார். இதன்காரணமாக சில அரச நிறுவனங்களில் தற்போதும் கூட வெற்றிடங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். Read More »

எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்

எதிர்காலத்தில் ஏற்படும் நீர் பற்றாக்குறை காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார். அந்த சவாலுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கான தீர்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படாத போதிலும் நீரை பாதுகாத்துக் கொள்வதற்கான சரியான முறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குருணாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். Read More »

இரு மாதங்களாக தொடரும் வடக்கு மக்களின் போராட்டங்கள்

 கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் தமது குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும் அடிப்படை வசதிகள் நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன இதுவரை கிடைக்கவில்லை. எனவே கடந்த பல வருடங்களாக அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம். இனியும் வாழ முடியாது தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை வழங்குங்கள் எனக் கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (29) சனிக்கிழமையுடன் முப்பத்தொன்பதாவது நாளாக தொடர்கின்றது. அத்துடன் தமக்கான காணி உரிமம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என ... Read More »

வேப்பங்குச்சியில் பல்துலக்கும் கனடா நாட்டினர்…10 குச்சியின் விலை ரூ.700… அம்மாடியோவ்

நமது முன்னோர்கள் அவர்களது வாழ்நாளில் தங்களது ஊர் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட இயற்கையின் வரப்பிரசாதங்களை நமக்கு விட்டு சென்றிருக்கிறார்கள். கிராமத்தில் பெரும்பாலும் வீடுகள் மற்றும் தெருக்களில் வேப்பமரம் வளர்த்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பார்கள். இதில் என்ன இருக்கிறது எனன்று நீங்கள கேட்கலாம். வேப்பமரத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. அதன் இலை, பூ, என அனைத்துமே பயன்தரக் கூடியவை. கிராமத்தில் பெரும்பாலான வயதானவர்கள் வேப்பங்குச்சியால் தான் பல் துலக்குவார்கள். தற்போது ஊர்க்காட்டில் இலவசமாக கிடைத்து கொண்டிருந்த இந்த வேப்பங்குச்சிகளின் ... Read More »

Scroll To Top