Saturday , April 29 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / இந்தியா செய்திகள்

பதிவு வகை: இந்தியா செய்திகள்

Feed Subscription

பெருந்தொகை சிவப்பு சந்தனத்துடன் ஒருவர் கைது

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கொண்டு வரப்பட்ட பெருந்தொகை சிவப்பு சந்தனத்துடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடற்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, கல்பிடி பகுதியில் வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய, 511 கிலோகிரம் சிவப்பு சந்தனம் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட நபரை கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சின்னப்பாடு சுங்க உப தடுப்புக் காரியாலயத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். Read More »

தாயகம் திரும்பிய மீனவர்கள்

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 38 பேர் தமிழகத்தை அடைந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் தங்கச்சி மடம், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 38 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களது 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், மீனவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டனர். இந்த மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் டெல்லியில் சந்தித்து வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ... Read More »

அமெரிக்கா இதில் தலையிட வேண்டாம் – இந்தியா எதிர்ப்பு!

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான எல்லைப் பிரச்னை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்து வரும் சம்பவங்கள் பற்றி ஐ.நா சபை தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறது. இந்நிலையில், ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கடந்த 3-ம் தேதி அளித்த பேட்டியில், ‘இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டும்’ என்றார். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா முயற்சி மேற்கொள்ளுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறிய நிக்கி ஹாலே, “இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதட்டம் குறித்து அமெரிக்காவில் ... Read More »

மரணத்தின் போது சிலருக்கு வாழ்வளித்த ஈழ அகதி

தமிழகத்தில் விபத்தில் மூளைச் சாவு அடைந்த இலங்கை அகதியின் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உடலுறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன. ஹெலி காப்டர் மூலம் அவரது இதயத்தை சென்னை மருத்துவமனைக்கு மருத்துவர்கள் எடுத்துச் சென்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கஸ்தம்பாடியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் கிருபாகரன்(22). டிப்ளமோ படித்துள்ள அவர், புதுச்சேரியில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 29-ம் திகதி ஊருக்கு வந்த கிருபாகரன், தனது தம்பி விக்னேஷ்வரனுடன் இருசக்கர வாகனத்தில் ஆரணிக்குச் சென்றார். அடையாளம் என்ற கிராமத்தில் சென்றுகொண்டு இருந்தபோது, ... Read More »

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 10 மீனவர்கள் மற்றும் அங்கு பிடித்து வைக்கப்பட்டுள்ள 129 படகுகளை விடுவிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது, ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி தளத்தில் இருந்து மீன்பிடிக்கச்சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் 21ம் திகதி (நேற்று) கைது செய்து இலங்கை காங்கேசன்துறைக்கு கொண்டு சென்றுள்ளனர் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். ... Read More »

இலங்கை தண்டிக்கப்படுவதை உறுதி செய்க

இனப் படுகொலைக்கு காரணமான இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைய விசாரணையில் கடுமையாகத் தண்டிக்கப்படுவதை, இந்திய மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ´´இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பான நடவடிக்கைகள், போர்க் குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவை குறித்து சுதந்திரமானதும், நம்பகத்தன்மை வாய்ந்ததுமான சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்பதில் திமுக ஆரம்பம் முதல் உறுதியாக ... Read More »

முச்சக்கர வண்டியில் 11 பெண்கள் உட்பட 13 பேர் பலி

கூலி வேலைக்காக இரண்டு முச்சக்கர வண்டியில் சென்றப்பெண்கள் மீது அதிவேக நெடுஞ்சாலையினுடாக வந்த லொறி மோதியதால் சம்பவ இடத்திலேயே 11 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தின் மலக்கால்மோர் பகுதியிலுள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக பெண் கூலி தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு இரண்டு முச்சக்கர வண்டிகள் சென்றுள்ளன. அச்சமயம் கொள்கலனுடன் வந்த லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, எதிரில் வந்த முச்சக்கர வண்டிகள் மீது குடைசாய்ந்ததால், இரண்டு முச்சக்கர வண்டிகளும் ... Read More »

இந்திய மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூட்டை இலங்கைக்கடற்படை மேற்கொள்ளவில்லை: வெளிவிவகார அமைச்சு

இந்திய மீனவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மீனவர் உயிரிழந்திருப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவலை கொண்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை இடம்பெறும் எனவும் குறித்த சம்பவத்துடன் இலங்கைக் கடற்படை தொடர்புபட்டிருக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. . அத்துடன், இந்தியக் கடற்படையுடன் இணைந்து மேற்படி சம்பவத்தினை ஜீ.பி.எஸ். தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் எனவும், மீனவர்களின் பாதுகாப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அனைத்து சந்தர்ப்பங்களிலும் இந்திய மீனவர்களை மனிதாபிமானம் மிக்க முறையில் ... Read More »

அனைத்தும் பெண் விமான குழுவினருடன் உலக சாதனை படைத்த இந்தியா

எயர் இந்தியா அனைத்து பெண் விமான குழுவினருடன் பயணித்து உலக சாதனை படைத்துள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானம்  புது டெல்லியில் இருந்து பசுபிக் சமுத்திரத்தின் மேலாக பறந்து திங்கள் கிழமை சான் பிரான்சிஸ்கோவை சென்றடைந்தது. பின்னர் அத்லாந்திக் சமுத்திரத்தின் மேலாக திரும்பி வெள்ளிக்கிழமை புது டெல்லியை வந்தடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காக்பிட் முதல் கொண்டு அனைத்து விமான பணியாளர்கள் வரை விமானத்திலும்-சரிபார்த்தல் மற்றும் ஏனைய தரைப்படை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவு அனைத்திலும்-அனைவரும் பெண்கள் மட்டுமே. நாட்டின் அரசிற்கு சொந்தமான எயர் இந்தியா இந்த ... Read More »

13 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுப்பட்ட 13 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். வெற்றிலைக்கேணி சுண்டிக்குள கடற்பரப்பில் 9 மீனவர்களும், நெடுந்தீவு கடற்பரப்பில் 04 மீனவர்களும் அவர்களின் இரண்டு விசைப்படகுகளும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளன. குறித்த மீனவர்களை இன்றைய தினம் யாழ் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடற்படையினர் தெரிவிக்கின்றனர். இவர்கள் ஜகாதாப்பட்டினம், இராமேஸ்வரம், புதுக்கோட்டை ஆகிய பகுதியினை சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது. Read More »

Scroll To Top