Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / இந்தியா செய்திகள் (page 10)

பதிவு வகை: இந்தியா செய்திகள்

Feed Subscription

கள்ள நோட்டு வைத்திருப்பதால் மட்டும் ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது: மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு

கள்ள நோட்டுகள் வைத்திருப்பதால் மட்டும் ஒருவரை குற்றவாளி என்று கருதி விட முடியாது என்று கூறிய மும்பை ஐகோர்ட்டு, கீழ்கோர்ட்டால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டவரை விடுவித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது. மும்பையில் பஞ்சாப் நேசனல் வங்கியின் குர்லா கிளைக்கு கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி முன்ஷி முகமது ஷேக் என்ற வாடிக்கையாளர் வந்தார். அவர் வங்கியில் ரூ.500 மதிப்புள்ள 17 நோட்டுகள், ரூ.1000 மதிப்புள்ள ஒரு நோட்டு என மொத்தம் ரூ.9,500-யை டெபாசிட் செய்தார். அதில் சில கள்ள ... Read More »

இந்தியாவுக்கான புதிய இலங்கைத் தூதர் விரைவில் நியமனம்

இந்தியாவுக்கான புதிய இலங்கைத் தூதர் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக இலங்கை வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.  இதுகுறித்து அந்நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மகிஷினி கலோன் வியாழக்கிழமை தெரிவித்ததாவது: இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் யார் என்பதை அரசு முடிவு செய்துவிட்டது. உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்த பிறகு அவரது பெயர் அறிவிக்கப்படும். அதுவரை, இந்தியாவுக்கான தூதர் தொடர்ந்து பணியாற்றுவார். அவரைத் தவிர, தூதரகத் தலைமைப் பொறுப்புகளில் கடந்த ஜனவரி 8ஆம் தேதிக்கு முன்னதாக நியமிக்கப்பட்ட, அயலகப் பணி சாராத அனைத்து அதிகாரிகளும் திரும்ப அழைத்துக் ... Read More »

விமல் வீரவன்ச கூறுகிறாா் – நாடு மோசமான நிலைமைக்கு சென்றுள்ளமைக்கு, ஜே வி பியே பொறுப்பு.

நாடு மோசமான நிலைமைக்கு சென்றுள்ளமைக்கு, ஜே வி பி பொறுப்பு கூற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்துள்ளார். அவிசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். நாடு தற்போது அராஜமான நிலைமையை நோக்கி தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதற்கு ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவே பொறுப்பு கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். Read More »

சென்னை மெரினாவில் மே17-ல் தமிழீழ இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

தமிழீழ இனப்படுகொலை நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் வரும் 17-ந் தேதி நினைவேந்தல் ஒன்று கூடல் நிகழ்ச்சிக்கு மே 17 இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:- தமிழீழத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட நமது உறவுகள் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு ஆறாண்டுகள் ஆகின்றது. இந்த இனப்படுகொலைக்கான ஒரே காரணம் அவர்கள் தங்களின் நியாயமான உரிமையான தம் தாயக விடுதலையை கோரியது ஒன்றே. சிங்கள பேரினவாத இலங்கையோடு சேர்ந்துகொண்டு இந்த இனப்படுகொலையை நடத்தியவர்கள் இந்தியா மற்றும் மேற்க்கத்திய நாடுகளே ... Read More »

இந்திய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளார்

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவையும் சந்திப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. நரேந்திர மோடி நாளை இலங்கை வருகிறார். இதன் போது அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டவர்களை சந்திக்கவுள்ளார். அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளையும் அவர் சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் மகிந்தராஜபக்ஷவையும் சந்திப்பார்என்று கூறப்படுகிறது. Read More »

இந்தியாவின் , பஞ்சாப் மாநிலத்தின் லுதியானா பகுதியில் ஓடும் காரில் வைத்து பெண் மீது வல்லுறவு

இந்தியாவின் , பஞ்சாப் மாநிலத்தின் லுதியானா பகுதியில் பெண்ணொருவர் ஓடும் காரில் வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார். தனது நண்பியொருவரின் வீட்டுக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த 23 வயதான பெண்ணொருவரே இவ்வாறு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார். இரவு நேரம் தனது அருகில் காரை நிறுத்திய 3 பேர் கொண்ட குழு தன்னை கடத்தியதாகவும் இதன்போது 2 பேர் தன்னை வல்லுறவுக்குட்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். டெல்லியில் 2012 ஆம் ஆண்டு ஓடும் பஸ்ஸில் வைத்து பெண்ணொருவர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ... Read More »

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு பாரிய இராணுவ மற்றும் சமுக உதவிகளை வழங்குவார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு பாரிய இராணுவ மற்றும் சமுக உதவிகளை வழங்குவார் என்று சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வருகிறார். கடந்த அரசாங்கத்தின் போது சீனா இலங்கையில் பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான முதலீடுகளை மேற்கொண்டிருந்தது. இதனால் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதாக இந்தியா கருதுகிறது. இந்த நிலையில் சீனாவின் பிடியில் இருந்து இலங்கை விடுதலை பெறும் வகையில், இந்த உதவிகளை இந்திய பிரதமர் இலங்கைக்கு வழங்குவார் என்று அந்த ஊடகம் ... Read More »

இலங்கை மீனவர்களால் இந்திய மீனவர்கள் கடத்தல் – கியு பிரிவு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆயுதம் தாங்கிய இலங்கை மீனவர்களின் குழு ஒன்று, தமிழக மீனவர்கள் ஏழுபேரை கடத்தியதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்று மாலை கடத்தப்பட்ட அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டதாக தமிழக கியு பிரிவு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இலங்கை மீனவர்களால் கோடியக்கரை பகுதியில் வைத்து, ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களை இலங்கையில் இரகசியமான இடம் ஒன்றுக்கு அழைத்து வந்து, அவர்களின் உறவினர்களிடம் தொலைபேசி மூலம் கப்பம் கோரியதாக, கியு பிரிவு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் குறித்த மீனவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More »

டோனியின் குழந்தையின் முதல் படம் வெளியானது

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் டோனிக்கும் ஷாக்சிக்கும் இடையே கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. குர்கானில் உள்ள போர்டிஸ் தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் பிப்ரவரி 6 தேதி ஷாக்சிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து கேப்டன் டோனிக்கு தெரிவிக்கபட்டது. சில நாட்கள் குழந்தையை பார்ப்பதற்காக இந்தியா திரும்பும் திட்டம் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் தோனியிடம் கேட்ட போது இல்லை, தற்போது தேசக்கடமையில் இருப்பதால் அப்படி திட்டம் எதுவும் இல்லை. உலக கோப்பை தான் எனக்கு மிக ... Read More »

சட்டவிரோத வலைகளை பயன்படுத்த அனுமதி ரத்து

லைலா மற்றும் சுருக்கு வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கான அனுமதி பத்திரங்கள் வழங்குவதை உடனடியாக ரத்து செய்யுமாறு உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா அறிவுறுத்தியுள்ளார். மீன்பிடித்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மீன்பிடித்துறை அமைச்சின் அதிகாரிகளுக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த முறைகளில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக மீளாய்வு செய்யவுள்ளதாகவும், அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை. அத்துமீறிய கடற்றொழிலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட 19 இலங்கை மீனவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை தூத்துக்குடி கடலோர ... Read More »

Scroll To Top