Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / இந்தியா செய்திகள் (page 15)

பதிவு வகை: இந்தியா செய்திகள்

Feed Subscription

தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை (காணொளி)

ஜாமினில் விடுவிப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நகல் வழங்கப்பட்டதையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரகார சிறைச்சாலையில் இருந்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். சிறை வாசலில் குவிந்திருந்த ஏராளமான தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஜெயலலிதாவின் விடுதலையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழந்தனர். விடுதலையான ஜெயலலிதா சிறை வளாகத்தில் இருந்து நேராக பெங்களூர் ஹெச்.ஏ.எல் விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம்  மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை வரவேற்க ஏராளமான தொண்டர்கள் மற்றும் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் குவிந்தனர். பின்னர், சென்னை விமான நிலையத்தில் ... Read More »

மோடியை கொல்ல சதித்திட்டம்!

பிரதமர் நரேந்திர மோடியைத் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி கொல்ல சதித்திட்டம் தீட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நரேந்திர மோடி, ஹரியானா, மராட்டிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தை முடித்த நிலையில், உடனடியாக அவரது சொந்தத் தொகுதியான வாரணாசி செல்வதாக இருந்தது. ஆனால், அவரது உடல்நிலை சரியில்லை என்று மோடியின் வாரணாசி பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. ஆனால், அதே நாளில் நேற்று ஆந்திர மாநிலத்திற்கு சென்று அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மிக சுறுசுறுப்புடன் மோடி பார்வையிட்டார்.இந்நிலையில்தான் வாரணாசியில் மோடியை தற்கொலைப் படைத் ... Read More »

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் (செப்டம்பர்) 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதேபோல், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் ... Read More »

ஜெயலலிதாவுக்கு ஜாமீன்! அ.தி.மு.கவினர் உற்சாக கொண்டாட்டம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்து கொண்டிருந்தபோது காலையில் களையிழந்த அ.தி.மு.க ஆண்டு விழா, நண்பகல் ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கட்சியினர் கொண்டாடியதால் களைகட்டியது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா இருக்கும் நிலையில், அக்கட்சியின் 43வது ஆண்டு தொடக்க ... Read More »

ஒருநாள் போலீஸ் கமிஷனராக இருந்த10 வயது சிறுவன்!

மரணத்தை எதிர்நோக்கும் 10 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றியது ஐதராபாத் காவல்துறை. சாதிக் என்ற இந்த 10 வயதுச் சிறுவனை ஐதராபாத் போலீஸ் கமிஷனர் நாற்காலியில் உட்கார வைத்து சிறுவனின் வாழ்நாள் கனவை நிறைவேற்றியுள்ளனர். சாதிக் என்ற இந்த 10 வயதுச் சிறுவன் Terminally-ill’  நோயாளி ஆவார். டெர்மினலி இல் என்றால் அவருக்கு மரணம் எப்போது வேண்டுமானாலும் சம்பவிக்கும். காரணம் இவருக்கு இருக்கும் நோய்க்கு எந்த வித சிகிச்சையும் பலனளிக்காது என்று முடிவுகட்டப்பட்ட ஒரு நோயாளி ஆவார் அவர். சாதிக்கிற்கு இருக்கும் நோய்க்கு மருத்துவ தீர்வு ... Read More »

26 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: நரேந்திர மோடி வாழ்த்து

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.- 1சி செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி.26 ராக்கெட் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிஎஸ்எல்வி சி.26 ராக்கெட்  விண்ணில் செலுத்தப்பட்டது. கடல்வழிப்பாதை, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பணிக்கான செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-சியுடன், பிஎஸ்எல்வி சி.26 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து வியாழக்கிழமை அதிகாலை 1.32 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து: இந்த நிலையில் ஏவுகணை சோதனைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் ... Read More »

நரேந்திர மோடி அவர்களுடன் facebook நிறுவனர் டெல்லியில் சந்திப்பு

Facebook நிறுவனரான Mark Zuckerberg இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு டெல்லியில் பிரதமர் அவர்களை கடந்த 10-10-2014 அன்று நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் அனைத்து வித மக்களும் Facebook ஐ பயன்படுத்தவும் மேலும் அதனை இலவசமாக பயன்படுத்த முக்கிய பேச்சவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். உலகில் Facebook பயனாளர்களில் US (184மில்)முதல் இடத்திலும் இந்தியா(112மில்) இரண்டாவது இடத்திலும் உள்ளது. மேலும் இலவசமாக internet ஐ பயன்படுத்த வெறும் 911 ஐ(நம்பர் பட்டன்) us லும் 100 ஐ(நம்பர் பட்டன்) இந்தியாவில் ... Read More »

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிப்பு! கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி

ஜெயலலிதாவுக்கான ஜாமின் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்குவதற்கு எந்த வித முகாந்திரமும் இல்லை என்று நீதிபதி சந்திர சேகரன் தெரிவித்தார். ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட, தண்டனையைத் தடை செய்யும் மனுவும், ஜாமின் கேட்பு மனுவும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி சந்திரசேகரன் தனது தீர்ப்பில் கூறினார். முன்னதாக, ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டதாக நீதிமன்ற வளாகத்தில் இருந்து செய்தி வெளியானது. அதற்கு, மதியம் 2.30க்குப் பின்னர் நடைபெற்ற வாதத் தொடர்ச்சியின்போது, அரசுத் தரப்பில் இருந்து ஆஜரான வழக்குரைஞர் ... Read More »

பெங்களூர் உயர் நீதிமன்றால் ஜெயலலிதாவிற்கு நிபந்தனையில் ஜாமீன் வழங்கப்பட்டது!

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவிக்காததை அடுத்து அவருக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கியுள்ளது. தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் கடந்த மாதம் 27-ந் தேதி தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் ஜெயலலிதா உள்பட 4 பேர் சார்பிலும் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ... Read More »

தமிழகத்தில் 60,000 ஆண்டுகள் பழமையான மனிதன்!

இந்தியா என்னும் துணைக் கண்டத்தின் முதல் குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டைச் சேர்ந்த விருமாண்டி என்னும் தமிழருக்கு கிடைத் திருக்கின்றது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர். ராமஸ்வாமி பிச்சப்பன் மற்றும் சில இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மதுரையில் இருந்து சுமார் அய்ம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜோதிமாணிக்கம் என்ற சிறிய குக்கிராமத்தில் வாழ்ந்து வரும் இவருடைய மரபணு தான் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் ஆப்ரிகாவிலிருந்து இந்தியாவிற்கு குடி பெயர்ந்த பூர்வகுடி மரபணுவை ஒத்திருக்கின்றது என ... Read More »

Scroll To Top