Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / இந்தியா செய்திகள் (page 4)

பதிவு வகை: இந்தியா செய்திகள்

Feed Subscription

அரசின் காட்டிக்கொடுப்புகளை முறியடித்தால் மட்டுமே புதுவருடம் சுபமாக அமையும்: உதய கம்மன்பில

புதிய வருடத்தில் அரசாங்கம் மூன்று மிகப்பெரிய காட்டிக்கொடுப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ள பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, அவற்றை முறியடித்தால் மட்டுமே புதுவருடம் சுப வருடமாய் அமையுமென குறிப்பிட்டுள்ளார். தமது கட்சி காரியாலயத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்- ”இந்த வருடத்தில் அரசாங்கம் மூன்று வகையான காட்டிக்கொடுப்புகளை மேற்கொள்ளவுள்ளது. அதில் முதலாவதாக நாட்டை பிரிவினைவாதிகளுக்கு வழங்கி சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்தும் வகையிலான அரசியலமைப்பை எதிர்வரும் மார்ச் ... Read More »

வர்தா புயல்: 7 பேர் பலி, 2000 மின் கம்பங்கள், 15,000 மரங்கள் சாய்ந்தன

சென்னையை கடும் சூறைக் காற்றுடன் புரட்டிப் போட்ட வர்தா புயல், சென்னை துறைமுகத்தில் திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தாலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயலின் சீற்றம் காரணமாக 7-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 40 பேர் காயம் அடைந்தனர். சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய கடுமையான சூறைக் காற்று காரணமாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் ... Read More »

சென்னையை ஆட்டிப் படைக்கும் வர்தா

வர்தா புயலினால் சென்னையில் பலத்த காற்று வீசுகிறது. இதனால் சாலையில் வாகனங்கள் செல்லவில்லை. ஒரு சில வாகனங்கள் மட்டுமே ஓடிக்கொண்டி ருக்கின்றன. வாகனங்கள், பொதுமக்கள் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர் என, தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. இதற்கிடையில் வார்தா புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை இரண்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடந்தபோது 192 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், ... Read More »

வேதா இல்லத்தில் பிறந்த தீபாவிற்கு மிஞ்சியது வேதனை மட்டும்தான்!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை லட்சக்கணக்கான மக்கள், மெரினாவில் திரண்டு அவரை விண்ணுலகம் அனுப்பி வைத்தனர். நாட்டின் முதல் குடிமகன் முதல் கடைகோடியில் வசிக்கும் தமிழன் வரை மெரினாவில் திரண்டிருந்து மறைந்து முதல்வருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருவர் இறுதிச் சடங்கு செய்தனர். ஒருவர் சசிகலா. ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி. சசிகலாவுடன் இன்னொரு இளைஞரும் இறுதிச்சடங்குகளை செய்தார். இவர் ஜெயலலிதாவின் சகோதரர் ஜெயக்குமாரின் மகன் தீபக். சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். ஜெயலலிதாவின் ரத்த வழி சொந்தம் இவர். அமெரிக்காவில் ... Read More »

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார் என்று அப்பலோ வைத்தியசாலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று இரவு 11.30 அளவில் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. Read More »

தமிழகத்தின் புதிய முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்ப்பு

ஓ.பன்னீர்செல்வம் 3வது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார். 1951ம் ஆண்டு பிறந்த ஓட்டக்காரத் தேவர் பன்னீர் செல்வம் என்று அழைக்கப்படும் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் முழுமையான விசுவாசி ஆவார். தற்போது நிதியமைச்சராக, பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள பன்னீர் செல்வம். முன்பு வருவாய்த்துறை உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். டான்சி நில பேர ஊழல் வழக்கில் சிக்கியதால் முதல்வராக இருந்த ஜெயலலிதா 2001ஆம் ஆண்டு பதவி விலக நேரிட்டது. அப்போது அதாவது 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ந் திகதி தமிழக முதல்வராக ஓ. ... Read More »

திசைமாறிய தீபாவளி வெடி… சுட்டுக் கொல்லப்பட்ட ‘சிமி’ தீவிரவாதிகள்!

தென்னிந்திய மக்கள் கடந்த சனிக்கிழமையும், வட இந்திய மக்கள் அதற்கடுத்த நாளான ஞாயிறு (அக்-30)அன்றும் தீபாவளி கொண்டாட்டத்தில் மூழ்கிக் கிடந்த அதே வேளையில் தான் மத்திய பிரதேச சிறையின் கழிவறை சுவரை உடைத்து சிமி தீவிரவாதிகள் தப்பிச் சென்றுள்ளனர். அதிகாலை 3 மணி… மத்திய பிரதேச மாநிலம் கந்தவா மாவட்ட மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்த சிமி தீவிரவாதிகளில் ஒருவன் கழிவறைக்கு செல்வது போல கழிவறை சுவரை ஆள் நுழையும் அளவுக்கு வழியை உடைத்து விட்டு அறைக்கு திரும்பினான். அவன் கொடுத்த சிக்னலின் அடிப்படையில், ... Read More »

முதல் மனைவி புகார் எதிரொலி 2ம் திருமணம் செய்தவர் கைது: பெண் போலீசுக்கு வலை

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஏற்கனவே திருமணம் ஆகி கணவனை விட்டு பிரிந்துவாழ்ந்த பெண் போலீசை இரண்டாம் திருமணம் செய்தவரை ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைதுசெய்தனர். பெண் போலீசை தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தெற்கு பரணம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் செல்வகுமார்(40). இவருக்கு திருமணம் ஆகி மனைவி லதா(36) மற்றும் 16 வயது மற்றும் 14 வயதில் இரண்டு மகள்களும் 11 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இரும்புலிகுறிச்சி காவல்நிலையத்தில் காவலராக பணிபுரியும் ... Read More »

மாணவர்கள் மரணத்துக்கு கண்டனம் – இலங்கை துணைத் தூதரகம் முற்றுகை

சென்னை – நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை மே 17 இயக்கத்தினர் இன்று முற்றுகையிட்டனர். யாழ்ப்பாணத்தில் அண்மையில் இரண்டு தமிழ் மாணவர்கள் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்துக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 17 இயக்கத்தினர் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். Read More »

நிறுவனத்தைப் பாதிக்காத `மண முறிவு’!

விவாகரத்து சமீப காலமாக அதிகரித்து வருகிறது. நடுத் தர மக்கள், வயதானவர்கள், பணக்காரர்கள், இளம் தம்பதிகள் என இதில் விதிவிலக்குகள் இல்லை. பொதுவாக விவாகரத்து இரு குடும்பங்களிடம் உள்ள உறவுகளை மட்டுமே பாதிக்கும். ஆனால் இருவர் சேர்ந்து ஒரு நிறுவனம் தொடங்கும் பட்சத்தில் விவாகரத்து ஏற்பட்டால் அந்த நிறுவனத்தின் எதிர்காலமே பாதிக்கப்படும். ஆனால் நல்ல வேளையாக பக்குவப்பட்ட இருவர் பிரிவதினால் அந்த நிறுவனத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அந்த நிறுவனம் `மியு சிக்மா’ (MuSigma). பெங்களூருவில் இருக்கும் அனல்டிக்ஸ் நிறுவனம் மியு சிக்மா. இதனை ... Read More »

Scroll To Top