Sunday , May 28 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / இந்தியா செய்திகள் (page 5)

பதிவு வகை: இந்தியா செய்திகள்

Feed Subscription

நாளை தமிழக அமைச்சரவை பதவியேற்பு – 13 பேர் புதியவர்கள்

தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் புதிதாக அமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் இடம்பெறவுள்ள புதிய அமைச்சர்களின் பட்டியல் ஆளுநர் மாளிகை சனிக்கிழமை வெளியிடப்பட்டது. முன்னதாக, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோருவதற்கான கடிதத்தையும், புதிய அமைச்சர்களின் பட்டியலையும் ஜெயலலிதா அளித்தார். இந்தப் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்து அதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டது. இதன்படி, முதல்வர் ஜெயலலிதா, 28 அமைச்சர்களும் திங்கள்கிழமை பதவியேற்கின்றனர். கடம்பூர் சி.ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், வி.சரோஜா, கே.சி.கருப்பண்ணன், ஓ.எஸ்.மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், ஆர்.துரைக்கண்ணு, பி.பெஞ்சமின், வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி, வி.எம்.ராஜலட்சுமி, எம்.மணிகண்டன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய ... Read More »

விஜயகாந்தை துரத்தியடிக்கும் சீமான்!

தேமுதிக கட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள அடியை அந்தக் கட்சி சற்றும் எதிர்பார்த்திருக்காது. அந்த அளவுக்கு மரண அடியைக் கொடுத்துள்ளனர். அதை விட அந்தக் கட்சிக்கு பெரிய அதிர்ச்சி என்னவென்றால், தேமுதிகவுக்கு மிக மிக நெருக்கத்தில் நாம் தமிழர் கட்சி வந்து அமர்ந்திருக்கிறது என்பதுதான். தமிழக மக்கள் எப்போதுமே அதிரடியான முடிவுகளைக் கொடுப்பதில் அலாதியனவர்கள். அந்த வகையில் இந்த முறையும் அவர்கள் பலருக்கும் ஷாக் தரும் வகையிலான தீர்ப்பை அளித்துள்ளனர். அதில் பெரிய அதிர்ச்சி தேமுதிவுக்குக் கொடுத்துள்ள ஆப்புதான். தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை 3வது இடத்திற்குத் ... Read More »

ஈழத்தை அமைப்பேன் கரு­ணா­நி­தியே தமி­ழின படு­கொ­லைக்கு காரணம்

இலங்­கையில் தனி ஈழத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான முன்­னெ­டுப்­பு­களை எமது கட்சி தொடர்ந்து மேற்­கொள்ளும் என்று அண்ணா திரா­விட முன்­னேற்றக் கழ­கத்தின் தலை­வரும் தமி­ழக முதல்­வ­ரு­மான ஜெய­ல­லிதா தெரி­வித்­துள்ளார். திருச்­சியில் நேற்று முன்தினம் நடை­பெற்ற தேர்தல் பிர­சா­ரத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, தனி ஈழம் எய்­திடும் வகையில் தொடர்ந்து நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும். இலங்கை தமி­ழர்கள் மீது போர் குற்­றங்கள் மற்றும் இனப்படு­கொலை நிகழ்த்­தி­ய­வர்கள் மீது, சுதந்­தி­ர­மான சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்று நான் தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கிறேன். ... Read More »

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை – ஜெயா

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுப்போம் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா கடந்த 9-ம் திகதி முதல் மண்டலம் வாரியாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி திருச்சி – சென்னை பைபாஸ் சாலையில் உள்ள திருச்சி பொன்மலை ஜி கார்னரில் நேற்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த ... Read More »

99 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை முடிவு

இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 99 பேரை விடுதலை செய்ய அரசு நீதிமன்றங்களுக்கு பரிந்துரை செய்துள்ளது. இலங்கை கடற்படையினர் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை இராமநாதபுரத்தைச் சேர்ந்த 49 மீனவர்கள், புதுக்கோட்டையைச் சேர்ந்த 19 மீனவர்கள், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள், தஞ்சாவூரைச் சேர்ந்த 3 மீனவர்கள், தூத்துக்குடியைச் சேர்ந்த 20 மீனவர்கள் என மொத்தம் 99 மீனவர்களை கைது செய்து வவுனியா, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு ஆகிய சிறைகளில் அடைத்துள்ளனர். இந்நிலையில், இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ... Read More »

அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களுக்கு இரண்டாவது இடம்

அமெரிக்காவில் 1.32 லட்சம் இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள் என்றும் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு வந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடம் பிடிக்கிறது என்று அமெரிக்க துணை தூதர் டஸ்தின் டாக்கிவிஸ் கூறிஉள்ளார். அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களில் இந்திய மாணவர்களின் சேர்க்கையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்றும் குறிப்பிட்டு உள்ளார். அமெரிக்காவில் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மொத்த வெளிநாட்டு மாணவர்கள் சதவிதத்தில் 13 சதவிதம் பேர் இந்திய மாணவர்கள் ஆவர். இந்தியாவில் இருந்து செல்லும் மாணவர்களில் 78 சதவிதம் பேர் அறிவியல், ... Read More »

கனடாவிலிருந்து காதலர் கதறக் கதற… ஸ்கைப்பில் தற்கொலையை “லைவ்” செய்த காதலி

காதல் விவகாரத்தால் மனமுடைந்த ஜெமினி மியூசிக் சேனல் நிகழ்ச்சித் தொகுப்பாளர் நிரோஷா, கனடாவில் உள்ள தனது காதலரோடு வீடியோ காலில் பேசிக் கொண்டே, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. தெலுங்குத் தொலைக்காட்சியான ஜெமினி மியூசிக்கில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் நிரோஷா. செகந்திராபாத்தில் உள்ள ஹாஸ்டல் ஒன்றில் தங்கியிருந்த நிரோஷா, நேற்று காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். துறுதுறு பேச்சு, அழகு என தெலுங்கு தொலைக்காட்சி வட்டாரத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சித் தொகுப்பாளராக வலம்வந்த நிரோஷாவின் இந்த திடீர் முடிவு தெலுங்கு ... Read More »

ஊடகவியலாளர்கள் போன்றே அரசியல்வாதிகளுக்கும் உரிமை உண்டு

ஊடகவியலாளர்களுக்கு செய்திகளை பிரசுரிப்பதற்கான உரிமை இருப்பது போன்றே அரசியல்வாதிகளுக்கும் கருத்து வெளியிடும் உரிமை இருப்பதாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். பல்கலைக்கழக நியமனம் சம்பந்தமாக ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் வினவிய போது அந்த ஊடகவியலாளரை அமைச்சர் திட்டிய சம்பவம் குறித்து கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். ஊடகவியலாளர்களுடன் தனக்கு எந்தவித முரண்பாடுகள் இல்லை என்று கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அமைச்சர் கூறியுள்ளார். Read More »

எங்கள் கைகள் யாருடைய இரத்தத்தாலும் நனைக்கப்பட்டதல்ல

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் எங்களது 7 பேர் கைகளும் யாருடைய இரத்தத்தாலும் நனைக்கப்பட்டதல்ல நாங்கள் எந்த குற்றமும் செய்யாதவர்கள் என 25 ஆண்டுகாலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி முதல் முறையாக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ராஜிவ் காந்தி வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன் உட்பட 7 பேர் ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ளனர். இவர்களில் நளினியின் தந்தை சங்கரநாராயணன் நேற்று காலமானார். அவரது உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ... Read More »

அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையை காலதாமதமின்றி ஆரம்பிக்கவும்!

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பில் இரு அரசாங்கங்களுக்கும் இடையிலான நான்காவது கட்ட பேச்சுவார்த்தை காலதாமதமின்றி ஆரம்பிக்கப்பட வேண்டும் என தமிழக தேசிய மீனவர்கள் மன்றம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை அந்த மன்றத்தின் தலைவர் எம்.இளங்கோ குறிப்பிட்டதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்குள் தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து தேசிய மீனவர்கள் மன்றம் எதிர்ப்பு வௌியிட்டது. தமிழக மீனவர்களின் 81 படகுகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது, என, சுட்டிக்காட்டிய எம்.இளங்கோ, கைதான ... Read More »

Scroll To Top