Friday , September 22 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / கனடாச் செய்திகள்

பதிவு வகை: கனடாச் செய்திகள்

Feed Subscription

நியு யோர்க் பயணத்தின் முதல் நிறுத்தமாக உலக குடியுரிமை விருது பெறும் ட்ரூடோ

நியு யோர்க்- மூன்று நாட்கள் நிகழ்வொன்றிற்காக இன்று நியு யோர்க் பயணமாகும் கனடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று இரவு ஒரு உலக குடியுரிமை விருதை பெறுகின்றார். வருடாந்த ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் கலந்து கொள்ள Big Apple நோக்கி பயணமாகின்றார் பிரதமர். உலக அங்கத்தவர்கள் யு.எஸ்.அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் உரையை கேட்பதற்கு சிறிது பின்னராக அங்கு சென்றடைவார். இன்று மாலை அட்லான்டிக் கவுன்சில் சிந்தனையாளர்களினால் சர்வசே வர்த்தகம் மற்றும் பன்முகத்தன்மைகான இவரது ஆதரவிற்காக கௌரவிக்கப்பட உள்ளார். ஜோர்டான ராணியான ரனியா ... Read More »

மரணத்தை விளைவிக்கும் சாரதிகளின் புதிய அபராதம் எவ்வளவு தெரியுமா

கனடா ஒன்ராறியோ-கவனமற்ற நிலையில் வாகனம் செலுத்தி மரணத்திற்கு காரணமாகும் வாகன சாரதிகளின் அபராதத்தை அதிகரிக்கின்றது. கவலையீனமாக வாகனத்தை செலுத்தி மரணத்திற்கு காரணமாகும் சாரதிகளிற்கு 50,000டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய திட்டத்தை ஒன்ராறியோ அறிமுகப்படுத்துகின்றது. லிபரல் அரசாங்கம் எதிர் வரும் இலையுதிர் காலத்தில் இந்த புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் என போக்கு வரத்து அமைச்சர் Steven Del Duca இன்று தெரிவித்துள்ளார். கவனகுறைவாக வாகனம் செலுத்தி மரணம் அல்லது உடல் தீங்கு விளைவிக்கும் சாரதிகளிற்கு ஐந்து வருடங்கள் வரை லைசென்ஸ் இடைநிறுத்தம் 2,000 மற்றும் ... Read More »

மோட்டார் சைக்கிள் சாகச காரர்களிற்கு ஆபத்து

ரொறொன்ரோ-ஒன்ராறியோ மாகாண பொலிசார் கடந்த மாதம் ரொறொன்ரோ பகுதி நெடுஞ்சாலையில் சாகசங்கள் புரிந்து போக்கு வரத்திற்கு பங்கம் விளைவித்த பலருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை அறிவிக்க உள்ளனர். குற்றவியல் நடைமுறை தொகுப்பு சட்டம் மற்றும் நெடுஞ்சாலை போக்கு வர்த்து சட்ட குற்றச்சாட்டுக்கள் ரொறொன்ரோ வடக்கு, வாஹனில் இன்று பிற்பகல் செய்தியாளர் மகாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளளது. இச்சம்பவத்திற்கு சாட்சியமாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களும் மாநாட்டில் காட்டப்பட உள்ளன. ஆகஸ்ட் 6 ஞாயிற்றுகிழமை பாரிய மோட்டார் சைக்கிள் சாரதிகள் கூட்டம் ஒன்று ரொறொன்ரோ பாரிய நெடுஞ்சாலையில் காணப்பட்டது. Read More »

கனடாவின் வரவிருக்கும் ஆளுநரின் முதல் பார்வையாளர் அரசி

கனடாவின் வரவிருக்கும் ஆளுநர் அவரது முதல் பார்வையாளராக அரசியை சந்தித்துள்ளார். ஜூலி பெயெற்றி அரசி எலிசபெத்தை ஸ்கொட்லாந்தில் அவரது கோடை கால வீடான பல்மோரல் கோட்டையில் சந்தித்துள்ளார் என கவர்னர் ஜெனரல் காரியாலயம் தெரிவிக்கின்றது. பெயெற்றியிடம் பல கட்டளைகளை-கனடிய ஆளுமையின் ஒரு அசாதாரண தோழமை உட்பட- அரசியார்வழங்கியுள்ளார். இளைப்பாறிய கனடிய விண்வெளி வீராங்கனையான இவர் இன்று பிரின்ஸ் சார்ள்சை சந்திக்க உள்ளார். அக்டோபர் 2 இவர் உத்தியோக பூர்வமாக கவர்னர் ஜெனரல் டேவிட் ஜோன்ஸ்ரனின் பதவியை பெறுவார். Read More »

கனடாவில் பல வாகன மோதலில் இருவர் மரணம் பலர் காயம்

செவ்வாய்கிழமை பிற்பகல் யோர்க் பிராந்தியத்தில் கெஸ்விக் தெற்கு பகுதியில் இடம்பெற்ற பல வாகன மோதலில் இருவர் கொல்லப்பட்டதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர் என யோர்க் பிராந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர். பிற்பகல் இரண்டு மணியளவில் Ravenshoe வீதி மற்றும் வூட்பைன் அவெனியு பகுதியில் நடந்துள்ளது. ஆறு வாகனங்கள் மோதப்பட்டதாக பல தொலைபேசி அழைப்புக்கள் பொலிசாரருக்கு செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே மரணித்த இருவரின் இனம் தெரிய வரவில்லை. பலர் கடுமையான காயங்களால் துன்புறுவதாக பொலிசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. Read More »

கனடாவில் பருவகாலத்தின் முதல் பனிபொழிவு

செவ்வாய்கிழமை காலை பருவகாலத்தின் முதல் பனிபொழிவை எட்மன்டன் பெற்றுள்ளது. பலத்த மழை ஒன்று மதியத்திற்கு சிறிது பின்னர் வெள்ளை துகள்களாக மாற தொடங்கி சில்லென்ற ஒரு குளிர்ச்சியை அல்பேர்ட்டா தலைநகர பிராந்தியத்திற்கு கொண்டு வந்துள்ளது. தொடர்ந்தும் இன்றய நாளின் பின்பகுதி பனியுடன் கலந்த மழை கொண்டதாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 முதல் 20மில்லி மீற்றர்கள் மழை முன்கணிப்புடன் நகரின் சில பகுதிகளில் இரண்டு சென்ரி மீற்றர்கள் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதாக கனடா சுற்று சூழல் தெரிவித்துள்ளது. வார இறுதி நாட்களில் பனி மறைந்து விடும் ... Read More »

நியு யோர்க் பயணத்தின் முதல் நிறுத்தமாக உலக குடியுரிமை விருது பெறும் ட்ரூடோ

நியு யோர்க்- மூன்று நாட்கள் நிகழ்வொன்றிற்காக இன்று நியு யோர்க் பயணமாகும் கனடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று இரவு ஒரு உலக குடியுரிமை விருதை பெறுகின்றார். வருடாந்த ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் கலந்து கொள்ள Big Apple நோக்கி பயணமாகின்றார் பிரதமர். உலக அங்கத்தவர்கள் யு.எஸ்.அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் உரையை கேட்பதற்கு சிறிது பின்னராக அங்கு சென்றடைவார். இன்று மாலை அட்லான்டிக் கவுன்சில் சிந்தனையாளர்களினால் சர்வசே வர்த்தகம் மற்றும் பன்முகத்தன்மைகான இவரது ஆதரவிற்காக கௌரவிக்கப்பட உள்ளார். ஜோர்டான ராணியான ரனியா ... Read More »

ரொறொன்ரோ வீதிகளில் போக்கு வரத்து பாதுகாவலர்கள்

2018-ஆரம்பத்திலிருந்து ரொறான்ரோ மக்கள் முழு-நேர போக்குவரத்து பாதுகாவலர்களை வீதிகளில் காணக் கூடியதாக இருக்கும்.திங்கள்கிழமை காலை இத்தகவலை ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி அறிவித்துள்ளார். நெரிசல் மோதல் குறித்த இவரது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இத்தகவல் அமைகின்றது. பாதுகாவலர்கள் ஒரு பிரகாசமான ஒறேஞ்ச் கோட் அல்லது பிரகாசமான பச்சை நிற கோட் அல்லது இவர்கள் யார் என்ன செய்கின்றார்கள் என மக்கள் தெளிவாக தெரிந்து கொள்ள கூடிய வண்ணம் தோற்றமளிப்பார்கள் என மேயர் அவசரமான காலை நேரத்தில் நேதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் நின்ற வாறு தெரிவித்தார். ... Read More »

கனேடிய இராணுவ ஓட்டப் பந்தயத்தில் பங்குபற்றிய கனேடிய பிரதமர்

கனேடிய தலைநகர் ஒட்டாவாவில் இடம்பெற்ற, கனேடிய இராணுவ ஓட்டப் போட்டியில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பங்குபற்றினார். ஒட்டாவா நகர் ஊடாக நேற்று ஞாயிற்றுக்கிமை நடைபெற்ற ஐந்து கிலோமீற்றர் ஓட்ட தூரத்தை பிரதமரும் ஓடி நிறைவு செய்துள்ளார். இதன் மூலம் இராணுவ ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய முதல் பிரதமர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். பிரதமர் ஓட்ட தூரத்தை 23 நிமிடங்கள் 8 விநாடிகளில் நிறைவு செய்துள்ளார். இதன்மூலம் 364ஆவது இடத்தை பிரதமர் பெற்றுள்ளார். இவ் ஓட்ட பந்தயத்தில் பங்குபற்றிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் ... Read More »

கனேடிய பிரதமரை சந்தித்தார் தெரேசா மே

கனடாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயை, கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ வரவேற்றுள்ளார். பிரித்தானியப் பிரதமர் நேற்று ஓட்டோவாவைச் சென்றடைந்துள்ள நிலையில், கனேடியப் பிரதமரால் வரவேற்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பிரித்தானியப் பிரதமருக்கும் கனேடியப் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பின்போது, வர்த்தக உறவு உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளனர். அத்துடன், போயிங் விமான உற்பத்தி நிறுவனம் தொடர்பான விவகாரம் தொடர்பிலும் இவர்கள் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது, போயிங் நடவடிக்கையை எதிர்ப்பதற்கு இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரெக்சிற்றுக்குப் பின்னர், வர்த்தக உறவுகளை ... Read More »

Scroll To Top