Saturday , October 21 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / கனடாச் செய்திகள் (page 10)

பதிவு வகை: கனடாச் செய்திகள்

Feed Subscription

இலங்கை தமிழருக்கு கனடாவில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சட்டவிரோதமாக தமிழ் குடியேற்றவாசிகளை கனடாவுக்கு கப்பல் மூலம் அழைத்து வந்த குற்றச்சாட்டில், இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய உச்சநீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்துள்ளது. கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக காணப்பட்ட, குணரொபின்சன் கிறிஸ்துராஜா என்பவருக்கே நேற்று முன்தினம்(12) இந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் எம்.வி.சன்.சீ என்ற சரக்கு கப்பலில், 492 இலங்கை தமிழ் அகதிகள் வன்கூவரைச் சென்றடைந்தனர். இலங்கை தமிழருக்கு கனடாவில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை இந்நிலையில் 500 இலங்கை ... Read More »

கனடா செல்ல முயற்சித்து வெளிநாட்டில் அனுபவித்த கொடுமைகள் கிளிநொச்சி பெண்களின் திகில் அனுபவம்

இலங்கையில் இருந்து தரகர்கள் மூலம் கனடா செல்ல முயற்சித்த இரு தமிழ் பெண்களின் திகில் அனுபவம் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கனடா செல்லும் நோக்கில் பயணத்தை மேற்கொண்ட இவர்கள், மூன்றாம் நாடுகளில் சிக்கியிருந்த நிலையில், கடந்த வாரம் மீண்டும் இலங்கையை வந்தடைந்தனர். இந்தக் காலப்பகுதியில் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் தொடர்பில் இரு பெண்களும் விபரித்துள்ளனர். கிளிநொச்சியை சேர்ந்த 24 வயதுடைய சலோமி மற்றும் 34 வயதுடைய ஜெனி ஆகிய இருவரும் பெரும் ஆபத்துகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் மீண்டும் இலங்கை வந்துள்ளதாக ... Read More »

தரிப்பிட அதிகாரி ஒருவருக்கு நடந்த கொடுமை

கனடா- ஓக்வில், ஒன்ராறியோ மனிதன் ஒருவர் ரொறொன்ரோ வாகன தரிப்பிட அமுலாக்க அதிகாரி ஒருவர் மீது கோப்பியை வீசியுள்ளார். ரொறொன்ரோ டவுன் ரவுன் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. செவ்வாய்கிழமை மாலை 6.30மணியளவில் நடந்துள்ளது. அதிகாரி குறிப்பிட்ட மனிதனுக்கு தவறான இடத்தில் வாகனத்தை தரித்தமைக்காக ரிக்கெட் வழங்கியுள்ளார். டவுன்ரவுனில் போட்லன்ட வீதி மற்றும் கிங் வீதி மேற்கு மூலையில் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அதிகாரி அவ்விடத்தை விட்டு அகன்றதும் 22-வயதுடைய ஒமார் டாக்ஹபானி என்ற குறிப்பிட்ட நபர் தனது வாகனத்தில் ஏறி அதிகாரியை அதி உயர் வேகத்தில் ... Read More »

கனடா டர்ஹாம் கிங்ஸ்ரன் பகுதிகளில் பாரிய போதை மருந்து கடத்தல் கும்பல் கைப்பற்றப்பட்டது

கனடா-டர்ஹாம் கிங்ஸ்ரன் பகுதிகளிலிருந்து 750,000 டொலர்கள் பணம், 20கிலோக்கள் போதை மருந்து மற்றும் இரண்டு துப்பாக்கிகள் பொல்சாரல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வேட்டையின் போது 18 பேர்கள் கைது செய்யப்பட்டதுடன் 20-கிலோ கிரம்கள் எடையுள்ள பல வேறு தரப்பட்ட போதை மருந்துகள் இரு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக டர்ஹாம் பிரதேச பொலிஸ் தெரிவித்துள்ளது. வசந்த கால ஆரம்பம் முதல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த விசாரனை மூலம் இப்பறிமுதல் நடாத்தப்பட்டுள்ளது. ரொறொன்ரோ பெரும்பாகம் மற்றும் கிங்ஸ்ரன், ஒன்ராறியோ பகுதிகளில் அமைந்துள்ள போதை பொருட்கள் கடத்தும் அமைப்புக்களை ... Read More »

கனடாவின் மிகவும் காதல் நிறைந்த நகரம்?

கனடாவின் மிகவும் காதல் நிறைந்த நகரமாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் சட்டமன்றம் அனைத்தையும் கொண்ட விக்டோரியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடல் காட்சிகள் நிறைந்த ஒரு துறைமுகம், ஒரு வகை படர் கொடிச்செடியால் மூடப்பட்ட எம்ப்ரஸ் விடுதி, அழகான பழைய நகரம் மற்றும் கற்சுவர்கள் ஆகிய இந் அழகிய நகரத்திற்கு மேலும் வலு சேர்க்கின்றன. அமசொனின் வருடாந்த கணிப்பிலியே இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மற்றய கனடியர்களை விட விக்டோரியா மக்கள் அதிகமான காதல் நாவல்கள் புத்தகங்கள், காதல் நகைச்சுவைகள், இசைகள், ஆபரணங்கள் போன்றனவற்றை வாங்குகின்றனர் எனவும் இந்த ... Read More »

கனடாவில் வேலை வாய்ப்பு அதிகரிப்பு

கனடாவில் ஏற்பட்டுவரும் பொருளாதார வளர்ச்சி காரணமாக புதிய வேலைவாய்ப்புக்கள் பல உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  அந்தவகையில் கிட்டத்தட்ட 11,000 வேலைவாய்ப்புக்கள் யூலை மாதத்தில் ஏறபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதன் காரணமாக வேலையின்மை விகிதம் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களில் மிக சொற்ப அளவில் குறைந்துள்ளதாக கனடா புள்ளி விபரவியல் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. முழுநேர வேலை வாய்ப்பு எண்ணிக்கை 35100 ஆக அதிகரித்துள்ளது. அந்த வகையில் வேலையில்லா வீதம் 6.3 ஆக காணப்படுகின்றது. மொத்த விற்பனை மற்றும் சில்லறை வணிக துறைகளில் 22000 வேலை வாய்ப்பு, தகவல் கலாசாரம் ... Read More »

அடுத்தது என்ன சூறாவளி ஜோஸ் யு எஸ் கனடாவை தாக்கலாம்

இர்மாவின் தாக்கம் அடங்கும் வேளையில் யு.எஸ்சின் பார்வை சூறாவளி ஜோசின் மீது திரும்பியுள்ளது. கரிபியன் தீவுகளின் வடபகுதியில் நிலை கொண்டிருக்கும் ஜோஸ் அடுத்த வாரம் யு.எஸ்சின் கிழக்கு மற்றம் கனடாவை தாக்கலாம் என கருதப்படுகின்றது. ஜோஸ் தற்போது ஒரு மூன்றாம் வகையில் இருந்து 2ம் வகை சூறாவளியாக குறைந்துள்ளது. குளோபல் செய்தி வானிலை ஆய்வாளர் றொஸ் Hull அடுத்த சில நாட்களில் 1ம் வகைக்கு பலவீனமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார். தற்சமயம் இது அட்லான்டிக்கிற்கு வெளியே சுற்றிக்கொண்டிருப்பதாகவும் நிலப்பகுதிகளிலிருந்து வெகு தூரத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ... Read More »

கனேடிய தமிழர்களுக்கு ஏற்பட்ட நிலை

17 வருடங்களின் பின்னர் கனடாவிலிருந்து இலங்கை செல்ல விரும்பிய தமிழ் குடும்பம் ஒன்று முகங்கொடுத்த நெருக்கடி தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. லண்டன் ஊடாக இலங்கை செல்வதற்கான பயண ஏற்பாடுகளை டொரொன்டோ வாழ் இலங்கை குடும்பம் ஒன்று செய்தது.  குறித்த காலப்பகுதியில் விமான நிலையத்திற்கு சென்ற போதும், அவர்களின் பயணத்தை தொடர முடியாத அவல நிலை ஏற்பட்டது. எயார்கனடா ஊடாக லண்டன் பயணிப்பதற்காக சென்ற மகேஸ்வரன் குடும்பத்தினர், மேலதிகமாக 4000 டொலர்களை செலவிட்டு அடுத்த நாளே அவர்களின் பயணத்தை ஆரம்பித்தனர். கடந்த ஜுன் ... Read More »

ஒன்ராறியோவில் பல்கலைக்கழக மாணவர்களிற்கு இலவச பயிற்சி

ரொறொன்ரோ-இந்த வருடம் ஒன்ராறியோவில் இலவச ரியுசன் பெற்ற கல்லூரி-படிப்பு மாணவர்களின் எண்ணிக்கை 185,000 என ஒன்ராறியோவின் இரண்டாம் நிலை கல்விக்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் புதிய திட்டமொன்றின் கீழ் இந்த இலவச நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது. மேம்பட்ட கல்வி அமைச்சர் டெப் மத்தியு இந்த ரியுசன் தொகையை இன்று அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இத்தொகை ஒன்ராறியோவின் முழு-நேர கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் தொகையை விட மூன்றில் ஒரு பங்கு மேலானதெனவும் கூறப்படுகின்றது. கடந்த வருட வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட புதிய ஒன்ராறியோ ... Read More »

இனி ஆண்டின் முதல் மாதம், எங்கள் நாட்டின் தமிழ் மாதம்: கனடா நாட்டின் அதிரடி அறிவிப்பின் பின்னணி..?

யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற கனியன் பூங்குன்றனாரின் உலகப்புகழ்பெற்ற முழக்கத்தை இன்று உலகமெங்கும் தமிழர்கள் பறைசாற்றி வருகின்றனர். கனடாவில் ஜனவரி மாதத்தை தமிழ் மரபு மாதமாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நாடு தழுவிய அளவில் கொண்டாடும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த வருடம்  நிறைவேறியது.   கடந்த மே மாதம் இந்த மசோதாவை கனடிய நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி, ஒரு தனிநபர் மசோதாவாகத் தாக்கல் செய்திருந்தார். இனி வரும் ஆண்டுகளில் கனடாவில் ஜனவரி மாதம் ‘தமிழ் மரபுத் திங்கள்’ என்று நாடு முழுவதும் ... Read More »

Scroll To Top