Sunday , August 20 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / கனடாச் செய்திகள் (page 2)

பதிவு வகை: கனடாச் செய்திகள்

Feed Subscription

கால நிலை கட்டுப்பாட்டு கோபுர ஊழியர் விமான சேவைகள் ரத்து!

ரொறொன்ரோ- காலநிலை மற்றறும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர் குறைப்பு காரணமாக ரொறொன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து மற்றும் தாமதம் போன்ற அசௌகரியங்கள் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. NAV Canada-கனடாவின் விமான உள்நாட்டு வழித்தட சேவைகளின் சொந்தமானதும் மற்றும் வழிப்படுத்தும் நிறுவனம் காலநிலை காரணமாக மொன்றியல் மற்றும்Newark, நியு யேர்சி ஆகிய இடங்களிற்கான ரொறொன்ரோவிலிருந்து புறப்பட வேண்டிய விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன என தெரிவித்துள்ளது. ரொறொன்ரோ வந்தடைய வேண்டிய விமானங்களும் காலநிலை மற்றும் பியர்சன் கட்டுப்பாட்டு கோபுர ஊழியர்கள் ... Read More »

கனடாவில் தமிழ் பொலிஸ் அதிகாரியின் மனிதநேயம்! இளைஞனுக்கு கிடைத்த புதிய வாழ்வு

கனடாவில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞன் ஒருவருக்கு தமிழ் பொலிஸ் அதிகாரி ஒருவர் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்தமை தொடர்பான செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட 18 வயதான இளைஞனுக்கு எதிர்பார்த்த வேலை கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வேலையை பெற்றுக்கொண்டமை தொடர்பில் திருட முயன்ற இளைஞன், உதவி புரிய தமிழ் பொலிஸ் அதிகாரிக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். கடந்த வாரம் ரொறன்ரோ நகரிலுள்ள வோல்மார்ட் அங்காடியில் திருடச் சென்ற இளைஞனை அங்குள்ளவர்கள் பிடித்து வைத்திருந்தனர். இது தொடர்பாக பொலிஸாருக்கு ... Read More »

வெள்ளிக்கிழமை இரவு ஒன்ராறியோவின் தென்மேற்கில் இரண்டு சூறாவளிகள்?

லிமிங்ரன், ஒன்ராறியோ-வெள்ளிக்கிழமை இரவு ஒன்ராறியோவின் தென்மேற்கு பகுதியை இரண்டு சூறாவளிகள் தொட்டிருக்கலாம் என்பது குறித்து கனடா சுற்று சூழல் புலன்விசாரனை செய்கின்றது. ஆன்லைனில் வெளியிடப்பட்ட புனல் மேகங்களின் படங்கள் குறிப்பிட்ட பகுதியில் சாத்தியமான சூறாவளி ஏற்பட்டிருக்கலாம் என கருதுவதால் நிறுவனம் விசாரனையில் ஈடுபட்டுள்ளதாக வானியல் ஆய்வாளர் றொப் குன் தெரிவித்துள்ளார். படங்களில் ஒன்றில் புனல் மேகம் தரையை தொடுவது தெரிந்ததெனவும் அவர் தெரிவித்தார். சூரிய பனல்கள் மற்றும் கிரீன் ஹவுஸ் ஒன்றையும் சூறாவளி சேதப்படுத்தியதாக அறிக்கைகள் தெரிவிப்பதாகவும் கூறினார். புயல் மின்கம்பங்களை துண்டித்து திறந்த ... Read More »

கொடூரமான விபத்திற்காளான ஒரு தாயின் வெளிப்பாடு?

காரின் முன் இருக்கையில் இருக்கும் போது ஒரு போதும் கால்களை முகப்பு பெட்டியின் மேல் வைக்க கூடா தென்பதை இச்செய்கையால் கொடிய விபத்திற்காளான தாய் ஒருவர் தனக்கு ஏற்பட்ட நிலைமை குறித்த படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார். ஆட்ரா ராரும் என்பவர் நிரந்தரமாக முடமாக்கப்பட்டார். விபத்து ஒன்றில் அவரது இரண்டு கணுக்கால் திருகுகள், இடுப்புகளில் இரண்டு, முழங்காலில் இரண்டு ஆகியனவற்றை இழந்ததுடன் நான்கு மணித்தியாலங்களிற்கு மேல் நிற்க முடியாத நிலைமைக்கும் ஆளாகியுள்ளார். தனது கால்களை முகப்பு பெட்டியின் மேல் போட்டுக்கொண்டிருந்ததால் இத்தனை பாதிப்பும் இவருக்கு ஏற்பட்டுள்ளது. ... Read More »

9-மணித்தியாலங்களில் 9-திருமணங்கள்!

ரொறொன்ரோவில் ஒரு மரத்தான் பொப் அப் திருமண நிகழ்வில் ஒன்பது சோடிகள் கடைசி நிமிட காதலர்கள்; “I do” சொல்லி திருமணம் செய்து கொண்ட சம்பவம் ரொறொன்ரோ அறப்பணி நிகழ்வொன்றில் வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. யதார்த்தமாக இவர்கள்-ஒவ்வொரு சோடிகளும் 600 டொலர்கள் செலுத்தி தஙகளின் பூக்களை தாங்களே வாங்கி, அவர்களது இசை, அவர்களது சட்ட அலுவலர்கள், அவரவரது விழா அமைப்பு, ஒரு கொளரவம் அல்லது நல்லெண்ணத்தின் வெளிப்பாடாக எடுத்துக்கொள்ளப்படும் ஒரு பானம், ஒரு புகைப்பட பிடிப்பாளர் மற்றும் ஒரு உருவப்பட அமர்வு போன்றவைகளை உள்ளடக்கியதாக அமைந்தது. ... Read More »

யாழில் கனடா தம்பதிகளின் திருகுதாளம் அம்பலம்

ஸ்ரீலங்காவிற்கு வருகை கனடா தம்பதியினர் சுமார் 51 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டதாக பொய் முறைப்பாடு செய்துள்ளனர். இதன் பின்னர் குறித்த முறைப்பாட்டின் பிரதியை கனடாவில் ஒப்படைத்து பெருந்தொகை காப்புறுதி பணத்தை பெற முயற்சி செய்ய செயல் தற்போது அம்பலமாகியுள்ளது. 89 பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் இது திட்டமிடப்பட்ட பொய் முறைப்பாடு என கொடிகாமம் பொலிஸாரின் இறுதி விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது. வரணி பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த 7 ம் ... Read More »

வீட்டு கொல்லைப்புறத்தில் முதலை

ரொறொன்ரோ-ஹமில்ரன் பகுதி குடியிருப்பாளர்களை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் இந்த வார ஆரம்பத்தில் நடந்துள்ளது. அவர்களது கொல்லைப்புறத்தில் முதலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதே அதிர்ச்சிக்கு காரணமாகும். வால்டர் எற்சினியன் கொல்லை புறத்தில் ஆகஸ்ட் 8 கோடைகால பாபிக்கியு செய்ய முயன்ற போது இதனை கண்டுள்ளதாக நகரத்தின் விலங்கு சேவைகள் துறை தெரிவித்துள்ளது. பொலிசார் வரவழைக்கப்பட்டு அவர்கள் பின்னர் 1.5-மீற்றர் நீளமுடைய முதலையை அகற்ற விலங்கு சேவையினரின் உதவியை நாடினர். எவரும் பாதிக்கப்படவில்லை.விலங்கு சேவையினரின் காவலில் வைக்கப்பட்டு பின்னர் மிருககாட்சிசாலை ஒன்றிற்கு மாற்றப்பட்டது.   Read More »

கனடாவின் மிகப்பெரிய வருடாந்த தெரு திருவிழா ஆரம்பம்!

ரொறொன்ரோ-கிரேக்க நாட்டின் சுவைகளை சுவைக்கும் கொண்டாட்டம் ரொறொன்ரோவில் இடம்பெறும் மிகப்பெரிய உணவு திருவிழாவாகும். இத்தெரு திருவிழா 1.65மில்லியன் பங்கேற்பாளர்களை வரவேற்கின்றது. வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பமாகும் இத்திருவிழா காரணமாக ரொறொன்ரோ சாரதிகளிற்கு வார இறுதி நாட்களில் வாகன போக்குவரத்து மிகவும் அசையும் தன்மை கொண்டதாக இருக்கும் என அறியப்படுகின்றது. இத்தெருவிழாவிற்காக நகரின் பாரிய வீதிகள் மூடப்பட்டிருக்கும். வார இறுதி நாட்களின் நிலவரம் குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை: டன்வோத் சுவை: டன்வோத்தில் இடம்பெறும் 24வது வருடாந்த தெரு திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்று கிழமை வரை ... Read More »

ரொறொன்ரோ பெரும்பாகத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள ;அளவிற்கதிகமான மருந்து!

இக்கோடைகாலத்தில் ரொறொன்ரோவில் அளவிற்கதிக வென்ரநில் கலந்த ஹெரோயின் பல மரணங்களை ஏற்படுத்தியமை பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறியப்படுகின்றது. டர்ஹாம் பகுதியில் ஒரே இரவில் மூன்று மனிதர்கள் மரணமடைந்துள்ளனர்.இவர்களின் மரணத்திற்கு வென்ரநில் கலந்த ஹெரோயின் காரணமாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகப்படுகின்றனர். ஒரே இரவில் ஏஜக்ஸ், வல்பி கோட் என்ற இடத்தில் இருவர் இறந்திருக்க கண்டுபிடித்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மற்றொருவர் கோர்ட்டிஷ் என்ற இடத்தில் வீடொன்றில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். நச்சுயியல் சோதனைகள் நடாத்தப்படவில்லை எனினும் மூன்று மரணங்களிற்கும் அளவிற்கதிகமான -வென்ரநில் சம்பந்தமுடைய மருந்து காரணமாகலாம் ... Read More »

அரசியலில் இருந்து இளைப்பாறும் கனடாவின் மிக உயர்ந்த முதல்வர்களில் ஒருவர்!

கனடாவின் மிக உயர்ந்த முதல்வர்களில் ஒருவரும் தனது தன்னியல்பான தன்மையினால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவரும் மற்றும் கூர்மையான அறிவாற்றல் மிக்கவருமான சஸ்கற்சுவான் முதல்வர் ஒரு தசாப்தத்தின் பின்னர் அரசியலில் இருந்து இளைப்பாறுகின்றார். 51-வயதுடைய பிராட் வால் வியாழக்கிழமை தனது முடிவை அறிவித்துள்ளார். ஆனால் புதிய முதல்வர் தெரிவாகும் வரை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சில துறைகளில் தனக்கு ஆர்வம் இருப்பதாக தெரிவித்த வால் எதனையும் தெரிவிக்கவில்லை. அடுத்து என்ன செய்தாலும் தனது பணிவாழ்க்கையில் முதல்வராக இருந்தது கௌரவமானதென தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 10-வருடங்கள் முதல்வராக இருந்துள்ளார். 2007ல் ... Read More »

Scroll To Top