Saturday , October 21 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / கனடாச் செய்திகள் (page 20)

பதிவு வகை: கனடாச் செய்திகள்

Feed Subscription

மாமனிதருக்கு அதிகாரிகளால் நேர்ந்த கதி

கனடாவில் மக்களின் பாதுகாப்பிற்காக பொது பூங்காவில் தனது சொந்த செலவில் படி கட்டிய முதியவரை டொராண்டோ நகராட்சி கண்டித்துள்ளது. Etobicoke பகுதியை சேர்ந்த 73 வயதான Adi Astl, அப்பகுதியில் உள்ள பொது பூங்காவில் 550 டொலர் மட்டுமே செலவு செய்து உள்ளுர் மக்களின் உதவியுடன் 14 மணிநேரத்தில் படி கட்டியுள்ளார். பொது மக்களின் பாதுகாப்பிற்காக சொந்த செலவில் படி கட்டிய Adi Astlயை பாராட்டாத நகராட்சி அதிகாரிகள். அந்த படியை விரைவில் தகர்க்கும் படி கண்டித்துள்ளனர். ஏனெனில், அங்கு படி கட்ட சுமார் ... Read More »

கனடாவில் தனிநபரின் வருமான உதவித்தொகை அதிகரிப்பு: அரசு அதிரடி அறிவிப்பு

கனடா நாட்டில் தனிநபர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஏற்கனவே பெற்று வந்த அரசு உதவித்தொகையுடன் தற்போது 100 டொலர் கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடா நாட்டில் உள்ள பிரித்தானிய கொலம்பிய மாகாண அரசு தான் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரித்தானிய மாகாணத்தில் NDP கட்சி சார்ப்பாக முதலமைச்சராக பதவி வகித்து வரும் John Horgan என்பவர் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் வறுமையில் உள்ள தனிநபர் ஏற்கனவே 610 டொலர் வரை அரசு வருமான உதவித்தொகையை ஒவ்வொரு மாதமும் ... Read More »

எயர் கனடாவின் முக்கிய அறிவிப்பு

கனடாவில் இருந்து விமானம் மூலம் அமெரிக்காவுக்கு பயணிகள் புதிய பரிசோதனை முறைகளை எதிர்கொள்ளவுள்ளதால் இரண்டு மணி நேரங்களுக்கு முன்னர் பயணிகள் விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என எயர் கனடா மற்றும் வெஸ்ட் ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளன. அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் குறித்த பரிசோதனை முறைகள் சில நாட்களுக்கு முன்பு நடைமுறைக்கு வந்தது. குறிப்பாக மடிக் கணணிகள், டெப்லட் எனப்படும் வரைபட்டிகைக் கணினிகள் உள்ளிட்ட தனிப்பட்ட இலத்திரனியல் சாதனங்கள் தொடர்பில் அதிகரித்த பாதுகாப்பு விதிமுறைக்ள பின்பற்றப்படும் ... Read More »

NAFTA தொடர்பில் கனேடியர்களின் நிலைப்பாட்டை அறிய மத்திய அரசாங்கம் விஷேட திட்டம்

கனடா, அமெரிக்கா, மெக்சிக்கோ இடையேயான NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கை தொடர்பில், கனேடியர்களின் நிலைப்பாடு என்ன என்பதனை ஆராய்ந்து முடிவுகளை மேற்கொள்வதற்காக கனேடிய மத்திய அரசாங்கம் விஷேட திட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த பொதுமக்கள் கருத்தறியும் நடவடிக்கைகளில், பேச்சுவார்த்தையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய விடயங்கள், இந்த உடன்படிக்கையில் உள்ள எவ்வாறான விடயங்களை தொடர்ந்தும் பேண வேண்டும்?, எவ்வாறான விடயங்கள் மேம்படுத்தப்பட வேண்டும்?, எவ்வாறான புதிய விவகாரங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும்?, எவ்வாறான விவகாரங்கள் தற்போதய காலத்திற்கேற்ப நவீனமயப்படுத்தப்பட வேண்டும்? ... Read More »

அவுஸ்திரேலியாவில் பதவியை இழந்த கனடிய பிரஜை

அவுஸ்திரேலிய செனட்டரான லாரிஸ்ஸா வாட்டேர்ஸ் என்பவர் இரட்டைப் பிரஜாவுரிமை காரணமாக தன் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார் . இடதுசாரி கிரீன் கட்சியைச் சேர்ந்த இவர் பிறப்பால் கனடியர் ஆவார். அவுஸ்திரேலிய அரசியல் சட்டப்படி , இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர் கூட்டாட்சி அலுவலகத்தில் பணியாற்ற முடியாது . கடந்த வெள்ளியிலிருந்து , இரட்டைப் பிரஜாவுரிமை காரணமாக பதவி விலகும் இரண்டாவது செனட்டர் இவராவார் . ஏற்கனவே இவரது கட்சி உறுப்பினரான ஸ்காட் லுட்லாம் என்பவர் தன் பதவியை இராஜிநாமா செய்திருந்தார் . நியூ சிலாந்து ... Read More »

கனடாவில் சர்ச்சையை ஏற்படுத்திய இலங்கையர் மீதான கொலைக் குற்றச்சாட்டு விசாரணைகள்

கனடாவில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கையரது வழக்கு விசாரணைகள் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கனடாவில் குடியுரிமை பெற்ற இலங்கையரான தனபாலசிங்கம் சிவலோகநாதன் என்பவரின் வழக்கு விசாரணையே இவ்வாறு தாமதப்படுத்தப்பட்டுள்ளது. கொலைக் குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்த இலங்கையர் தொடர்பான வழக்குகளில், பாதுகாப்புக் குழு தனது குற்றச்சாட்டுகளை தாமதப்படுத்துவதில் முக்கிய பங்கை வகித்ததாக கியூபெக்கின் குற்றவியல் மற்றும் குற்றவியல் வழக்குகளின் இயக்குனர் குற்றம் சுமத்தியுள்ளார். சமீபத்தில் நாடு கடத்தப்பட்ட தனபாலசிங்கம் சிவலோகநாதனின் மீது கொலைக் குற்றச்சாட்டுக்களை தக்க வைத்துக் கொள்வதற்கான முடிவை ... Read More »

கனடாவில் புகலிடம் கோரியவர்களின் எண்ணிக்கை 5 மடங்காக அதிகரிப்பு

கனடா நாட்டில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ள துருக்கி நாட்டை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துருக்கியில் கடந்தாண்டு யூலை மாதம் ஜனாதிபதி எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கைப்பற்ற மாபெறும் புரட்சி வெடித்தது. ஆனால், துணிச்சலாக புரட்சியை எதிர்க்கொண்ட எர்டோகன் ஆதரவாளர்கள் சூழ்ச்சியாளர்களை கொன்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டனர். இச்சம்பவத்திற்கு பின்னர், ஆட்சியை கைப்பற்ற திட்டம் தீட்டிய சதிகாரர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியவர்களை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என எர்டோகன் உத்தரவிட்டார். ... Read More »

கனடாவில் பிறந்த குழந்தைக்கு பிரதமர் ட்ரூடோவின் பெயரை சூட்டிய பெற்றோர்

கனடா நாட்டில் புகலிடம் பெற்ற பெற்றோர் இருவர் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு அந்நாட்டு பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவின் பெயரை சூட்டி தனது நன்றியை தெரிவித்துள்ளனர். உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா மக்களுக்கு புகலிடம் அளிப்பேன் என தேர்தலுக்கு முன்னதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாக்களித்துள்ளார். இந்த வாக்கினை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சிரியாவை சேர்ந்த 33,000 அகதிகளுக்கு கனடாவில் புகலிடம் அளித்துள்ளார். இவர்களில் Afraa மற்றும் Moe Bilal என்ற தம்பதியும் ஆவார். 2016-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் கல்கேரியில் ... Read More »

எட்டோபிக்கோ பாலியல் துஷ்பிரயோகம்: அடையாளங்களை வெளியிட்டுள்ள பொலிஸார்

எட்டோபிக்கோ பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபரின் அங்க அடையாளங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். வெஸ்ட் மோல் மற்றும் பேர்னெம்தோப் வீதிப் பகுதியில், கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறித்த சிறுமியை அணுகிய இனந்தெரியாத ஒருவர், சிறுமியை பாலியல் ரீதியில் துண்புறுத்தியதாகவும், பின்னர் அங்கிருந்து டீஆறு ரக வாகனம் ஒன்றில் அவர் தப்பிச் சென்றுவிட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சந்தேக நபரை கைதுசெய்ய தீவிரம் காட்டி வரும் அதிகாரிகள் அவரின் அடையாளங்களை வெளியிட்டுள்ளனர். ... Read More »

புதிய ஆளுநர் ஜூலி பெயட்டினுக்கு வழங்கப்பட்டுள்ள சக்திவாய்ந்த அதிகாரங்கள்!

கனடாவின் புதிய ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் விண்வெளி வீரர் ஜூலி பெயட்டினுக்கு சக்திவாய்ந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. கனடாவின் அரசாங்க தலைவராக பொறுப்பு வகித்து வரும் பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத், இல்லாத நேரத்தில் கனடா நாட்டு அரசாங்க தலைவராக செயற்பட ஜூலி பெயட்டினுக்கே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்ற விவகாரங்களில் முடிவுகள் மேற்கொள்ளவும், அவசியம் என்றால் நாடாளுமன்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் அதிகாரம் உள்ளது. கனடா நாட்டு ஆயுதப்படைக்கு தளபதியாக இருப்பது மட்டுமில்லாமல், கனடா நாட்டின் பிரதமருக்கு இவர் தான் பதவி பிரமாணம் செய்து ... Read More »

Scroll To Top