Wednesday , May 24 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / கனடாச் செய்திகள் (page 242)

பதிவு வகை: கனடாச் செய்திகள்

Feed Subscription

கனடாவில் அனைத்துலக பெண்கள் மாநாடு

எதிர்வரும் மார்ச் மாதம் (March 1st) 01 ம் திகதி அனைத்துலகப் பெண்கள் மாநாடும் கனடாத் தமிழ்ப் பெண்கள் மேம்பாட்டு அமைப்பினரினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வானது இலக்கம் 2035 Kennedy Road, Scarborough, (Hwy 401 & Kennedy Road). Delta Toronto East Hotel. இல் நடைபெற உள்ளது. இம் மாநாட்டில் எமது தாயகப் பெண்களின் இன்றைய நிலை குறித்தும், அவர் தம் விடிவிற்காகவும், மற்றும் கனேடிய, அனைத்துலகப் பெண்கள் நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் பல மாற்றினப் பெண்கள் அமைப்புகளுடன் இணைந்து, மார்ச் மாதம் ... Read More »

நயாகரா நீர்வீழ்ச்சியும் உறைந்தது.

கனடாவில் கடந்த இரண்டு வாரங்களாக கடும்பனியால் சிக்கி தவிக்கும் அமெரிக்கா மற்றும் கனடாவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் இருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி முற்றிலும் பனியால் உறைந்துவிட்டதாக அதிர்ச்சி புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன. கனடா மற்றும் அமெரிக்காவின் பல பகுதிகளிலும், -20c பனி பொழிவதால் நயாகாரா நீர்வீழ்ச்சியில் விழும் தண்ணீர் முழுவதும் உறைந்து எல்லாம் ஐஸ்கட்டியாக மாறிவிட்டது. சுற்றுலா பயணிகள் வருகை குறைவடைந்துவிட்டது. இந்த பயங்கர பனியால் அமெரிக்கா மற்றும் கனடாவில் 240 மில்லியன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ... Read More »

கனடாவின் ஒன்ராறியா மாகாணத்திலுள்ள Markham Ward-05 கவுன்சிலர் பதவிக்கு சமூக சேவகர் திரு.ராஜ் சுப்பிரமணியம் (P.Eng.) மனுத்தாக்கல்…

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2014 ம் ஆண்டு இடம்பெற இருக்கின்ற மாநாகரசபைத் தேர்தல்கள் சூடுபிடித்திருக்கின்ற வேளையிலே வெற்றிடங்களை நிரப்புதவற்கு மனுத்தாக்கல் செய்யும் திகதியான ஜனவரி 2ம் திகதி பலர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளார்கள். அந்த வகையில் ரொரன்றோவில் தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவரும், சமூகத் தொண்டருமான திரு.ராஜ் சுப்பிரமணியம் (P.Eng.) அவர்களும் மார்க்கம் நகரசபையில் Ward-05  கவுன்சிலர் பதவிக்கு தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அவர் தனது உரையில் கூறியதாவது எம்மை நாமே ஆளும் ஆட்சியும் ஜனநாயக ரீதியாயிலான ஆட்சிமை ... Read More »

88 வது பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் ஜெயந்தி தினம் – 2013

இன்று சனிக்கிழமை 23/11/2013 மாலை 6.00 மணிக்கு பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் 88 வது ஜெயந்தி தினம் மார்க்கம் ஸ்ரீ சத்திய சாயி நிலையத்தினரால் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சிறுவர்களினது கலை நிகழ்ச்சிகள், பஜனை, ஊஞ்சல், மங்கள ஆரத்தி என பல நிகழ்வுகள் இடம் பெற்றன. இந்நிகழ்வுகள் யாவும் அனலை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. செய்தியாளர் – தாமரை. Read More »

நவரசங்களின் சங்கமம்;-

Oct – 27 2013 லன்று கனடாவில் இடம் பெற்ற ஆடல் அரங்கம் – 2013 எனும் நாட்டிய கலாமணிகளின் சங்கமாகிய நடன நிகழ்வுகள் யாவும் www.analaiexpress.ca மூலம் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும் அது தொடர்பான பதிவுகள் யாவும் ” நேரலை“ எனும் பதிவில் பார்வையிடலாம். அது தொடர்பான புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு- Read More »

அலையோசை – 12 நிகழ்வுகள் யாவும் நேரலையில்…!

எதிர்வரும் Oct 26, 2013 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் Glen forest Secondary School, 3575 Field gate Drive, Mississauga, Ontario, L4X 2J6, Canada வில் இடம் பெறவுள்ள அனலை உறவுகளின் இசை சங்கமமாகிய அலையோசை- 12வது நிகழ்வுகள் யாவும் புலம்பெயர் நாடுகளில் மற்றும் அனலைதீவில் வாழுகின்ற அனைவருக்குமாக www.analaiexpress.ca என்ற இணையத்தள நேரலை மூலமாக ஒளிபரப்பு செய்யப்படும் என்பதனை எமது வாசகர்களுக்கு அன்புடன் அறியத்தருகின்றோம். Read More »

அனலைதீவு கலாசார ஒன்றியம் – கனடா விடுக்கும் முக்கிய அறிவித்தல்

எமது வருடாந்த கலைநிகழ்வான அலைஓசை – 12 இந்த வருடம் October 12ம் திகதி இடம் பெறவுள்ளது. இக்கலை நிகழ்வில் நீங்கள் பங்குபெற்ற விரும்பினாலோ அல்லது நீங்கள் சார்ந்த நிகழ்ச்சிகள் ( உங்களது பிள்ளைகளினது நிகழ்ச்சிகள்) இடம்பெற விரும்பினால் September 30ம் திகதிக்கு முன்பாக எம்மைத் தொடர்பு கொண்டு நிகழ்ச்சி சம்பந்தமான விபரங்களைத் தந்துதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். இக்கலைவிழாவில் அலை ஓசை – 12 எனும் நூல் வெளியிடப்படவுள்ளது. இதற்குரிய ஆக்கங்களை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ September 30ம் திகதிக்கு முன்பாக எமக்கு தபால் ... Read More »

கனடாவில் பேருந்தும் பாரஊர்தி வண்டியும் மோதிய விபத்தில் ஈழத் தமிழ் பெண் பலி: 12 பேர் காயம்

TTC பேருந்தும் சிறிய பாரஊர்தி வண்டி ஒன்றும் மோதிக்கொண்டதில் பெண் ஒருவர் பலியாகி உள்ளதுடன, 12 பேர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் ஸ்காபரோவில் நேற்று செவ்வாய்க்கிழமை அதாவது 13/08/2013 காலை 11.40 இற்கு நடைபெற்றுள்ளது. பாரஊர்தி சாரதியின் கவனக்குறைவே இவ்விபத்திற்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது. இச்சாரதி தனது கைப்பேசியில் கதைத்தவண்ணம் தான் வந்த Steeles அவெனியூவினை விட்டு விலகி, பேருந்து வந்துகொண்டிருந்த Middle field  வீதியில் புகுந்தமையினால் இவ்விபத்து இடம்பெற்றதாக நேரில் கண்டவர்கள் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.   நேருக்கு நேர் இடம்பெற்ற இந்த விபத்தால், பேருந்தின் முற்பாகம் ... Read More »

கனடா- அனலைதீவு ஸ்ரீ பூரண புற்கலை சமேத ஹரிஹர புத்திர ஐயனாரின் தேர்த்திருவிழா நேரடி ஒலிபரப்பு

சைவமும் தமிழும் தழைத்தோங்கும் கனடிய மண்ணில் குடிகொண்டு அருள்பாலித்து கொண்டிருக்கும் கனடா-அனலைதீவு  ஶ்ரீ பூரண புற்கலை சமேத ஹரிஹர புத்திர ஐயனாரின் மகோற்சவ தோர்த்திருவிழா (July 21, 2013) ஞாயிற்றுகிழமை நேரடி ஒலிபரப்பு இடம்பெறும் என்பதை ஐயன் அடியார்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம். தேர் திருவிழா 7.00 AM மணிதொடக்கம் பச்சை சாத்துதல் வரை நேரடி ஒலிபரப்பு நடைபெறும். என்பதனை அனைவருக்கும் அறியத்தருகின்றோம். ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய முடியாத அன்பர்கள் வீட்டில் இருந்தபடி ஐயனின் திருவிழாவை கண்டு அவனருள் பெறுவோமாக…   www.analaiexpress.ca ... Read More »

கனடா- அனலைதீவு ஐயனாரின் மகோற்சவ பெருவிழா நேரடி ஒளிபரப்பு.

சைவமும் தமிழும் தழைத்தோங்கும் கனடிய மண்ணில் குடிகொண்டு அருள்பாலித்து கொண்டிருக்கும் கனடா-அனலைதீவு ஸ்ரீ பூரண புற்கலை சமேத ஹரிஹர புத்திர ஐயனாரின் மகோற்சவ பெருவிழா வரும் சனிக்கிழமை 13-07-2013 தொடங்கி பத்து தினங்கள் மிகவும் சிறப்பாக நடைபெற ஐயன் அருள் கிடைக்கப்பெற்றுள்ளது. நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கொடியேற்றத் திருவிழா நேரடி ஒலிபரப்பு analaiexpress.ca எனும் முகவரியினூடாக நேரடி ஒலிபரப்பு செய்ய ஐயன் அருள்பாளித்துள்ளார். சனிக்கிழமை கொடியேற்ற திருவிழா நேரடி ஒலிபரப்பு 8:00 am மணி முதல் 1:00 pm மணிவரை நேரடி ஒலிபரப்பு செய்யப்படும் ... Read More »

Scroll To Top