Sunday , October 22 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / கனடாச் செய்திகள் (page 258)

பதிவு வகை: கனடாச் செய்திகள்

Feed Subscription

இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி, உத்தியோகபூர்வ பயணமாக கனடா வந்தடைந்தார்!

இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி, உத்தியோகபூர்வ பயணமாக இன்று (14-04-2015) மாலை கனடா ஒடாவா வந்தடைந்தார் . இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி, மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று மாலை கனடா ஒடாவா வந்தடைந்தார். கடந்த 42 வருடங்களின் பின்னர் இந்திய பிரதம மந்திரி ஒருவர் மேற்கொள்ளும் முதல் இரு தரப்புப் பயணம் என்பதால் இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியப் பிரதம மந்திரியின் பயணத்தின்போது, பாதுகாப்பு, வணிகம், சுற்றுச் சூழல் என்பன உட்படப் பல விடயங்கள் குறித்தும் ஆராயப்படவுள்ளன. ... Read More »

20-மாணவர்களுடன் பாடசாலை பேரூந்து விபத்தில்…

கனடாவில் இன்று (14-04-2015) செவ்வாய்கிழமை காலை பாடசாலை பேரூந்து ஒன்று விபத்திற்குள்ளாகியது. வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளான சம்பவம் பிரம்ரனில் நடந்தது. பிரம்ரன் வெயஹில் அவெனியுவில் காலை 7-மணியளவில் இவ்விபத்த இடம்பெற்றுள்ளது. பேரூந்து கார் ஒன்றை இடித்து வீதிக்கு இழுத்து சென்றதுடன் இரண்டாவது காருடனும் மோதி மின்மாற்று பெட்டியொன்றையும் மோதி புற் தரையில் இறங்கியுள்ளது. இந்த சமயத்தில் பேரூந்தில் 20-மாணவர்கள் இருந்தனர் எனவும் எவரும் காயமடையவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் வசித்த மனிதர் ஒருவர் அவசர சேவை பின் கதவை திறந்து மாணவர்கள் வெளியேற ... Read More »

வாருங்கள் ஐயனின் வடம் பிடிப்போம்….!

இலங்கை திருநாட்டின் யாழ்-அனலைதீவில் கோயில்கொண்டு அருள்பாலிக்கும் பூரணை, புஷ்கலை சமேத ஸ்ரீ ஹரிஹர புத்திர ஐயனார் மீது பாடப்பட்ட பக்தி பாடல்களின் தொகுப்புகள்,  கனேடிய அனலைதீவு ஐயனார் ஆலயத்தில் வெளிவர இருக்கிறது. முதலாவதாக “பக்திப்பாமாலை” எனும் இசை இறுவெட்டு வெளியீட்டு விழா ஒன்றினை அனலை எக்ஸ்பிரஸ் ஊடக கிளை நிறுவகம் – கனடா எனும் சமூக நலன்சார் அமைப்பின் சார்பில் அனலையின் செய்திறன்மிக்க மைந்தர்களால் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இந்நிலையில் ஐயனின் பக்திப்பாமாலை இறுவெட்டுக்கான பாடல்வரிகளை சைவப்புலவர், பண்டிதர், கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு (அல்லையூர்) அவர்களும் ... Read More »

முதன் முதலாக அனலை ஐயன் புகழ் பாமாலை வெளியீடு-2015

அனைவருக்கும் வணக்கம்! அனலை எக்ஸ்பிரஸ் நிறுவனமானது கடந்த 2012 ம் ஆண்டளவில் தனது சேவையினை கனடிய மண்ணில் ஆரம்பித்து இன்று 03 வருடங்கள் பயணித்துள்ளது அதற்கு தங்களது மேலான ஒத்துழைப்பே காரணமாகும். இன்று வரலாற்றுச் சரித்திரத்தில் முதன் முதலாக ஈழமணித்திருநாட்டின்  சிறப்புமிக்க அனலைதீவு அருள்மிகு பூரணை புட்கலை சமேத ஸ்ரீ ஹரிஹர புத்திர ஐயனார் மீது பாடப்பட்ட அருள் சுரக்கும் அனலை ஐயனார் பக்திப்பாமாலை – 2015 என்ற இறுவெட்டு ஒன்றினை வெளியிட எல்லாம் வல்ல ஐயனார் அருள் பாலித்துள்ளார். இந்த இறுவெட்டினை வெளியீடு ... Read More »

அனலை ஐயனார் அருள் சுரக்கும் பக்திப்பாமாலை வெளியீடு!

ஈழத்தின் வடபால் யாழ் அனலையம்பதியில் கோயில் கொண்டு அருள்சுரக்கும் பூரணை, புஷ்கலை உடனுறை ஸ்ரீ ஹரிஹர புத்திர ஐயனார் மீது பாடப்பட்ட “பக்திப்பாமாலை” இசை  இறுவெட்டு வெளியீட்டு விழா-2015 இந்நிகழ்வினை அனலை எக்ஸ்பிரஸ் ஊடக நிறுவனம் கனடா ஏற்பாடு செய்துள்ளது. ஐயனார் மீது பாடப்பட்ட பதிகங்கள் இந்தியா, இலங்கை எனப்பரவலாக உள்ள போதும் இசை வடிவில் வெளிவந்தவை மிகச் சொற்பமே. அந்த வகையில் அனலைதீவு ஐயனாருக்கு பாடல் இயற்றி இசை அமைக்கும் பணி பக்தர்களால் பலமுனையில் முன்னெடுக்கப்பட்டது. இருந்தும் முழுமையான ஒரு படைப்பாக, முன்னோடியாக ... Read More »

கனடா-பரந்த விபச்சார வளையம் ஆர்சிஎம்பியினரால் உடைத்தெறியப்பட்டது.

நூற்றுக்கணக்கான ஆசிய பெண்களை விபச்சாரத்திற்காக கனடாவிற்குள் கடத்தி வந்த ஒரு கனடா-பரந்த விபச்சார வளையத்தை தாங்கள் முறியடித்துள்ளதாக ஆர்சிஎம்பி தெரிவித்துள்ளது. மார்ச் 27 தொடக்கம் ஏப்பரல் 1 வரையிலான காலப்பகுதியில் ரொறொன்ரோ பெரும்பாகம் மற்றும் மொன்றியல் பகுதிகளில் இருந்து ஆறு பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் முக்கிய பங்கு வகிப்பவர்கள் என்றும் பிரதான தலைவர்கள் ஒரு ஆசிய அடிப்படையிலான சர்வதேச குற்றவியல் அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு குறிப்பிடப்படாத காலகட்டத்தில் இவர்கள் 500-ற்கும் மேற்பட்ட பெரும்பாலான கொரியா மற்றும் சீனா நாட்டைச் சேர்ந்த ... Read More »

ஜ ஸ் அமைப்புக்கு எதிரான கனேடிய நடவடிக்கையை ஒரு வருட காலம் நீடிக்கும் பிரேரணைக்கு கனேடிய நாடாளுமன்றம் அங்கிகாரம்!

ஜ ஸ் அமைப்புக்கு எதிரான கனேடிய நடவடிக்கையை சிரியாவுக்கும் விரிவுபடுத்தி, அதை ஒரு வருட காலம் நீடிக்கும் பிரேரணைக்கு நாடாளுமன்றம் அங்கிகாரம் வழங்கியது. ஆளும் கொன்சவேற்றிவ் கட்சி அதற்கு ஆதரவாக வாக்களித்தது. என்டீபீ, லிபரல் கட்சி ஆகியன எதிராக வாக்களித்தன. புதிய அங்கிகாரத்திற்கு அமைவாக, கனேடியப் படைப் போர் விமானங்கள், IS அமைப்புக்கு எதிராக சிரியாவுக்குள்ளும் தாக்குதல்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. அத்துடன், தற்போது குர்திஸ் படையினருக்குப் பயிற்சி வழங்கும் 69 கனேடிய சிறப்புப் படையினர் தொடர்ந்து அங்கு தங்கியிருப்பதற்கும் அது வழிவகுக்கும். அடுத்த ஆண்டு ... Read More »

பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆளில்லா விமானங்களின் மூலம் பொதிகளை விநியோகிக்கும் பரிசோதனையில் அமசோன் (Amazon) நிறுவனம்!

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் கிராமப்புறம் ஒன்றில் ஆளில்லா விமானங்களின் மூலம் பொதிகளை விநியோகிக்கும் நடவடிக்கையை அமசோன் (Amazon) நிறுவனம் ,பரிசோதனை செய்து பார்ப்பதாக தெரியவந்தது. ஆனால், எந்த இடத்தில் பரிசோதனை இடம்பெறுகிறதென்ற விபரம் வெளியிடப்படவில்லை. அதற்கான அனுமதி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆந் திகதி வழங்கப்பட்டதெனவும், இவ்வாண்டு டிசம்பர் மாதம் 19 ஆந் திகதி வரை அந்த அனுமதி நடைமுறையில் இருக்குமெனவும் கனடா போக்குவரத்துப் பிரிவு தெரிவித்தது. ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்காவில் நிலவும் கட்டுப்பாடுகள் மிகவும் இறுக்கமானவையென அமசோன் கூறுகிறது. இணையத்தில் ... Read More »

சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – 2015

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் ,5ம் திகதிகளில் பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் உலக கிண்ண சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இலங்கை உட்பட பல நாட்டு வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். கனடா நாடு சார்பாக 11 போட்டியாளர்கள் இந்த உலக கிண்ண போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர். உலகத்தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையினால் நடாத்தப்படும் 3 வது உலககிண்ண போட்டி எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 4ம் ,5ம் திகதிகளில் பிரித்தானியாவில் உள்ள “The National Badminton Centre” Bradwell Road, Loughton, Milton Keynes, MK8 9 என்னும் ... Read More »

கனடாவில் இயங்கி வரும் ஸ்ரீ ஷீரடி சாய் பாபா நிலையம் நடத்திய மகிமைப் பெருவிழா!

கனடாவில் இயங்கி வரும் ஸ்ரீ ஷீரடி சாய் பாபா நிலையம் நடத்திய ஜெய் ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் “மகிமைப் பெருவிழா கடந்த 29ம் திகதி ஞாயிறு மாலை 5.00 மணி தொடக்கம் கனடா கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு நடன நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் ஆகியன இடம்பெற்றன. சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்ற ஜெய் ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் திருவுருவ ஊர்வலம் அனைவர் மனங்களையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது. அனைத்து ஏற்பாடுகளையும் நிர்வாகிகள் திரு திருமதி நரேன் தம்பதி சிறப்பாக செய்திருந்தார்கள் என்பது ... Read More »

Scroll To Top