Thursday , August 17 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / கனடாச் செய்திகள் (page 3)

பதிவு வகை: கனடாச் செய்திகள்

Feed Subscription

குளவி கூட்டை அகற்ற வைத்த தீயினால் எரிந்த வீடு

ஒன்ராறியோ- தன்ட பே என்ற இடத்தில் குடியிருப்பாளர் ஒருவர் குளவிக் கூட்டை அகற்ற தவறான-ஆலோசன முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார்.செய்த காரியம் என்ன வென்றால் தனது வீட்டிற்கு தீ வைத்துள்ளார். வீட்டிற்கு அருகாமையில் தரையில் இருந்த கூட்டை அழிக்க அதன் மேல் பெற்றோலை ஊற்றியுள்ளார் என தீயணைப்பு அதிகாரி ஜோன் ஹே தெரிவித்தார். இச்சம்பவம் திங்கள்கிழமை நடந்துள்ளது. தீ வேகமாக பரவி கூட்டிலிருந்து வீட்டையும் சூழ்ந்து சேதப்படுத்தி விட்டது. தீயணைப்பு பிரிவினர் தீயை அணைத்துவிட்ட போதிலும் வீட்டின் உட்புற சுவர்களையும் தாக்கிவிட்டது. தீயினால் காயங்கள் எதுவும் ... Read More »

உலகின் மிகப்பெரிய இதயம் ரொறொன்ரோ அருங்காட்சியகத்தில்

உலகின் மிகப்பெரிய இதயம், ரொறொன்ரோ றோயல் ஒன்ராறியோ அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 56 மில்லியன் வருடங்களாக உயிர்வாழும் உலகின் மிகப்பெரிய நீர்வாழ் உயிரினமான நீல திமிங்கிலத்தின் இதயமே இதுவாகும். மூன்று வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த 76.5 அடி கொண்ட நீல திமிங்கிலத்தை ஆராய்ச்சி செய்த போது, 180 கிலோகிராம் எடையுடைய இதயம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் அதன் பாகங்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டதோடு, எலும்புகளையும் அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் கொண்டுவரப்பட்ட இந்த இதயத்தையும் எழும்புகளையும் பெருமளவானோர் பார்வையிட்டு வருகின்றனர். இதுகுறித்து ஒன்ராறியோ அருங்காட்சியகத்தின் பாலூட்டும் உயிரினங்கள் ... Read More »

வேலை நேர்காணலிற்கு செல்ல கடையில் திருடியவருக்கு ஆடை வாங்கி கொடுத்த பொலிஸ் அதிகாரி

ரொறொன்ரோ பொலிஸ் அதிகாரி ஒருவர் கடையில் திருடிய ஒருவருக்கு சேர்ட் ஒன்றையும் ரை ஒன்றையும் வாங்கி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. இந்த இளைஞன் வேலை நேர்காணல் ஒன்றிற்கு செல்வதற்கு ஆடைகள் தேவைப்பட்டதால் இவ்வாறு செய்ததாக தெரிவித்ததால் இளைஞன் சரியான வாழ்க்கைப்பாதையில் செல்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுப்பதற்காக இதனை செய்ததாக அதிகாரி தெரிவித்தார். திங்கள்கிழமை தன்னையும் தனது சக அதிகாரி ஒருவரையும் யேன் வீதியில் அமைந்துள்ள வால்மார்ட் அழைத்து தங்கள் கடையில் ஞாயிற்று கிழமை இரவு திருட்டு சம்பவம் ஒன்று குறித்து தெரிவித்ததாக கான்ஸ்டபில் நிரன் ... Read More »

ஒன்ராறியோவின் பகுதிகளை தாக்கிய சூறாவளி

ஒன்ராறியோவில் ரொறொன்ரோ பெரும்பாகம் மற்றும் மஸ்கோகா பிரதேசத்தை வெள்ளிக்;கிழமை மாலை பலத்த சூறாவளி தாக்கியுள்ளது. இதன் காரணமாக 6,000ற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். இடியுடன் கூடிய பலத்த மழை அப்பகுதியை அடித்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. மரங்கள் முறிந்து விழுந்ததால் பாதைகள் தடைப்பட்டதுடன் காட்டேஜ்கள் பல சேதமடைந்துள்ளன. ஆகஸ்ட் மாத நீண்ட வார இறுதிநாட்கள் அண்மித்த வேளையில் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டிகளுடன் கூடிய மழை பெய்துள்ளது. 70 முதல் 80மில்லி மீற்றர்கள் அளவிலா மழை மத்திய ஒன்ராறியோவின் பகுதிகளில் ... Read More »

பெற்ற குழந்தையை கொன்று ஆயள் கைதியான தாயார்

தான் பெற்ற குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்ய தாயார் ஒருவருக்கு கனடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கனடாவில் உள்ள மனிடோபா நகரில் வசித்துவரும் 39 வயதுடை தாயார் ஒருவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தனது கணவருடன் வசித்துவரும் குறித்த பெண்ணுக்கு 2013 ஆம் ஆண்டு பெண்குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குறித்த குழந்தையை சரியாக பராமரிக்காமல் ஒவ்வொரு நாளும் சித்திரவதை செய்துவந்துள்ளார். இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு யூலை மாதம் 17 ஆம் திகதி குறித்த குழந்தையின் உடல் நலனில் பாதிப்பு ... Read More »

தற்காலிக தங்குமிடமாக மாற்றப்பட்ட மொன்றியல் ஒலிம்பிக் அரங்கம்

ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்ட மொன்றியல் விளையாட்டு அரங்கம், சட்டவிரோதமாக அமெரிக்க- கனேடிய எல்லையை கடந்து கியூபெக்கிற்கு வரும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தற்காலிக தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைக்கும் முகமாக குறித்த அரங்கத்தில் சுமார் 150 குடிசைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடியேற்றவாசிகள் பலரும் பேருந்துகள் மூலம் அரங்கிற்கு நேற்று அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உணவுப் பொருட்கள் செஞ்சிலுவை சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. அதேவேளை, மக்களுக்கான மலசலகூட மற்றும் குளியலறை வசதிகள் என்பனவும் அங்கே ... Read More »

பாலுணவிற்காக 225 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யும் சீனா

சீன கூட்டுத்தாபனமொன்று ஒன்ராறியோ கிழக்கில் அமைந்துள்ள Feihe International Inc நிறுவனத்திற்கு 225 மில்லியன் டொலர்களை முதலீடு செய்ய முன்வந்துள்ளது. சீனாவின் ஒரு குழந்தை கொள்கை அகற்றப்படுவதால் அதிகமான அளவு குழந்தை உணவு தேவைப்படுவதே இந்த முதலீடுக்கு காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது. 28,000 சதுர மீற்றர்கள் அளவில் உருவாகவுள்ள குறித்த ஆலையின் வேலைப்பாடுகள் 2019ஆம் ஆண்டு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இத்திட்டத்தின் மூலம் 200 பேர்களிற்கு உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி துறையில் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கனடாவின் மிகப்பெரிய வெளிநாட்டு ... Read More »

பாரிய போதைப்பொருள் கடத்தல்: ஹாலிஃபொக்ஸ் அதிகாரிகளினால் முறியடிப்பு

சொக்லெட்டு பார்களுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் நாட்டிற்குள் கடத்த முற்பட்ட ஒரு தொகை போதைப்பொருள் கனடாவின் நோவா ஸ்கோசியா மாகாணத்தின் ஹாலிஃபொக்ஸ் மாநகர எல்லை அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நகரின் துறைமுகத்திலுள்ள கப்பல் கொள்கலனொன்றிலிருந்து 200 கிலோகிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஒன்ராறியோவை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஒரு குறிப்பிடத்தக்க போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு என கனடா எல்லை பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். மேலும், போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதில் எல்லை பாதுகாப்பு ... Read More »

உலகில் முதல் ஒளிரும் நாணயம் கனடாவில்

இருளில் ஒளிரக்கூடிய நாணயத்தினை, உலகிலேயே முதன்முறையாக கனடா வெளியிட்டுள்ளது. கனடாவின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கனேடிய நாணய வாரியத்தினால் இந்த நாணயம் மக்கள் பாவனைக்காக வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு டொலர்கள் பெறுமதியான மூன்று மில்லியன் உலோக நாணயக் குற்றிகள் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன. பகல் வேளைகளில் சாதாரண நாணயக் குற்றிகளைப் போல் தோற்றமளிக்கும் இவை, இரவு வேளைகளில் ஒளிரும் சிறப்புத் தன்மையைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read More »

கனடிய பாலுணவிற்கு பெருந்தொகையை முதலீடு செய்யும் சீனா!

கனடாவின் பாலுணவு குறித்து பால் பொருட்கள் விநியோக துறைக்கு ஒரு அவமானம் என தெரிவித்தார் டொனால்ட் டிரம்ப். ஆனால் இப்போது அதனை பாரிய அளவில் விரும்புவது யார் தெரியுமா? சீனா! சீன கூட்டுத்தாபனம் ஒன்று ஒன்ராறியோ கிழக்கில் அமைந்துள்ள Feihe International, Inc-ற்கு முன்னெப்போதும் இல்லாத அளவு 225-மில்லியன் டொலர்களை முதலீடு செய்கின்றது. காரணம் சீனாவின் ஒரு-குழந்தை கொள்கை அகற்றப்படுவதால் அதிகமான அளவு குழந்தை-உணவு தேவைப்படுவதே காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது. இது எங்கள் நகரத்தின் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சித் திட்டம் என ... Read More »

Scroll To Top