Wednesday , May 24 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / கனடாச் செய்திகள் (page 30)

பதிவு வகை: கனடாச் செய்திகள்

Feed Subscription

ரொறொன்ரோ பெரும்பாகத்தை சூழ்ந்துள்ள அடர்ந்த மூடுபனி

ரொறொன்ரோ பெரும்பாகத்தில் காணப்படும் அடர்ந்த மூடுபனி காரணமாக தெரிவு நிலை கிட்டத்தட்ட பூஜ்ய தன்மையை அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரொறொன்ரோ பெரும்பாகத்திற்கு சனிக்கிழமை விடுக்கப்பட்ட மூடுபனி அறிவுறுத்தல் தொடர்ந்து அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.மதியத்தின் பின்னர் இந்நிலை மாறலாம் எனவும் அறியப்படுகின்றது. போக்குவரத்துக்கள் தாமதமாகலாம்.பயணங்கள் சில இடங்களில் அபாயகரமானதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பயணத்தின் போது பார்வை நிலை தெளிவற்று காணப்படுமாயின் தாமதப்படுத்துமாறு வாகன சாரதிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.தேவையேற்படின் நிறுத்தவும் தயாராக இருக்க வேண்டும். வெப்பநிலை 6 C ஆக காணப்படும் எனவும் தூறல் ஏற்படலாம் ... Read More »

மர்ம நோயினால் பாதிக்கப்பட்ட ஹம்பர் கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை 200ஐ எட்டியுள்ளது

ரொறொன்ரோ ஹம்பர் கல்லூரி வடக்கு வளாக மாணவர்களை பாதித்துள்ள இதுவரை கண்டுபிடிக்கப்படாத மர்ம நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 200ஐ எட்டியுள்ளதாக ரொறொன்ரோ பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் நோய்க்கான காரணம் குறித்த புலன்விசாரனையில் ஈடுபட்டுள்ள போதிலும் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு போகின்றது. உணவு நச்சுத்தன்மை காரணமாக இருக்கலாம் என ஆரம்பத்தில் கருதப்பட்ட போதிலும் நோயுற்றதற்கான  குறித்த சரியான காரணத்தை கண்டறியும் முயற்சி நடை பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் பரவுவதை தடுக்கும் முயற்சியில் ரொறொன்ரோ சுகாதார பிரிவு மற்றும் கல்லூரி முயன்று வருகின்றது. ... Read More »

கனடியத் தமிழ் அரசியல்வாதிகளில் சிறந்தவர் யார்? தெரிவாகின்றார் லோகன் கணபதி

இப்போதுள்ள தெரிவு செய்யப்பட்ட தமிழ் அரசியலாளர்களில் யார் சிறந்தவர் என்ற போட்டியேற்பட்டால் சிறப்புத் தெரிவாக தமிழர்களால் தேர்வு செய்யப்படுவராக மார்க்கம் நகராட்சியின் கவுன்சிலர் லோகன் கணபதி அவர்களே தெரிவாகுவார். குறிப்பாக மார்க்கம் நகராட்சி வடக்கு முதல்வர் விக்ணேஸ்வரன் கனடாவிற்கு வருவதற்காக விசாவைப் பெறுவதற்கான உத்தியோகபூர்வக் கடிதத்தைக் கொடுத்திருந்தது. இருந்த போதும் அவ்வாறு நகர விருந்தினாராக வந்த வடக்கு முதல்வரை பல நடவடிக்கைகளிற்கும் அவரது உத்தியோகபூர்வச் செயலாளரான நிமலன் பயன்படுத்தினார். இதனால் மார்க்கம் நகராட்சிக்கு எதுவித தீங்கும் இடம்பெற்று விடக்கூடாது என்று கருதிய மார்க்கம் நகராட்சி ... Read More »

நியுஃபவுன்லண்டில் பொது கட்டடங்கள் தீக்கிரை: ஒருவர் கைது

கனடா- நியுஃபவுன்லண்ட், மில்ரவுன் பகுதியில் பாடசாலை, நகர மணடபம் மற்றும் பொலிஸ் நிலையம் ஆகியன தீப்பிடித்துள்ளன. நேற்று இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நியுஃபவுன்லண்டின் தென் கரையில் அமைந்துள்ள மில்ரவுன் என்ற பகுதியிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் பாடசாலை முற்றாக தீக்கிரையாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஒருவரை கைது செய்ததாக தெரிவித்த பொலிஸார் மேலதிக தகவல் எதனையும் தெரிவிக்கவில்லை. தீ சம்பவம் ஏற்பட்ட பாடசாலையும் நகர மண்டபமும் அடுத்தடுத்து உள்ள போதிலும், பொலிஸ் நிலையம் சிறு தூரத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Read More »

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு கனேடிய பிரதமர் ரூடோ வாழ்த்து

அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) பதவியேற்ற டொனால்ட் ட்ரம்புக்கு, கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கனேடிய பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த இரு தலைவர்களும் நேற்று முன்தினம் தொலைபேசி வாயிலாக உரையாடினர் எனவும் குறித்த உரையாடல் எவ்வளவு நேரம் நீடித்தது என்பது தொடர்பில் திட்டவட்டமாக எதுவும் குறிப்பிட இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான பொருளாதார உறவுகள் தொடர்பில் இரு தலைவர்களும் உரையாடியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியாக ட்ரம்ப் ... Read More »

கனடாவில் தொடரும் சீரற்ற காலநிலை

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கியூபெக் மற்றும் ஒன்ராறியோ பகுதிகளில் உள்ள மோட்டார் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்குறித்த அறிவித்தலை கனடாவின் சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்டுள்ளது. குறித்த அறிவித்தல், நேற்று (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி மாலை 03.00 மணியளவில் விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நிலைமை இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Gatineau உட்பட கிழக்கு ஒன்ராறியோ மற்றும் ஒட்டாவா ஆகிய பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ... Read More »

கனடாவிற்கு அழைத்து வரப்படவுள்ள யாசிடி இன அகதிகள்

துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ள யாசிடி இன அகதிகளை, இவ்வருடம் பெப்ரவரி மாதமளவில் கனடா அழைத்து வருவதில் அரசு உறுதியாக உள்ளதாகக் கனடாவின் புதிய குடிவரவு அமைச்சராகப் பதவியேற்றுள்ள அஹ்மட் ஹுசேன் அவர்கள் தெரிவித்துள்ளார். அழைத்து வரப்பட உள்ள அகதிகளின் எண்ணிக்கை தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. யாசிடி இன அகதிகளை கனடா அழைத்து வரும் முயற்சிகள் தொடர்பான விபரங்களை விரைவில் அறிவிக்க உள்ளதாக CBC இற்கு அளித்த செவ்வி ஒன்றின் போது புதிய குடிவரவு அமைச்சர் தெரிவித்தார். யாசிடி இனத்தவருடன் தற்போது செயலாற்றும் கனேடிய அதிகாரிகளின் பாதுகாப்பைக் ... Read More »

‘ஆன்மீக ஊழல்’ மோசடி

கனடா-பிரம்ரனை சேர்ந்த மனிதன் ஒருவர் ‘ஆன்மீக ஊழல்’ பெயரில் பெண் ஓருவரை ஏமாற்றி நகைகள் பணம் உட்பட 61,000டொலர்களை பறித்துள்ளதாக பொலிசார் குற்றம் சாட்டியுள்ளனர். 2016 யூலை மாதம் இப்பெண் குறிப்பிட்ட மனிதருடன் கதைத்துள்ளார். அப்போது தான் கடவுளிற்கு அருகில் இருப்பதாகவும் அதனால் லாட்டரியில் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து ஒரு பெரிய தொகை பணத்தை வாங்கிய நபர் அப்பணத்தை நிலத்தில் போட்டு எரித்து கெட்ட ஆவியை எரிக்க போவதாகவும் பின்னர் அப்பணத்தை திரும்ப தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய பெண் நகைகளையும் ... Read More »

$87 ற்கு$1K வெகுமதி பெற்ற பணிப்பெண்

கனடா-வினிபெக் உணவக பணியாளர் வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து வாழ்க்கை-மாற கூடிய வெகுமதியாக 1,000டொலர்களை பெற்றுள்ளார். ஒரு $87.15 பில்லிற்கு பெண் ஒருவரின் இத்தகைய நன்கொடையை எண்ணி சந்தோசத்தில் அடைபட்டு கண்ணீர் சொரிந்தார் ஜெனிவர் பெயிட்டிஷ் என்ற பணியாளர். வினிபெக்கில் உள்ள மொங்கோஸ் கிறிஸ் உணவகத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. பெயிட்டிஷ் இரு வேலைகள் செய்து வந்தார். அதிகாலை 5.30ற்கு ஆரம்பித்து 45-நிமிடங்கள் பயணித்து பலசரக்கு கடையொன்றி வேலை அதனை தொடர்ந்து ஒரு மணித்தியால பயணத்தின் பின்னர் மொங்கோஸ் உணவக்தில்5.5மணித்தியாலங்கள் வேலை தினமும் செய்பவர். அன்றய தினம் வேலை ... Read More »

வாகனப் பயிற்றுவிப்பாளருக்கு வந்த சோதனை

ஸ்காபுறோ, விடோரியா பார்க் அண்ட் லாரன்ஸ் சந்திப்பிற்கு அருகாமையில் அமைந்துள்ள வாகன வீதிப்பரீட்சை நடைபெறும் நிலையத்தில் வீதிப்பரீட்சை எடுத்துக்கொண்ட ஒரு கற்றுக்குட்டி வாகன ஓட்டுநர் தனது பயிற்றுவிப்பாளருக்கு வாகனத்தால் மோதிய சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. மேற்படி இடத்தில் அமைந்துள்ள வாகன தரிப்பிடத்திற்கு வாகனத்தை ஓட்டிச்சென்ற நபர் ஒரு எல்லைக்கம்பம் மீது முதலில் தான் செலுத்திய வாகனத்தை மோதியுள்ளார். இதனால் ஏற்பட்ட சேதத்தை பார்ப்பதற்காக இறங்கிய பயிற்றுவிப்பாளர் மீது வாகனத்தை பின் நோக்கி செலுத்தி மோதியுள்ளார். இதன் பிற்பாடும் தொடர்ந்து வாகனத்தை பின்னோக்கி செலுத்திய ... Read More »

Scroll To Top