Wednesday , June 28 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / கனடாச் செய்திகள் (page 4)

பதிவு வகை: கனடாச் செய்திகள்

Feed Subscription

கனடாவில் ஆராய்ச்சியாளர்களுக்கு சலுகை

வெளிநாடுகளில் இருந்து கனடாவிற்கு வருகை தரும் ஆராய்ச்சியாளர்கள், அரச நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்களிலோ அல்லது ஆராய்ச்சி நிறுவனங்களிலோ 12 மாதங்களுக்கு ஒரு முறை 120 நாட்களுக்கு கனடாவில் தங்கி இருந்து ஆராய்சி நடவடிக்கைகளில் ஈடுபட கனேடிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஜூன் 12 முதல் அமுலுக்கு வந்துள்ள இந்த நடைமுறையினை கனேடியப் பல்கலைக்கழகங்கள் வரவேற்றுள்ளன. அத்தோடு, திறன் வாய்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் துரித விசா வழங்கும் திட்டமும் அமுலுக்கு வந்துள்ளது. இது குறித்து குடிவரவு அமைச்சர் அஹமட் ஹூசேன் கூறுகையில், “புதிய தொழில்வாய்ப்புக்களை ... Read More »

கிழக்கு ஆபிரிக்க நாடுகளுக்கு மத்திய அரசாங்கம் 119 மில்லியன் டொலர்கள் நிதியுதவி

மோசமான வரட்சி மற்றும் வறுமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு ஆபிரிக்க நாடுகளுக்கு மத்திய அரசாங்கம், 119 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்கவுள்ளதாக குடிவரவு அமைச்சர் அஹ்மட் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். கனேடிய மத்திய அரசாங்கத்தின் சார்பில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் அஹ்மட் ஹூசெய்ன், இது குறித்து கூறுகையில், “சர்வதேச அபிவிருத்தி நிவாரண நிதியம், கனேடிய சோமாலிய காங்கிரஸ், குளோபல் மெடிக் உள்ளிட்ட அமைப்புகள் மூலமாக இந்த உதவிகள் வழங்கி வைக்கப்படவுள்ளது. இவ்வாறான நிலையில் கனேடியர்களின் பெருந்தன்மை மற்றும் கனேடியர்களது இயலுமை ... Read More »

கனடாவின் அதிகபட்ச மற்றும் குறைவான முழு நேர சராசரி மணித்தியால சம்பளம் பெறும் பிரதேசங்கள்.

எண்ணெய் விலை குறைந்த காரணத்தால் அல்பேர்ட்டா சமுகங்கள் அதிக பட்ச முழு-நேர ஊதியங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றது. வேலை வாய்ப்பு மற்றும் சம்பள ஆய்வு சேகரித்த தகவல்கள்பிரகாரம்-மேலதிக நேரம் செயல் திறன் போனஸ்கள், கமிசன்கள் மற்றும் வெகுமதிகள் தவிர்ந்த-ஊழியங்கள் குறித்து நடாத்தப்பட்ட ஆய்வாகும். குறைந்த பட்ச மற்றும் சராசரி மணித்தியால ஊதியங்கள் நான்கு தசாப்பதங்களில் அதிக அளவில் மாற்றமடையவில்லை என காட்டுகின்றது. அல்பேர்ட்டா அனைத்து பகுதிகளையும் மிஞ்சி உயர் நிலையில் காணப்படுகின்றது. அல்பேர்ட்டாவில் ஏழு பொருளாதார பிரதேசங்கள் உள்ளன. இவற்றில் ஆறு முதல் 10ற்குள் அடங்குகின்றன. ... Read More »

கனடாவில் இரு ஈழத் தமிழர்கள் கொலையில் வெளிவரும் உண்மைகள்

கனடாவின் கேல்கரியில் இலங்கை தமிழர்களான தந்தை மற்றும் மகன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பு சந்திரபாபு (வயது 56) மற்றும் அவரது மகன் சந்திரபாபு பிரியந்தன் (வயது 25) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கேல்கரியின் Panorama Hills பகுதியில் உள்ள வீட்டில் சனிக்கிழமை (10/6/2017) காலை 5.15 மணியளவில் இருவரின் சடலம் மீட்கப்பட்டதாக கேல்கரி பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்திய பொலிசார், சம்பவ தினத்தன்று வீட்டில் பலர் கூடியிருந்த வேளை ... Read More »

கத்தி முனையில் ஏரிஎம் கொள்ளைகள்?

ரொறொன்ரோ-எற்றோபிக்கோ வடக்கு பகுதியில் கத்தி முனையில் மக்கள் பாவிக்கும் வங்கி மெசின்களில் இடம்பெற்றுள்ள ஏழு கொள்ளைகளை தொடர்ந்து பொலிசார் பொதுமக்களிற்கு பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். கடந்த மே மாதம் தொடக்கம் இத்தகைய கொள்ளை சம்பவங்கள் ஏழு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிசார் அனைத்து கொள்ளைகளும் நடு இரவிற்கும் காலை 7மணிக்கும் இடையில் றெக்ஸ்டேல் புளுவாட் தெற்கு மற்றும் Steeles அவெனியு  வடக்கு பகுதிகளில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒவ்வொரு சம்பவத்திலும் மூன்று ஆண்கள் முகமூடி அணிந்தவாறு கத்தியுடன் எரிஎம் மெசினில் இருந்து பணத்தை எடுத்தவர்களை கத்தி முனையில் ... Read More »

போலி தரையில் 43கிலோ கிராம் கொக்கெயின்!

ரொறொன்ரோ பியர்சன் சர்வதேச விமானத்தை வந்தடைந்து விமானம் ஒன்றின் போலித்தரையில் 43-கிலோகிராம் கொக்கெயினை கனடா எல்லை புற சேவை கள் அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் கடந்த மாதம் நடந்துள்ளது. இந்த கப்பல் கொள்கலன் டிரினிடாட் மற்றும் ரொபாகோ ஆகிய நாடுகளில் இருந்து அனுப்ப பட்டிருந்தது.அதிகாரிகள் கொள்கலனின் உள்ளடக்கங்களை திரையிடல் மூலம் மே மாதம் 5-ந்திகதி சோதித்த போது இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொள்கலனை மேலும் பரிசோதித்த போது போலியான தரை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதென செய்தி வெளியீடு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. போலி தரைக்கு கீழ் 38 ... Read More »

கனடா செல்ல முயற்சித்த தமிழ் இளைஞர்களின் பரிதாப நிலை!

கனடா அனுப்புவதாக தமிழ் இளைஞர்களின் பணத்தை மோசடி செய்த நபர் ஒருவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனடாவிற்கு செல்ல வீசா பெற்றுத் தருவதாக கூறி இரண்டு தமிழ் இளைஞர்களிடம் 34 லட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நேற்று இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை கொழும்பு கோட்டே நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். ஒரு சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறும் மற்றுமொரு பெண் சந்தேகநபரை பிணையில் விடுதலை செய்வதாகவும் கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார். கொலன்னாவ பகுதியைச் ... Read More »

Google போட்டியில் வென்றுள்ள ரொறொன்ரோ மாணவி!

ரொறொன்ரோ உயர்தர பாடசாலை ஒன்றின் மாணவி இன்றய நாளின் கூகுள் கனடா ராயல்டி கிரீடத்தை பெற்றுள்ளார். மடோனா இரண்டாம் நிலை கத்தோலிக்க பாடசாலை மாணவியான ஜனா பனெம் இளம் கலைஞர்களிற்கான் Google Doodle டிசைன் வடிவமைக்கும் போட்டியில்- தேடல் பொறி முன்பக்க பதாதை வடிவமைக்கும்-வெற்றி பெற்றுள்ளார். ஒரு பிரகாசமான எதிர்காலம் என்ற தலைப்பிலான வடிவமைப்பு புதன்கிழமை முகப்பில் இடம்பெறுகின்றது. 10.000டொலர்கள் பல்கலைக்கழக நன்கொடை மற்றும் இவரது பாடசாலை மற்றும் மடி கணனிக்காக 10.000டொலர்கள் மானியமாகவும் வழங்கப்படுகின்றது. மற்றய மூன்று மாணவர்களும் பரிசில்களை பெற்றுள்ளனர்.   Read More »

கால நிலை மாற்றத்தினால் கனடிய காலநிலை மாற்ற ஆய்வு ரத்து செய்யப்பட்டது

ஒரு 17-மில்லியன் டொலர்கள் ஆராய்ச்சி ஆய்வு என்ன முக்கிய காரணத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதே காரணத்தினால் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியுபவுன்லாந்தின் வடக்கு கடல் பகுதி வெப்பமடைந்து வரும் வெப்பநிலை காரணமாக எட்டு மீற்றர்கள் வரையிலான தடிப்பு கொண்ட அபாயகரமான ஐசினால் மூடப்பட்டடுள்ள காரணத்தால் ஆர்க்டிக் காலநிலை மாற்ற ஆய்வு கைவிடப்பட்டது. இந்த ஆய்வு திட்டத்திற்கு முன்னணியில நிற்கும் மனிரோபா பல்கலைக்கழகம் ஹட்சன் குடா திட்டம் ரத்து செய்யப்பட்டதென திங்கள்கிழமை அறிவித்துள்ளது. ஆராய்ச்சி நோக்கங்களிற்காக இப்பகுதிக்கு வந்தடைய வேண்டிய கப்பல் தீவிர பனி நிலைமைகளினால் வந்தடைய தாமதமாகலாம் ... Read More »

நச்சு இரசாயன பொருளை ஏற்றி வந்த டிரக் நெடுஞ்சாலையில் கவிழ்ந்துள்ளது.

எரியக்கூடிய அபாயகரமான இரசாயன பொருளை ஏற்றி வந்த ஒற்றை போக்குவரத்து டிரக் வண்டி ஒன்று குயின் எலிசபெத் வேயில் கவிழ்ந்ததால் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டதுடன் கட்டாயமான ஒரு வெளியேற்றமும் ஏற்படுத்தப்பட்டது. சென்.கத்தரினில் செவ்வாய்கிழமை பிற்பகல் இந்த விபத்து நடந்தது. விபத்து காரணமாக தீ ஏற்பட்டதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸ் சார்ஜன்ட் கெரி ஸ்மித் தெரிவித்துள்ளார். வாகனம் பொஸ்பைன் எனப்படும் ஒரு நச்சு பொருளை வண்டியில் கொண்டு வந்துள்ளது. எரியக்கூடிய ஒரு வகை நச்சுவாயு என கூறப்பட்டுள்ளது. அருகாமையில் அமைந்துள்ள குடியிருப்புக்கள் மற்றும் வியாபாரங்கள் ... Read More »

Scroll To Top