Saturday , October 21 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / கனடாச் செய்திகள் (page 5)

பதிவு வகை: கனடாச் செய்திகள்

Feed Subscription

கனேடிய குடியுரிமைக்கான புதிய விதிமுறைகள்

கனேடிய குடியுரிமைக்கான புதிய மொழி மற்றும் வதிவிட சட்டங்கள் எதிர்வரும் 11 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்படுகின்றது. குறுகியகால வதிவிட தேவை மற்றும் மொழி அறிவுசோதனைக்கான புதிய நடைமுறைகளும் இவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நிரந்தர குடியிருப்பாளர்கள் கடந்த ஐந்து வருடங்களில் மூன்று வருடங்கள் கனடாவில் வசித்திருந்தால் கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய குடிவரவு அமைச்சர் அஹமட் ஹுசைனால் கடந்த புதன்கிழமை மேற்படி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின் பிரகாரம், 55 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரிகள் மொழி மற்றும் அறிவு பரீட்சைகளிலிருந்து ... Read More »

நெடுஞ்சாலையில் வாகனம் கீழே பனிச்சறுக்கல்

ரொறொன்ரோ-கார்டினர் கடுகதி நெடுஞ்சாலை மேற்கு பகுதிக்கு அடியில் 250மீற்றர்கள் சறுக்கு பாதைக்கான கட்டுமான பணிகள் இடம்பெறுகின்றது. கடந்த சனிக்கிழமை பணியாளர்கள் கன்கிரீட்டை ஊற்றியுள்ளனர். சறுக்கு பாதை உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கபட இருப்பதால் பணிகள் துரிதமாக நடைபெறுகின்றது. 2018ன் ஆரம்பத்தில் இந்த வசதி திறந்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நெடுஞ்சாலைக்கு அடியில் வெறுமையாக கிடந்த பகுதியை களியாட்டம் மற்றும் கலை ஈடுபாடுகளின் ஒரு துடிப்பான ஒன்று கூடல் பகுதியாக மாற்றும் The Bentway project-ன் ஒரு பகுதியாக இந்த பனிச்சறுக்கு மைதானம் அமைகின்றது. இப்பகுதியை சுற்றியுள்ள ... Read More »

கனடாவின் வீடுகளின் விற்பனை உயர்வு

கனடாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மொன்றியலில் செப்டம்பர் மாதத்திற்கான வீடுகளின் விற்பனையானது, கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 893 வீடுகள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டைவிட ஆறு வீதம் அதிகமாகும். ஐந்து பெருநகரங்களில் நான்கு நகரங்களில் நீடித்த வளர்ச்சியைக் காணக் கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தவகையில், மொன்றியலின் வடக்கே லாவால் பகுதியில் வீடுகளின் விற்பனையானது 17 சதவீதம் உயர்வடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. Read More »

கனடாவில் தமிழர் மீது பலமுறை துப்பாக்கி சூடு ஆயுததாரிகள் அட்டகாசம்

கனடாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் தமிழ் வர்த்தகர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கனேடிய நேரடிப்படி இன்று மதியம் 1 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்கார்பரோ (Scarborough) Eglinton and Brimley சந்திப்பிற்கு அருகாமையில் அமைந்துள்ள பிரபல நகையகத்தில் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நகையகத்தின் உரிமையாளரான தமிழ் வர்த்தகர் மீது இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது. இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவம் குறித்து மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் தேடி ... Read More »

கனடா வைரம் 53 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலம்

உலகின் இரண்டாவது இடத்தை பெற்றுள்ள வைரம் 53 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. கனடாவில் உள்ள ஏல விற்பனை நிறுவனம் ஒன்று இந்த வைரத்தை ஏலத்தில் விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த வைரம் கனடாவின் பொடிஸ்வெனா சுரங்க பாதை தோண்டும் போது கண்டெடுக்கப்பட்டது. அந்த வைரம் 1109 கரட் கிரையைக் கொண்டது. இங்கிலாந்தின் நிறுவனம் ஒன்று குறித்த வைரத்தை 53 மில்லின் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் எடுத்துள்ளது Read More »

கனடா எல்லையில் மனித கடத்தல் முறியடிப்பு

வின்ஸ்டர்,ஒன்ராறியோ-கியுபெக்கை சேர்ந்த டிரக் சாரதிகள் இருவர் அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு 11 பேர்களை கடத்த முயன்றமை கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். டிரக் சாரதிகள் இருவரும் ஒன்ராறியோவிற்குள் நுழையும் போது அம்பாசடர் பால எல்லையில் கனடா எல்லை சேவைகள் ஏஜன்சியினரால் நிறுத்தப்பட்டனர். வாகனத்தில் சுமையை ஏற்றி வந்ததாக கூறப்படுகின்றது. இருவரினதும் நடவடிக்கைகள் அதிகாரிகளிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் டிரக்கை சோதனை இட்டனர். டிரக்கிற்குள் 11வெளிநாட்டவர்கள்-பெயர் குறிப்பிடபடாத- வாகனத்தின் சிலீப்பர் பகதிக்குள் மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 11 பேர்களும் அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்ப பட்டனர். 40 மற்றும் 50வயதுடைய இரு ... Read More »

கனடிய குடியுரிமைக்கான புதிய மொழி மற்றும் வதிவிட சட்டங்கள்

சீரமைக்கப்பட்ட கனடிய குடியுரிமை அமைப்பின் புதிய தேவைகள் அக்டோபர் 11லிருந்து வருகின்றது. குறுகிய கால வதிவிட தேவை மற்றும் மொழி மற்றும் அறிவு சோதனைக்கான புதிய தேவைகள் இவற்றில் அடங்குகின்றன. நிரந்தர குடியிருப்பாளர்கள் கடந்த ஐந்து வருடங்களில் மூன்று வருடங்கள் கனடாவில் வசித்திருந்தால் இவர்கள் கனடிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். குடிவரவு அமைச்சர் Ahmed Hussen- ஆல் புதன்கிழமை அறிவிக்கப்பட்ட விதிமுறைகளின் பிரகாரம் 55 வயதிற்கு மேற்பட்ட விண்ணப்பதாரிகள் மொழி மற்றும் அறிவு பரீட்சைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுவர். இந்த மாற்றங்கள் வருங்கால விண்ணப்பதாரர்களிற்கு ஒரு வரவேற்க ... Read More »

கனடாவின் 29 வது கவர்னர் ஜெனரல் பதவி ஏற்கின்றார்

ஒட்டாவா- முன்னாள் விண்வெளி வீரரான ஜூலி பெயிட்டி கனடாவின் 29-வது கவர்னர் ஜெனரலாக முறையான உறுதி மொழி எடுத்து பதவி ஏற்கும் பாரம்பரிய பொது விழா இன்று பாராளுமன்ற ஹில்லில் இடம்பெற்றது. 53-வயதுடைய இவர் அரசியின் பிரதிநிதியாக சட்ட மன்றத்தில் அமர்கின்றார். பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ அருகாமையில் நிற்க விசுவாசத்தின் சத்தியங்களை வாசித்து-கவர்னர் ஜெனரல் கனடாவின் தளபதி மற்றும் கனடாவின் பாரிய சின்னத்தை காப்பவர்-பதவி ஏற்றார். நீதிபதிகள், உச்ச நீதி மன்ற நீதிபதிகள், அரசியல் மற்றும் பழங்குடி தலைவர்கள் மற்றய பிரமுகர்களும் முன்னாள் ... Read More »

கனடிய விமான நிறுவனங்கள் இலவச மறு புக்கிங் வழங்குகின்றன

எய கனடா மற்றும் வெஸ்ட்ஜெட் போன்றவை நீடிக்கப்பட்ட விமான சேவை மாற்றங்களை வழங்குகின்றன. லாஸ் வேகசிற்கு மக்கள் பதிவு செய்துள்ள விமான பயணங்களை இரத்து செய்தல் மீள பதிவு செய்தல் போன்ற செயற்பாடுகளை கனடிய விமான சேவைகள் வழங்குகின்றன. ஞாயிற்றுகிழமை இரவு லாஸ் வேகசில் இடம்பெற்ற கொடிய துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தொடர்ந்தே இந்த ஒழுங்குகள் செய்யப்படுகின்றன. இரவு இடம்பெற்ற அனர்த்தங்களால் குறைந்தது 50பேர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அறியப்படுகின்றது. லாஸ் வேகஸ் விமானநிலையத்தில் தாமதங்கள் மற்றும் சேவைகள் இரத்து செய்யப்படுகின்றன. திங்கள்கிழமை லாஸ் வேகசிற்கு ... Read More »

கனடாவில் இந்த மொடல் அழகிக்கு இப்படி ஒரு விபரீதம்

கனடாவைச் சேர்ந்த மொடல் ஒருவர் கண்ணில் டாட்டூ வரைந்துகொண்ட காரணத்தால் அவர் தனது ஒரு கண்பார்வையை இழந்துள்ள துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. கனடாவைச் சேர்ந்த காட் காலிங்கர் என்ற 24 வயதுப் பெண் மொடலாக இருக்கின்றார். இவர் சமீபத்தில் தனது கண்ணில் டாட்டூ வரைந்துகொண்டதால் ஒரு கண் பார்வையை இழந்துள்ளார். கண்ணை இழந்த நிலையில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக அவர் சமூக ஊடகங்களில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். கண்ணில் டாட்டூ வரைந்துகொள்வது எப்போது சாதாரண நிகழ்வாக மாறியுள்ளது. என் வாழ்க்கையில் இப்படி ஒரு கொடூரம் ... Read More »

Scroll To Top