Saturday , April 29 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / இலங்கைச் செய்திகள்

பதிவு வகை: இலங்கைச் செய்திகள்

Feed Subscription

ஏற்றுமதி இல்லாத அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது

ஏற்றுமதி இல்லாமல் அபிவிருத்தி ஒன்றை இந்த நாட்டில் எதிர்பார்க்க முடியாது என்று பிரதி வௌிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார். ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை இலங்கைக்கு மீள வழங்குவதற்கு எதிரான யோசனை மீது ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நேற்று நடந்த வாக்கெடுப்பு மூலம் மேலதிக 317வாக்குகளால் அந்த யோசனை தோற்கடிக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பு இடம்பெற்ற போது பிரதி வௌிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவொன்று அங்கு சென்றிருந்தது. இது தொடர்பாக இன்று வௌிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த பிரதி வௌிவிவகார ... Read More »

நாட்டில் பட்டதாரிகளின் பற்றாக்குறை

தற்போது நாட்டில் தொழில் தேவைகளுக்கு ஏற்ற பட்டதாரிகளின் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சர மஹிந்த அமரவீர கூறியுள்ளார். இதன்காரணமாக சில அரச நிறுவனங்களில் தற்போதும் கூட வெற்றிடங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். Read More »

எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்

எதிர்காலத்தில் ஏற்படும் நீர் பற்றாக்குறை காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார். அந்த சவாலுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கான தீர்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படாத போதிலும் நீரை பாதுகாத்துக் கொள்வதற்கான சரியான முறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குருணாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். Read More »

இரு மாதங்களாக தொடரும் வடக்கு மக்களின் போராட்டங்கள்

 கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் தமது குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும் அடிப்படை வசதிகள் நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன இதுவரை கிடைக்கவில்லை. எனவே கடந்த பல வருடங்களாக அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம். இனியும் வாழ முடியாது தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை வழங்குங்கள் எனக் கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (29) சனிக்கிழமையுடன் முப்பத்தொன்பதாவது நாளாக தொடர்கின்றது. அத்துடன் தமக்கான காணி உரிமம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என ... Read More »

ஆட்சேபனைகளை தவிர்க்கும் யோசனை அரசிடம் இல்லை

பொது ஆட்சேபனைகளை தவிர்க்கும் யோசனை அரசாங்கத்திடம் இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பகிஸ்கரிப்பு செயற்பாடுகளின் போது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாத அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அமைச்சர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நேற்று (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த கருத்துக்களை வெளியிட்டார். எவ்வாறாயினும், தொழிற்சங்கங்களை ஒழிக்கும் வகையில் செயற்படும் அரசாங்கத்திற்கு ஒன்றிணைந்த எதிர்கட்சி ஒருபோதும் இடமளிக்காது என ... Read More »

ரகசிய தகவல் வழங்கியவர் மர்ம மரணம்

சட்ட விரோதமான முறையில் மணல் ஏற்றி;ச் செல்லும் லொறியொன்றை பொலிஸாரிடம் சிக்கவைத்த ரகசிய தகவல் வழங்கும் ஒருவர் மர்மமான முறையில் மரணமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் துரித விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கருவலகஸ்வௌ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் புத்தளம் – தப்போவ- பாவட்டாமடுவைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. நேற்று மாலை (27) கருவலகஸ்வௌ – தப்போவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர், பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக பொலிஸாருக்கும், அரச நிறுவனங்களுக்கும் ரகசியமாக அறியத் தருபவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ... Read More »

46 இலங்கை அகதிகள் நாடு திரும்பினர்

தமிழகத்தில் அகதி முகாம்களில் இருக்கின்ற இலங்கை அகதிகள் 46 பேர் நேற்று வியாழக்கிழமை இலங்கைகை வந்தடைந்ததாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ஐநாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் உதவியுடன் அவர்கள் நாடு திரும்பியுள்ளனர். திருச்சியிலிருந்து இலங்கை விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் மூலம் அவர்கள் இலங்கை திரும்பியுள்ளனர். நாடு திரும்பியவர்களுள் திருச்சி மாவட்டம் வாழவந்தான்கோட்டை அகதிகள் முகாமைச் சேர்ந்த ரா. ரவிக்குமார் மற்றும் குடும்பத்தினர் 4 பேர், ஈரோடு பவானிசாகர் முகாமிலிருந்து நா. சண்முகப்பிரியன் (23), புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லை அகதிகள் முகாமைச் சேர்ந்த நா. ... Read More »

போராட்டங்களினால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தடுக்க விசேட செயலணி

திடீர் வேலைநிறுத்தப் போராட்டங்களினால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையில் விசேட இராணுவ செயலணியொன்று உருவாக்கப்படவுள்ளது. திருகோணமலை எண்ணெய்க் களஞ்சியத் தொகுதி தொடர்பில் இந்தியாவுடன் மேற்கொள்ளப்படவுள்ள உடன்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் முன்னெடுத்த பணிநிறுத்த போராட்டத்தின் எதிரொலியாகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முன்னறிவித்தலின்றி பல்வேறு தரப்பினர்களினாலும் முன்னெடுக்கப்பட்டுவரும் தொழிற்சங்க நடவடிக்கைகளினால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில், இவ்வாறான போராட்டங்களால் ஸ்தம்பிதமடையும் சேவைகளை, குறித்த செயலணியை கொண்டு தடையின்றி முன்னெடுத்துச் செல்லும் ... Read More »

மீதொட்ட அனர்த்தத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் வழங்கி வைப்பு

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை வழங்கும் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக 65 குடும்பங்களுக்கான வீடுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கேட்போர்கூடத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வின் போதே குறித்த வீடுகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் வீடுகளை இழந்த 98 குடும்பங்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி அரசின் திட்டத்தின் முதற்கட்டமாக 30 வீடுகள் கடந்த வாரம் வழங்கிவைக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதற்காக அரசாங்கம் ... Read More »

பிரமித் பண்டார மாகாண சபையின் அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா

மத்திய மாகாண சபையின் உறுப்பினர் பிரமித் பண்டார மாகாண சபையின் அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். பிரமித் பண்டாரவின் தந்தையான ஜனக பண்டார தென்னகோனை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கியதன் காரணமாக பிரமித் பண்டார மாகாண அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். Read More »

Scroll To Top