Friday , October 20 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / இலங்கைச் செய்திகள் (page 10)

பதிவு வகை: இலங்கைச் செய்திகள்

Feed Subscription

எந்தவொரு இராணுவ அதிகரியும் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கு எதிர்ப்பு

இராணுவத்தில் இருக்கின்ற சில குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கூறினால், முழு இராணுவ வீரர்களையும் குற்றவாளிகளாக சித்தரிக்க கூட்டு எதிர்க்கட்சி முயற்சிப்பதாக பீல்ட் மாசல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். கிரிபத்கொட பிரதேசத்தில் வைத்து ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அதேநேரம் எந்தவொரு இராணுவ அதிகாரியும் சர்வதேச யுத்த நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவதை தான் எதிர்ப்பதாக கூறினார். எனினும் குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக நாட்டின் சட்டமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதேவேளை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் புத்த பிக்குகள் தொடர்பில் ... Read More »

என்னைப் போல் ஒரு தாயும் அழக்கூடாது – வித்யாவின் தாய் உருக்கம்

புங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு யாழ் மேல் நீதிமன்ற ட்ரயல் அட்பார் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டது. இதன்போது அங்கு வருகை தந்திருந்த வித்யாவின் தாய் ஊடகங்களிடம் மிகவும் உருக்கமாக பேசினார். இந்த தண்டனை வழங்கப்பட்டாலும், தனது மகள் மீண்டும் திரும்பி வரப் போவதில்லை என்றும், இது சமூகத்துக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் என்றும் அவர் கூறினார். Read More »

வித்தியா கொலைக் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு மலையக மக்கள் பாராட்டு

படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா வழக்கு தொடர்பில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு மலையக மக்கள் நீதிக்கு தலை வணங்கி பாராட்டுகின்றனர். கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் கூட்டு வன்கொடுமையின் பின் மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்த கொலையுடன் சம்பந்தப்பட்ட ஏழு பேருக்கு இன்று மூன்று நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பல வருட காலமாக இந்த வழக்கின் தீர்ப்பு எப்போது வரும் என்று எதிர்பார்த்திருந்த மலையக மக்கள் இன்று காலை முதல் ஊடகங்களின் ஊடாக வெளியான செய்தியை கேட்டு எந்த ... Read More »

அரிசியை இறக்குமதி செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு

ஐந்து மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களில் அரிசி, வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு போன்றவற்றை குறைந்த விலையில் விற்பனை செய்யுமாறு, அவர் பணித்துள்ளதாகவும், ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. Read More »

வித்தியா வழக்கு: 14 நாட்களுக்குள் மேன் முறையீடு

புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை செய்யப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, 14 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்யவுள்ளதாக, தண்டிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி மஹிந்த ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார். நேற்றையதினம் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், யாழ் மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். Read More »

இலங்கை – ஜேர்மன் பிரஜைகள் மோதல்: விசாரணை ஆரம்பம்

ஜேர்மன் பிரஜை மற்றும் இலங்கையர் ஒருவருக்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோதல் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, தங்கொட்டுவை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஹால்தடுவன பகுதியில் தங்கியிருந்த ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த 60 வயதான நபருக்கும், கம்பளை பகுதியைச் சேர்ந்த 37 வயதான இலங்கையருக்கும் இடையில், நேற்று மாலை தங்கொட்டுவை பகுதியில் வைத்து இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும், குறித்த ஜேர்மன் பிரஜை இலங்கைப் பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த வேளை, வாகன நெரிசல் ... Read More »

வௌிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி மோடி: ஒருவர் கைது

கொலன்னாவ – மீதொட்டமுல்லை வீதி பகுதியில் போலி வௌிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தை நடத்திச் சென்ற ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ​தென்னாபிரிக்கா, உகண்டா போன்ற நாடுகளில் வேலை வாய்ப்பினை பெற்றுத் தருவதாக கூறியே இவர் மோடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், கைதுசெய்யப்பட்டவர் குறித்த நிறுவனத்தில் பிரதான நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றிய ஒருவராகும். சந்தேகநபர், புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு வேலை ... Read More »

கின்னஸ் சாதனை நிகழ்வை முறையாக ஒழுங்கு செய்திருந்தால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது

கண்டியில் இடம்பெற்ற கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்வு ஒன்றில் மாகாண முதலமைச்சர் தலைமை தாங்கியது தொடர்பில், கடந்த ஒரு வார காலமாக ஊடகங்கள் மற்றும் ஏனையோரால் விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றது. இது, தனிப்பட்ட ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வில் மணமகள் அணிந்திருந்த 3.8 கிலோ மீற்றரான சேலையின் முந்தாணையை, சீருடை அணிந்த பாடசாலை மாணவர்கள் காலை முதல் மதியம் வரை தாங்கி நின்றமையே விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இந்தநிலையில், தனிப்பட்ட ஒருவரின் நிகழ்ச்சி அல்லாமல் இந் நிகழ்ச்சியை நிறுவியிருந்தால், இந்த பிரச்சினை வந்திருக்காது என, மத்திய மாகாண ... Read More »

தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கடத்தப்பட்டதில் கடற்படை அதிகாரிகளுக்கு தொடர்பு

கடந்த 2008 -ஆம் ஆண்டு கொழும்பு நகரில் 11 தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போனமை தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்படையின் முன்னாள் ஊடக பேச்சாளர் டி.கே.பி. தசனாயக்க உற்பட 6 கடற்படை அதிகாரிகள் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதை நிருபிக்க தேவையான ஆதாரங்கள் இருப்பதாக சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். தனக்கு பிணை வழங்குமாறு கோரி சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் தாக்கல் செய்த மனுக்கள் இன்று விசாரணைக்கு ஏடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த ... Read More »

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கின்ற மழைவீழ்ச்சி எதிர்வரும் தினங்களுக்கும் இதேபோன்று தொடருமானால் பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாளுமாறு குறித்த பிரதேச மக்களிடம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது. Read More »

Scroll To Top