Wednesday , October 18 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / இலங்கைச் செய்திகள் (page 2)

பதிவு வகை: இலங்கைச் செய்திகள்

Feed Subscription

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியை பிரத்தியேகமாக சந்திக்க வேண்டும் என விடுத்தக் கோரிக்கைக்கு அமைய, இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. மேலும், இதன்போது ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியிடம் தங்களின் பிள்ளைகள் இரகசிய முகாம்களில் இன்னும் இருப்பதாக கூறியுள்ளனர். இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, சிறப்பு வாகன ஏற்பாடும் பொலிஸ் பாதுகாப்பும் வழங்குகிறேன் நீங்கள் (காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்) எங்கு இரகசிய முகாம் இருக்கிறதோ அங்கு ... Read More »

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக மட்டில் போராட்டம்

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி, மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்பாக இந்த கவன ஈர்ப்பு போராட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் எதுவித விசாரணைகளும் இன்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி, வடக்கில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு ஆதரவாக இந்த கவன ஈர்ப்பு போராட்டம் மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் ... Read More »

மொழி மூலம் மக்களை பிரிக்க எண்ணுவது தவறு

உலகில் மிகப் பழமையான தமிழ் மொழியின் மூலம், இன ஐக்கியத்தையும் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையினையும் ஏற்படுத்த முடியும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற தேசிய தமிழ் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றுகையில், விவசாயத்தை முன்னேற்றுவதற்கு கமத்தொழில் திணைக்களத்தின் ஊடாக பல நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். காலை விவசாயிகளை சந்தித்த போது, பல விதமான வேண்டுகோள்களை முன்வைத்தார்கள். வெளிநாட்டில் இருந்து உருளைக்கிழங்கினை இறக்குமதி செய்ய வேண்டாம். தேவையான உருளைக்கிழங்கினை தாம் தருவதாக ... Read More »

அரசியல் கைதிகள் விடுதலை பற்றி வடக்கு ஆளுநருடன் சந்திப்பு

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பில் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் ஆளுநர் றெயினோல் குரேவை சந்தித்து கலந்துரையாடினர். சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் கிஸோர், மாகாணசபை உறுப்பினர் கஜதீபன், வலிதெற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் பிரகாஸ், மற்றும் பலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். ஆர்பாட்டக் காரர்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடவுள்ளதாக ஆளுநர் உறுதியளித்தார். Read More »

ஜனாதிபதி வருகைக்காக கிளிநொச்சியில் பொலிசார் குவிப்பு

கிளிநொச்சியில் நாளை (14) ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்விற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்புாது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருவேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக அதிகளவான பொலிசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நகர் உட்பட பல பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த காலங்களைப் போன்றல்லாது இராணுவத்தினரின் பிரசன்னம் குறைவாகவே உள்ளதுடன், அதிகளவில் பொலிசாரே பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது. Read More »

சில பிரதேசங்களளுக்கு மண் சரிவு எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்திற்குள் 100-150 மில்லிமீற்றர் அளவு மழை வீழ்ச்சி பதிவாகினால் சில பிரதேசங்களில் மண் சரிவு ஏற்படலாம் என்று அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சப்ரகமுவ மற்றும் களுத்துறை, காலி, மாதறை ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு கடும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக நெலுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் மண் சரிவு ஏற்படும் அபாயம் நிலவுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. Read More »

கப்பம் பெற முயற்சித்த மூன்று பேர் கைது

கப்பம் பெற் முயற்சித்த நபர் ஒருவர் கொட்டாவ, மாகும்புர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், மாகும்புர பிரதேசத்தில் தொலைபேசி மூலம் மிரட்டி நபர் ஒருவரிடம் கப்பம் பெற முயற்சித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பன்னிப்பிட்டிய, பொரள்ளை வீதி பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இது தவிர குருணாகல் பிரதேசத்தில் நபர் ஒருவரை கடத்திச் சென்று 3 இலட்சத்து 80,000 ரூபா கப்பம் பெற முயற்சித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொல்பிட்டிகம பிரதேசத்தில் வசிக்கும் 27 மற்றும் 28 ... Read More »

காங்கேசன்துறை கடற்பரப்பில் கேரளா கஞ்சா

யாழ் காங்கேசன்துறை கடற்பரப்பில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட பொதியிலிருந்து நூற்று ஐம்பத்து மூன்று கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பிற்குட்பட்ட பகுதியில் அநாதரவாக காணப்பட்ட பொதி ஒன்று தொடர்பில் தகவலறிந்த கடற்படையினர் நேற்று மாலை குறித்த பொதியை சோதனைக்குட்படுத்தினர். இதன்போதே குறித்த பொதியிலிருந்து 153 கிலோ கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த பொதியை கடத்திவந்த நபர்கள் கடற்படையினரின் வருகையை அறிந்து அதை கைவிட்டு சென்றிருக்கலாம் என தரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரளகஞ்சா தற்போது யாழ் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ... Read More »

வாக்காளர் பெயர் பட்டியல் இன்று இறுதி செய்யப்படும்

2017 ஆம் வருடத்தின் வாக்காளர் பெயர் பட்டியல் இன்று (12) இறுதி செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட செயலாளர் காரியாலயங்களில் குறித்த பணி இடம்பெறவுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. 2017 வாக்காளர் பெயர் பட்டியல் தொடர்பான அனைத்து திருத்தங்களும் நேற்று (11) இறுதி செய்யப்பட்டதாக தேர்தல் செயலகத்தின் ஊடகப் பேச்சாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். Read More »

மாநகர, நகர, பிரதேச சபைகள் திருத்தச் சட்டத்தில் இன்று கையெழுத்து

மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று கையெழுத்திடவுள்ளார். அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் அண்மையில் குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, அது சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய, சபாநாயகர் இதில் கையெழுத்திட்டவுடன் குறித்த சட்ட மூலம் வர்த்தமானியில் வௌியிடப்படும். Read More »

Scroll To Top