Wednesday , April 26 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / இலங்கைச் செய்திகள் (page 20)

பதிவு வகை: இலங்கைச் செய்திகள்

Feed Subscription

பொறுப்புக்கூறல் விடயத்தை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்: கூட்டமைப்பு திட்டவட்டம்

போருக்குப் பின்னரான நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுதல் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பின்றி, தமது திட்டத்திற்கேற்ப உள்ளக விசாரணையே முன்னெடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச ... Read More »

இலங்கையர்களுடன் கடத்தப்பட்ட கப்பல் கப்பம் இன்றி விடுவிப்பு

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட வர்த்தக கப்பலில் இருந்த எட்டு இலங்கையர்களும் கப்பம் இன்றி பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளதாக கப்பல் தலைவர் நிக்கலஸ் அந்தோனி தெரிவித்துள்ளார். சோமாலிய படையினருக்கும், கடற்கொள்ளையர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து எட்டு இலங்கை பணியாளர்களும், கப்பலும் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்களுக்கு சோமாலிய அரசாங்கத்தினால் மன்னிப்பு வழங்கவும் இணங்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த கப்பல் ஒலூலா நகர கடற்பரப்புக்கு அருகில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீட்க சோமாலிய படையினர் தாக்குதல்களை நடத்தினர். எனினும் ... Read More »

இலங்கைத் தமிழருக்காக 116 கோடி ரூபா

தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்ப்பட்டுள்ளதோடு, அகதிகளின் நலனுக்காக 116 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் 2017-18ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிச்சாமி அரசின் சார்பில் தாக்கல்செய்யப்படும் முதலாவது வரவு செலவு திட்டம் இதுவாகும். இந்த வரவு செலவு திட்ட உரையாற்றிய ஜெயகுமார், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் இலங்கைத் தமிழ் அகதிகளின் நலனுக்காக 116 கோடி ... Read More »

திருகோணமலையில் 06 வயது சிறுமி டெங்கு காய்ச்சலினால் உயிரிழப்பு

திருகோணமலையில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். திருகோணமலை, ஶ்ரீ சன்முக வித்யாலயத்தில் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். திருகோணமலை, உவர் மலை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த சிறுமி அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். இதன் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கிழக்கு மாகாணத்தில் சுமார் நான்காயிரம் பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக மாகாண சமூக வைத்திய நிபுணர் டாக்டர் செ. அருட்குமரன் தெரிவித்தார். அதில் ... Read More »

பஞ்சிகாவத்தையில் மோசடியில் ஈடுபட்ட 30 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

கொழும்பு, பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் மோட்டார் வாகன உதிரிப்பாகங்கங்களை விற்பனை செய்யும் 30 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு கூறியுள்ளது. அந்தப் பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்களை நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் நேற்று சோதனைக்கு உட்படித்தியிருந்தனர். இதன்போது, சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட வாகன உதிரிப்பாகங்கங்கள், ஜப்பான் மற்றும் ஜேர்மன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுதல், விலை குறிப்பிடப்படாமல் விற்பனை செய்யப்படுதல் போன்ற மோசடிகளில் ஈடுபடுகின்ற வர்த்தகர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு விற்பனைக்கு தயாராக ... Read More »

யாருடைய அழுத்தத்திற்கும் அஞ்சி கலப்பு நீதிமன்றத்தை உருவாக்க மாட்டோம்: அரசாங்கம் திட்டவட்டம்

எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படினும் இலங்கையில் எந்த தருணத்திலும் கலப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட மாட்டாது என்று அரசாங்கம் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “மனித உரிமை விவகாரம் தொடர்பில் கலப்பு நீதிமன்றத்தையோ, சர்வதேச நீதிபதிகளையோ அனுமதிக்கப் போவதில்லை. இலங்கையின் உள்விவகாரங்களைக் கையாளக்கூடிய இயலுமை அரசாங்கத்துக்கு உள்ளது. இந்த நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கமும் காணப்படுகிறது” ... Read More »

ஓரங்கட்டப்படும் சிறுபான்மையினர் குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்: ரீட்டா

திட்டமிடப்பட்ட சமூக மற்றும் அரசியல் ஓரங்கட்டுதலுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் சிறுபான்மை மக்களை பாதுகாப்பதற்கான உடனடியான மிக முக்கியமான வேலைத்திட்டங்கள் குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என சிறுபான்மை மக்கள் தொடர்பில் ஆராயும் ஐ.நா. சபையின் விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடரின் நேற்றைய (புதன்கிழமை) அமர்வில், இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், வடக்கு- கிழக்கிலிருந்து ராணுவத்தை அகற்றுதல், காணாமல் போனோர் விவகாரம், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் ... Read More »

ஆட்டோவில் சென்றவர் மீது துப்பாக்கிச் சூடு

இங்கிரிய – ஹதபான்கொட பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். ஹொரண நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கொன்றிற்காக சென்று பின்னர் வீடு திரும்புகையில் அவர் மீது இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது படுகாயமடைந்த அவர் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும், தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து இதுவரை தகவல்கள் தெரியவரவில்லை. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஹொரண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Read More »

உயிரை பணயம் வைத்து பெண்ணை காப்பாற்றிய இலங்கையருக்கு கௌரவம்

பெண் ஒருவரை காப்பாற்றியமை தொடர்பில் தென் கொரியாவில் இலங்கையர் ஒருவருக்கு நேற்றைய தினம் மனிதாபிமான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக, எல்.ஜீ.பவுண்டேசன் தெரிவித்துள்ளது. கட்டபில்லா கெட்டியகே நிமலசிறி என்ற 39 வயது இலங்கையருக்கே இந்த விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் தீப் பற்றிக் கொண்டிருந்த வீடொன்றில் இருந்து பெண் ஒருவரின் அலறல் சத்தத்தை கேட்ட நிமலசிறி, விரைந்து செயற்பட்டு, அந்த வீட்டுற்குள் குதித்து பாதிக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவத்தில் அப் பெண்ணை பத்திரமாக காப்பாற்றிய அவர் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனைக் கேள்வியுள்ள ... Read More »

இலங்கை சட்டத் தரணிகள் சங்கத்தின் தலைவர் நியமனம்

இலங்கை சட்டத் தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக யூ.ஆர்.டி.சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 24 வது தலைவராக நியமனம் பெற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். Read More »

Scroll To Top