Monday , June 26 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / இலங்கைச் செய்திகள் (page 3)

பதிவு வகை: இலங்கைச் செய்திகள்

Feed Subscription

சிறுபான்மையினருக்கும் அரசாங்கத்துக்கும் இடையே பிளவை ஏற்படுத்த சூழ்ச்சி: ஜனாதிபதி

முஸ்லிம்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே பிளவை ஏற்படுத்த எதிர்த்தரப்பினரால் அரசியல் ரீதியாக சதி முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார். இஸ்லாமியர்களின் புனித  இப்தார் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி,இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”அனைத்து இனங்களுக்குமிடையில் சமாதானம் மற்றும் ஒற்றுமையை கட்டியெழுப்பி நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பரந்த செயற்திட்டத்தை முன்னெடுப்பதாக தெரிவித்தார். முன்னர் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள், அரசாங்கத்துக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையில் ... Read More »

ஐ.நா. விசேட பிரதிநிதியின் அறிக்கை இலங்கையின் இறைமையை பாதிக்கும்: விஜயதாச

இலங்கை நீதித்துறையின்  சுயாதீனத் தன்மை பற்றிய ஐ.நா. விசேட அறிக்கையாளர் மொனிகா பின்டோவின் அறிக்கை இலங்கையின் இறைமைக்கு பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், தவறானதும் பொய்யானதும் தகவல்களால் நிரம்பியுள்ளது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அதிருப்தி வெளியிட்டுள்ளார். நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுயாதீனத்தன்மை பற்றிய ஐ.நா. விசேட அறிக்கையாளர் மொனிகா பின்டோ கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 7 ஆம் திகதி வரை இலங்கைக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில், கடந்த ... Read More »

வயோதிப தந்தையை தீ வைத்து கொலை செய்த மகன்

பொகவந்தலாவ பெற்றோசோ டெவன் போல் தோட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தீயில் கருகிய நிலையில் குடும்பஸ்த்தரின் சடலம் ஒன்று மீட்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (20) செவ்வாய்க்கிழமை மாலை இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த சுப்ரமணியம் (வயது 70) என்ற வயோதிபரே தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த வயோதிபர் சுகயீனமுற்ற நிலையில் தமது வீட்டில் தனியாக இருந்து வந்ததாகவும் அந்த வயோதிபரை அவருடைய பிள்ளைகள் கவனிக்கவில்லையெனவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். கட்டிலில் ... Read More »

தேர்தலை பிற்போடுவதாயின் மக்கள் கருத்துக் கணிப்பு வேண்டும்

காலம் முடியவடையும் மாகாண சபைகளின் தேர்தலை பிற்போடுவதாயின் அதற்கு மக்கள் கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது. இந்த வருட இறுதியில் மூன்று மாகாண சபைகளின் காலம் முடிவடைய உள்ளதுடன், அவற்றின் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணையகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. நேற்று கொழும்பில் இடம்பெற்ற கூட்டான ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி இதனைக் கூறினார். இதேவேளை உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்துவது தொடர்பில் காணப்படுகின்ற ... Read More »

பதில் விவசாய அமைச்சராக வடக்கு முதல்வர்

வட மாகாண விவசாய அமைச்சர் பி.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் குருகுலராஜா ஆகியோர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து இருவரும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் உத்தியோகபூர்வமாக வழங்கிய கடிதத்தின் பிரதி தனக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக, வட மாகாண ஆளுநர் ரெஜினோல் குரே குறிப்பிட்டுள்ளார். மேலும், வெற்றிடம் ஏற்பட்டுள்ள விவசாய அமைச்சர் பதவி தொடர்பில் பதில் அமைச்சராக இன்று வடக்கு முதல்வர் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Read More »

ஜனாதிபதி வேட்பாளராக ஞானசார தேரரை களம் இறக்குவதற்கு முயற்சி: வாசுதேவ

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஞானசார தேரரை ஓர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடச் செய்து ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும் முயற்சிக்கப்படுகின்றது  என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு ஞானசார தேரர் தொடர்பாக கருத்து  வெளியிடும் போது அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ’இனவாத கலவரங்களை நாட்டில் ஏற்படுத்தும் சூழ்ச்சித் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. நாட்டில் இன்று இனவாத கலவரங்களோ முரண்பாடுகளோ கிடையாது. பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் போன்றவற்றுக்கு ஒரு சில தரப்பினர் தாக்குதல் ... Read More »

கூட்டமைப்பு பிளவுபடுவதை அனுமதிக்க முடியாது: வியாழேந்திரன்

தமிழ் மக்களால் ஏகபிரதிநிகளாக தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்  தெரிவித்தார். வடக்கு மாகாணசபையில் எற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,’ ஒரு மாகாண சபைக்குள்ளே இரண்டு பிரிவுகளாக பிளவுபட்டுக்கொண்டு ஒரு மாகாண சபையை கொண்டு நடத்துவதில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் என்றால் எப்படி இவர்கள் வடகிழக்கு இணைப்பைப் பற்றி பேச முடியுமென்று ... Read More »

ஆறுமுகம் தொண்டமான் இராஜினாமா

நுவரெலியா மாவட்ட இணைத் தலைவர் பதவியில் இருந்து ஆறுமுகம் தொண்டமான் இராஜினாமா செய்துள்ளார். இவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். Read More »

மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்க எடுக்க வேண்டும் என்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக மோடிக்கு இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில், ´´61 நாள் மீன்பிடி தடை காலம் முடிவடைந்த நிலையில், கடந்த 17-ம் திகதி மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேர் ஒரு இயந்திர மீன்பிடி படகில் தங்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக்ஜல சந்திக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் 18-ம திகதி அதிகாலை கடலில் ... Read More »

புகையிரத சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்

பல கோரிக்கைகளை முன் வைத்து புகையிரத சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். 08 கோரிக்கைகளை முன் வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக லோகோமோடிவ் ஒப்பரேட்டிங் இஞ்சினியர்ஸ் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட கூறினார். இந்த வேலை நிறுத்தத்துடன் புகையிரத காவலர்கள் சங்கமும் இணைந்து கொண்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருவதாக அதிகாரிகள் வாக்குறுதியளித்த போதிலும், இதுவரை சரியான தீர்வுகள் வழங்கப்படவில்லை என்று இந்திக தொடங்கொட கூறினார். அதன்படி தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வரை தொடர்ச்சியான ... Read More »

Scroll To Top