Sunday , August 20 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / இலங்கைச் செய்திகள் (page 30)

பதிவு வகை: இலங்கைச் செய்திகள்

Feed Subscription

பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்: தமிழ் அரசியல் கைதிகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமது பாதுகாப்பு, தொடர்ந்தும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கண்டி – தும்பர போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் மற்றும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் அடங்கிய குழுவினர் அண்மையில் சென்று சந்தித்தனர். இதன்போதே தமிழ் அரசியல் கைதிகள் இக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அத்தோடு, அரசியல் கைதிகள் ஒவ்வொருவர் மீதும் எட்டு தொடக்கம் 10 வரையிலான வழக்குகள் ... Read More »

வட. மாகாண சர்ச்சைக்கு திங்கட்கிழமை தீர்வு?

வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பதவி தொடர்பில் மாகாணசபை உறுப்பினர்களிடையே எழுந்துள்ள பெரும் சர்ச்சை தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை உரிய தீர்வு எட்டப்படும் வட. மாகாண ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வட. மாகாண சபை உறுப்பினர்களால் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டிருக்கும் இருவேறு தீர்மானங்கள் தொடர்பில் ஆராய்ந்து சட்ட ஆலோசனைகளை பெறும் வகையில் ஆளுநர் ரெஜினோல்ட் குரே நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பிற்கு வந்துள்ள நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று கொழும்பிற்கு வந்த ஆளுநர், வட. மாகாணத்தில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் வார இறுதி நாட்களில் கொழும்பிலுள்ள ... Read More »

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன் ஐ.நா. பிரதிநிதி சந்திப்பு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி உனாமெக்குலே சந்தித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் நூறு நாட்களை கடந்து தீர்வின்றி தொடர்ந்து வருகின்ற நிலையில் இன்று (சனிக்கிழமை) மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு வலியுறுத்தி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு பகல், வெயில் மழை பாராது மூன்று மாதங்களுக்கு மேலாக தொலைத்த தமது ... Read More »

பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை கைப்பற்றுவோம்: சயந்தன்

வட. மாகாண சபை அமர்வில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை கைப்பற்றுவோம் என வட. மாகாண சபையின் உறுப்பினர் கேசவன் சயந்தன் சூளுரைத்துள்ளார். வட. மாகாணத்தில் காணப்படும் நெருக்கடி நிலை தொடர்பில் யாழில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தி வருகிறோம். அதன்படி வட. மாகாணத்திற்கான முதலமைச்சர் பதவிக்கு அவைத் ... Read More »

நல்லாட்சியிலும் விடிவில்லை: சிறிதரன்

நியாயமான தீர்வை எதிர்பார்த்து வாக்களித்த தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும் கைங்கரியத்தில் நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற அமர்வொன்றில் இலங்கையிலிருந்து ஸ்கைப் தொழிநுட்பம் ஊடாக உரையாற்றிய சிறிதரன் இவ்வாறு குறிப்பிட்டதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. யுத்தம் முடிவடைந்து எட்டு வருட காலம் நிறைவடைந்துள்ள நிலையிலும், தமிழ் மக்கள் தொடர்ந்தும் வீதிகளில் போராட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, தமிழீழத்திற்கான போராட்டம் தொடருமெனவும் சிறிதரன் குறிப்பிட்டதாக குறித்த ஊடக ... Read More »

சி.வி.க்கு எதிராக ஆளுநரிடம் கடிதம்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை மாற்றுவதற்கான கோரிக்கைக் கடிதம், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம்  சற்று முன்னர் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைக்கு வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சியின் 16 உறுப்பினர்களும் எதிர்கட்சியின் 6 உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர். வடக்கு ஆளுநர் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். இதேவேளை வெகுவிரைவில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக மாகாண சபையில் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read More »

வெளிநாட்டு தூதுவர்களிடம் முறைப்பாடு

தேர்தலை பிற்போட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்களை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி கூறியுள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இதனைக் கூறினார். கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் குழு குழுவொன்று இதுவரை கனடா உயர் ஸ்தானிகர், ஜப்பான் தூதுவர் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் ஆகியோரை சந்தித்து தேர்தலை நடத்தாமை தொடர்பாக விளக்கமளித்ததாக தினேஷ் குணவர்தன இதனைக் கூறினார். Read More »

விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று வடமாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணையில் வடமாகாண சபையின் 21 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையை முன்வைத்து முதலமைச்சர் இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராகவே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. Read More »

கனரக வாகனம் மோதி சிறுமி பலி

நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா நகரின் மஞ்சல் கடவையில் பாதை கடக்க முற்பட்ட. 7 வயது சிறுமி மீது கனரக வாகனம் மோதுண்டதில் சிறுமி ஸ்தலத்திலே பலியானார். ஆத்திரமுற்ற பொதுமக்கள் கனரக வாகனத்திற்கு தீ வைத்துள்ளனர் நானுஓயா ரயில் மேம்பாலத்திற்கருகில் உள்ள மஞ்சல் கடவையிலே இன்று (15) காலை 8 மணியளவில் இவ் விபத்து சம்பவித்துள்ளது நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த கனரக வாகனமே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணை நானுஓயா பொலிஸார் மேற்கொள்கின்றனர் Read More »

அரசாங்கத்தினால் ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்: நாமல் கவலை

நாட்டினது ஊடக சுதந்திரத்திற்கு அரசாங்கம் கடுமையான அச்சுறுத்தல்களை விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரநாயக்க பிரதேசத்திற்கு விஜயம் செய்த நாமல் ராஜபக்ஷ அங்கு ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்களை விடுத்தும் அவர்களின் பெற்றோர்களை தரக்குறைவாக ஏசும் அமைச்சர்களைக் கொண்ட  அரசாங்கமே தற்போது நாட்டில் ஆட்சி செய்கின்றது. ஊடகவியலாளர்களை ஒடுக்கும் இந்த அரசாங்கம் எப்படி மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப்போகின்றது? எமது ஆட்சியில் ஊடக சுதந்திரம் பற்றி தேவையற்ற விதங்களில் அவதூறாகப் பேசிய ... Read More »

Scroll To Top