Friday , October 20 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / இலங்கைச் செய்திகள் (page 4)

பதிவு வகை: இலங்கைச் செய்திகள்

Feed Subscription

காங்கேசன்துறை கடற்பரப்பில் கேரளா கஞ்சா

யாழ் காங்கேசன்துறை கடற்பரப்பில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட பொதியிலிருந்து நூற்று ஐம்பத்து மூன்று கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பிற்குட்பட்ட பகுதியில் அநாதரவாக காணப்பட்ட பொதி ஒன்று தொடர்பில் தகவலறிந்த கடற்படையினர் நேற்று மாலை குறித்த பொதியை சோதனைக்குட்படுத்தினர். இதன்போதே குறித்த பொதியிலிருந்து 153 கிலோ கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த பொதியை கடத்திவந்த நபர்கள் கடற்படையினரின் வருகையை அறிந்து அதை கைவிட்டு சென்றிருக்கலாம் என தரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரளகஞ்சா தற்போது யாழ் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ... Read More »

வாக்காளர் பெயர் பட்டியல் இன்று இறுதி செய்யப்படும்

2017 ஆம் வருடத்தின் வாக்காளர் பெயர் பட்டியல் இன்று (12) இறுதி செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட செயலாளர் காரியாலயங்களில் குறித்த பணி இடம்பெறவுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. 2017 வாக்காளர் பெயர் பட்டியல் தொடர்பான அனைத்து திருத்தங்களும் நேற்று (11) இறுதி செய்யப்பட்டதாக தேர்தல் செயலகத்தின் ஊடகப் பேச்சாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். Read More »

மாநகர, நகர, பிரதேச சபைகள் திருத்தச் சட்டத்தில் இன்று கையெழுத்து

மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று கையெழுத்திடவுள்ளார். அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் அண்மையில் குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, அது சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய, சபாநாயகர் இதில் கையெழுத்திட்டவுடன் குறித்த சட்ட மூலம் வர்த்தமானியில் வௌியிடப்படும். Read More »

படகுகளை மீட்க இலங்கை வந்துள்ள குழு

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட விசைப் படகுகளை மீட்டு வர நாகை மாவட்ட மீனவர்கள் இலங்கை புறப்பட்டுள்ளனர். பாக்கு நீரிணைப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துச் செல்வது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களது படகுகள் விடுவிக்கப்படுவதில்லை. இராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 180-க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கைக் கடற்படையினரால் இதுவரை சிறைபிடிக்கப்பட்டுள்ளது என, இந்திய ஊடகமான விகடன் குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில், சிறைபிடிக்கப்பட்ட ... Read More »

ஷலில முனசிங்கவை பதவி நீக்க உத்தரவு

லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் ஷலில முனசிங்கவை உடனடியாக அந்த பதவியில் இருந்து நீக்குமாறு, அரசாங்க தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு தெரியப்படுத்தியுள்ளது. நிதி மோசடி விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள அவருக்கு, குறித்த நிறுவனத்திலுள்ள அனைத்து அதிகாரங்களையும் இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, அந்த அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவிதாரண, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹேமக அமரசூரியவுக்கு அறிவித்துள்ளார். லிற்றோ கேஸ் நிறுவனம் அரசாங்க தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இந்த ... Read More »

நாமல் உள்ளிட்ட அறுவர் கைது

பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, டி.வி.சாகன, பிரசன்ன ரணவீர மற்றும் மூவர், ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டையில், கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். பின்னி​ணைப்பு கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, டி.வி.சாகன, பிரசன்ன ரணவீர, மாகாண சபை உறுப்பினர்களான, கொடிகார, சம்பத் அத்துகோரல மற்றும் மேஜர் அஜித் பிரசன்ன ஆகியோர் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். Read More »

அரசியல் கைதிகள் விவகாரம்: மனோவுக்கு ஜனாதிபதி அளித்த பதில்

தமது வழக்குகள் அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்டமையை எதிர்த்து பதினைந்து நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் இன்று அமைச்சரவையில் பிரஸ்தாபித்த ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசனிடம், இது தொடர்பில் சட்டமா அதிபரிடம் உடன் விளக்கம் கோரி தீர்வை பெற்றுத் தருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதுபற்றி கருத்து கூறிய அமைச்சர் மனோ கணேசன், அமைச்சரவையில் இதுபற்றி பிரஸ்தாபித்ததையடுத்து, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் இதுபற்றிய சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, ... Read More »

பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு நாளென்றுக்கு 100 ரூபா வழங்க திட்டம்

இலங்கையில் வறுமை மற்றும் பிற காரணங்களினால் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு மாதம்தோறும் சிறப்பு கொடுப்பணவு வழங்குவது குறித்து கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது. அடுத்த வருடம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் ஊடாக மாணவர்கள் இடை விலகல் தடுக்கப்படுவது மட்டுமன்றி, அவர்களின் கல்வி ஆர்வத்தையும் அதிகரிக்க முடியும் என கல்வி அமைச்சகம் எதிர்பார்க்கின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் பாடசாலைக்கு சமூகமளிக்கும் நாளொன்றுக்கு ரூபாய் 100 வீதம் மாதந்திரக் கொடுப்பணவு வழங்குவது தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறுகின்றார். ... Read More »

யாழில் விபத்து: இளைஞர் பலி

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியின் 17ம் கட்டைப் பகுதிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை மீறி, மின் கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது, காயமடைந்த 19 வயதான மோட்டார் சைக்கிள் சாரதி அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் Read More »

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவன தலைவர் கைது

1.1 மில்லியன் டொலர், தாய்வான் காணாமல் போனமை தொடர்பில் லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவன தலைவர் என்.எம்.எஸ்.முணசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். குற்ற விசாரணை பிரிவினர் அவரை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்வானின் ஈஸ்ட்ரன் வங்கியில் இருந்து இலங்கையில் வங்கி கணக்கொன்றுக்கு நிதிமாற்றம் மேற்கொண்ட சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவுள்ளார். Read More »

Scroll To Top