Monday , June 26 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / இலங்கைச் செய்திகள் (page 415)

பதிவு வகை: இலங்கைச் செய்திகள்

Feed Subscription

கொளுத்தும் வெயிலால் பரிதவிக்கின்றது வடக்கு |

யாழ்ப்பாண மாவட்டத்தில் என்றுமில்லாத வறட்சி நிலைமை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக 45 ஆயிரம் குடும்பங்கள் நேரடியாகவும் மறை முகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் இவ்வாறு தெரிவித்துள்ளார் யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம். அதேவேளை வடக்கு மாகாணத்தில் சுமார் 80 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது வறட்சியான நிலைமை காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக வடக்கு மாகாணம் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. கடந்த ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டு அதிக மாகக் காணப்படும் வறட்சியான காலநிலை ... Read More »

நாடகப்பயிற்சி பட்டறை

பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் தெல்லிப்பளைப் பிரதேச செயலக வழிகாட்டலில் புத்தாக்க அரங்க இயக்கத்தின் ஒழுங்குபடுத்தலில் நடாத்தப்படும் நாடகப்பயிற்சி பட்டறை நிகழ்வு எதிர்வரும் 7ஆம்  8ஆம்  14ஆம்  15ஆம்  21ஆம்  22ஆம்  28ஆம்  29 ஆம் திகதிகளில் பிரதி வியாழன் வெள்ளிக் கிழமைகளில் 8 தினங்கள் மாலை 2 மணி தொடக்கம் 5 மணி வரை இடம்பெறவுள்ளது. வலிவடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வலிவடக்கு பிரதேச செயலாளர் க.ஸ்ரீமோகனன் தலைமையில் நடைபெறவுள்ள இப்பயிற்சிப்பட்டறையில் நடிப்பு இதலைமைத்துவம் எண்ணக்கருவாக்கம், தொடர்பாடற்திறன், நெறியாள்கை, வழிப்படுத்தல் ஆகிய ... Read More »

சிறுவர் உரிமை விழிப்புணர்வு செயலமர்வு

கிளிநொச்சி மாவட்டச் செயலக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியிலுள்ள மக்களுக்கு சிறுவர் உரிமைகள் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் செயலமர்வு பாரதிபுரம் வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர் ராஜரட்ணம் செந்தூரன் பிரதான வளவாளராகக் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார்.   இதன்போது சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது எவ்வாறு என்பது தொடர்பாகவும் சிறுவர்களுக்கு இழைக்கப்படும் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் இருந்து சிறுவர்களைப் பாதுகாப்பது தொடர்பாகவும் சிறுவர்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பெற்றோர்கள் எவ்வாறு ஈடுபடலாம் என்பது தொடர்பாகவும் ... Read More »

அச்சுவேலி சிவஸ்ரீ ச.குமாரசுவாமி குருக்கள் நினைவு சைவநெறித் தேர்வு

அச்சுவேலி சிவஸ்ரீ ச.குமாரசுவாமி குருக்கள் நினைவு சைவநெறித் தேர்வு 07.08.2014 வியாழக்கிழமை காலை குருக்களால் நிறுவப்பட்ட அச்சுவேலி சரஸ்வதி வித்தியாசாலையில் இடம்பெற்றது. 155 மாணவர்கள் இத்தேர்வுக்குத் தோற்றியிருந்தனர். இவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு 09.08.2014 சனிக்கிழமை அச்சுவேலி உலவிற்குளம் சித்திவிநாயகர் ஆலய தேர்த்திருவிழா நிறைவுற்றதும் காலை 11.30 மணியளவில் இடம்பெறவுள்ளது. இந்துக் குருமார் அமைப்பின் தலைவரும் சிவஸ்ரீ ச.குமாரசுவாமிக் குருக்களின் பூட்டனாருமாகிய சிவஸ்ரீ கு.வை.க. வைத்தீஸ்வரக் குருக்களின் ஏற்பாட்டில் இப்போட்டி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது Read More »

மாவட்ட செயலகத்தினை புதிய இடத்தில் நிர்மாணித்தல் விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினை புதிய இடத்தில் நிர்மாணித்தல் தொடர்பான ஆரம்பக்கட்ட விசேட கலந்துரையாடல் திங்கட்கிழமை பிற்பகல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து புதிய கட்டத் தொகுதி அமையவுள்ள திராய்மடு பிரதேசத்தினையும் நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வுகளை மேற்கொண்டனர். நேற்றைய கூட்டத்திற்கு பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் எம்.சி.கமம்பில்ல, அமைச்சின் பிரதம பொறியியலாளர் எஸ்.எம்.மடவலகம, அமைச்சின் திட்டப் பொறியியலாளர் பிராங்கி யு. பெரேரா ஆகியோர் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்தனர். இதன் போது, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க ... Read More »

‘யாழ்ப்பாண நினைவுகள்’ நூல் அறிமுகவிழா விழா

‘யாழ்ப்பாண நினைவுகள்’ பாகம் 01 நூல் அறிமுகவிழா விழா அல்வாய் ஸ்ரீ லங்கா வித்தியாலய பாலசண்முகம் ஜெயபாலன் ஞாபகார்த்த அரங்கில் ஞாயிற்றுக்கிழமை 03-08-2014 இடம்பெற்றது. இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த அல்வாய் இளங்கோ சனசமூக நிலைய முத்தமிழ் மன்றத்தினருக்கு நன்றிகள்.நிகழ்வு வெற்றி பெற உழைத்த உறவுகளுக்கும், துணை நின்ற உயில் கலை இலக்கிய வட்டத்தினருக்கும் நன்றிகள். குப்பிளன் ஐ.சண்முகன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில், வாழ்த்துரைகளை மு.அநாதரட்சகன், கி.கணேசன் ஆகியோரும் வெளியீட்டுரையை சு.குணேஸ்வரனும் மதிப்பீட்டுரையை இ.இராஜேஸ்கண்ணனும் நிகழ்த்தினர். நூலின் முதற்பிரதியை வே.பாலசண்முகம் பெற்றுக்கொண்டார். Read More »

புங்குடுதீவு வைத்தியசாலைக்கு “ஊடு கதிர்ப்படக் கருவி” வழங்கவுள்ள திரு.கனகரட்ணம் குடும்பம்

புங்குடுதீவு வைத்தியசாலைக்கு நீண்டகாலமாக ஒரு “மருத்துவ ஊடு கதிர்ப்படக் கருவி (Scanning Machine)” அவசியத் தேவையாகவிருப்பதாகவும், அதனைப் பெற்றுத் தருமாறும், புங்குடுதீவு வைத்தியசாலையின் வைத்தியர் திரு.சரவணபவன் அவர்கள், சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் உள்ளிட்ட ஏனைய நாடுகளிலுள்ள புங்குடுதீவு ஒன்றியங்கள் மற்றும் தனிப்பட்ட சிலரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இவ்விடயத்தினைக் கவனத்திற் கொண்ட புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு.திருமதி கனகரட்ணம் கனகம்மா அவர்களது குடும்பம் சார்பாக அவர்களின் பிள்ளைகளான சுவிஸ்லாந்தில் வசிக்கும் திருவாளர்கள் “திரு, அருள், ரவி” மற்றும் இலங்கையில் வசிக்கும் “அப்பன்” ... Read More »

வடக்கு மாகாண சபை அமர்வில் இன்று செவ்வாய் நடந்தவை என்ன?

வடக்கு மாகாண சபையின் 13 ஆவது அமர்வு அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தலைமையில் கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் கட்டடத்தொகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.40 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. இன்றைய அமர்வில் முற்றுமுழுதாக நிதி நியதிச் சட்டம் தொடர்பிலான விவாதமே இடம்பெற்றது. அதன்படி நிதி நியதிச்சட்டம் ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டு அதற்கான பரிந்துரைகிடைக்கப்பெற்றதனையடுத்து இன்று சபையில் நிதி நியதிச்சட்டம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முதலில் வடக்கு மாகாண நிதி நியதிச் சட்டம் வடக்கு மாகாண முதலமைச்சரினால் ஏற்கப்பட்டு விவாதத்துக்கு விடப்பட்டது. ... Read More »

நல்லூர்க் கந்தன் ஐந்தாம் நாள் மாலை வீதியுலாக் காட்சி!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயில் ஐந்தாம் நாள் திருவிழாவில் முருகன் வள்ளி – தெய்வயானையுடன் அன்னப்பட்சி வாகனத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வெளி வீதியுலா வந்த காட்சிகளைப் படத்தில் காணலாம்.                         Read More »

பொலிகண்டியில் உயிருடன் பிடிக்கப்பட்டது 18 நீளச் சுறா

யாழ்.பொலிகண்டி மேற்கு ஊறணிப்பகுதியில் 18 அடி நீளமுள்ள குடுவேலுச் சுறாவொன்று மீனவர் ஒருவரின் வலையில் இன்று புதன்கிழமை 06-08-2014 அதிகாலை உயிருடன் பிடிபட்டுள்ளது. இதனைக் கரைக்கு இழுத்து வந்த மேற்படி மீனவர்கள், மீண்டும் அதனைக் கடலிற்குள் விடுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர். Read More »

Scroll To Top