Wednesday , July 26 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / இலங்கைச் செய்திகள் (page 427)

பதிவு வகை: இலங்கைச் செய்திகள்

Feed Subscription

அனலையில் வீட்டுத்திட்டம் நிறைவு

அனலைதீவிலுள்ள ஒரு சிறிய தீவாகவுள்ள புளியந்தீவில் முதற்கட்டமான சிவத்தொண்டர்களுக்கான வீட்டுத்திட்டம் நிறைவு பெற்று விட்டது. குறிப்பாக அனலைதீவிலிருந்து புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் சமூக சேவகர் ஒருவரினாலேயே இப்பெரும் அறப்பணி முன்னொடுக்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டதக்கதாகும். இதனது பெறுமதி கிட்டத்தட்ட 20 இலட்சம் ரூபா வரையிலானது எனக் கணக்கீடு செய்யப்படுகின்றது. அனலைதீவு செய்தியாளர் – (துருவன்) Read More »

யாழில் பேஸ்புக்கால் இரு சகோதரிகளுக்கிடையில் மோதல் மற்றும் தற்கொலைக்கு முயற்சி

இருந்த கணனியில் மூத்த சகோதரிக்குச் சொந்தமான பேஸ்புக் கணக்கை தங்கை பார்வையிட்டதால் ஏற்பட்ட மோதலில் மூத்த சகோதரி தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடந்த வியாழக்கிழமை நல்லுார்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தற்கொலைக்கு முயன்ற யுவதி பல்கலைக்கழகத்தில் பயின்று கொண்டு அரச திணைக்களம் ஒன்றில் வேலை செய்து வருவதாகவும் தெரியவருகின்றது. இவர் தனது பேஸ்புக்கை திறந்து வைத்துவிட்டு அவசர அலுவல் காரணமாக வீட்டுக்கு வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்த போது யுவதியின் தங்கை தனது முகப்புத்தகத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்ததால் அங்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் ... Read More »

வவுனியாவில் “பிருந்தாவனம்” மாதச்சஞ்சிகை வெளியீடு 

வளர் இளம் படைப்பாளிகள்இ கலைஞர்களை அடையாளப்படுத்தல், ஊக்குவித்தல். இளையோர்கள் மாணவர்கள் சிறுவர்களின் வாசிப்புத் திறனை அதிகரித்தல் எனும் நோக்கோடு ஜனரஞ்சக சஞ்சிகையாக வவுனியாவிலிருந்து “பிருந்தாவனம்” மாதச் சஞ்சிகை வெளிவந்துள்ளது. இச்சஞ்சிகைக்கான அறிமுக வெளியீட்டு விழா, வவுனியா சிந்தாமணிப்பிள்ளையார் ஆலய கலாசார மண்டபத்தில் கடந்த 17.08.2014 ஞாயிறு அன்று நடைபெற்றது. சஞ்சிகையின் முதல் பிரதியை, பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பெற்றுக்கொண்டார். கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் நடைபெற்ற இந்த சஞ்சிகை வெளியீட்டு விழாவில், சுத்தானந்த இந்து இளைஞர் ... Read More »

காரைநகரில் வாயில்லா ஜீவராசிக்கான நீர்தாங்கி

கடந்த மாதங்களாக நிலவிய போதிய மழை இல்லாததும், குளங்கள் மற்றும் நீர் ஒடைகளில் தண்ணீர் காணப்படாமையாலும் பலபகுதிகள் கடும் வறட்சி பகுதியாக மாற்றிவிட்டன. நிலத்தடி நீர்மட்டம் குறைவடைந்து சென்றுவிட்டதால், சில பிரதேசங்களில் உள்ள பெரும்பாலன கிணறுகள் மற்றும் குழாய் கிணறுகளில் சொட்டு தண்ணீர் கூட இல்லை. குளங்கள்  அனைத்தும் வறண்டு போனதால் கால்நடைகளுக்கும் குடிக்க தண்ணீர் இல்லை. இது விட மிகவும் பரிதாப நிலை பெரும்பகுதிகளில் மக்களுக்கே குடிப்பதற்கு குடிநீர் இல்லை. இவ்வறானதொரு சூழ்நிலை கொண்ட பகுதியே கரைநகர் பிரதேசமாகும். அங்கு காரைநகர் பயிரிக்கூடல் என்ற இடத்தில், கால்நடைகளின் ... Read More »

நெடுந்தீவில் மாத்திரம் வாழும் காட்டு குதிரைகள் பற்றிய ஆய்வு: வனஜீவராசிகள் திணைக்களம்

யாழ்ப்பாணம் மாவட்டம் நெடுந்தீவு தென் பகுதி கரையோரத்தில் வாழ்ந்து வரும் காட்டு குதிரைகளை பாதுகாக்கும் நோக்கில் மூன்று ஆய்வுகளை மேற்கொள்ள வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையில் காட்டு குதிரைகள் நெடுந்தீவின் தெற்கு கரையோர பகுதியில் மாத்திரமே வாழ்ந்து வருகின்றன. இந்த குதிரைகள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டதாக திணைக்களத்தின் பணிப்பாளர் எச்.டி. ரத்நாயக்க தெரிவித்தார். எத்தனை குதிரைகள் இருக்கின்றன. அவற்றின் வயது, அவற்றுக்கு தேவையான உணவு, குடிநீர், நெடுந்தீவில் எந்தளவு பரப்பில் இந்த குதிரைகள் வாழ்ந்து வருகின்றன என்பன பற்றி ... Read More »

யாழ்.மாணவர்களது துவிச்சக்கர வண்டி பவனி

யாழில் இருதய சத்திரசிகிச்சை நிலையமொன்றை அமைக்கும் நோக்கில், ஒக்ஸோனியன் ஹார்ட் பவுன்டேசன் அனுசரணையில் யாழ்.பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்கள் கலந்து கொள்ளும் துவிச்சக்கர வண்டிகள் பவனியை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இன்றுகாலை நல்லூர் முருகன் ஆலய முன்றலில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று பவனியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அமைச்சர் அவர்களுடன் ஊர்வலமாய் கைலாயப்பிள்ளையார் கோவில் முன்றலை வந்தடைந்தனர். பின்னர் துவிச்சக்கரவண்டி பவனி ஆரம்பமாகி இதன் ... Read More »

பயங்கர ஆயுதங்களுடன் முக்கிய கும்பலை மடக்கிய யாழ் பொலிஸார்

யாழ். மாவட்டத்தில் ஆவா என்ற சமூகவிரோதக் குழுவின் இணைக்குழு எனக் கருதப்படும் மற்றொரு சமூக விரோதக் கும்பலை நேற்று வியாழக்கிழமை அதிகாலை பயங்கர ஆயுதங்களுடன் தாம் கைதுசெய்துள்ளனர் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். இக்குழுவைச் சுற்றிவளைத்தபோது அவர்கள் தப்பியோட முயன்றனர். இதனையடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டனர். மேலும் நால்வர் தப்பியோடி விட்டனர் எனவும் அவர்களும் விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவர் எனவும் அவர் கூறினார். இவர்களிடம் இருந்து 3 கத்திகள், 2 வாள்கள், ... Read More »

ஒரு சில கனடா- லண்டன் மாப்பிள்ளைகளால் யாழ் பெண்களுக்கு நடக்கும் நிர்க்கதி

உல்லாச திருமணம் செய்ய கனடா மற்றும் லண்டனில் இருந்து யாழ் செல்லும் மாப்பிள்ளைகள் உஷார் மக்களே உஷார் ! பெண்களை தமது காமப் பசிக்கும் இரையாக்கி வரும் சில தமிழ் இளைஞர்கள். ஆம் கடந்த 6 மாதங்களில் மட்டும், சுமார் 8 போலியான பதிவு திருமணங்கள் இவ்வாறு இடம்பெற்றுள்ளது. இவை நாம் அறிந்தவை. அறியாமல் பல இவ்வாறு நடந்திருக்கலாம். கனடா மற்றும் லண்டனில் இருந்து வெளியாகும் சில ஓசிப் பத்திரிகையில், திருமண பக்கம் என்று ஒன்று உள்ளது. அதில் மண மகள் தேவை, அல்லது ... Read More »

யாழ். பல்கலையில் விரைவில் உடற்கல்வி விஞ்ஞான கற்கைகள் பீடம்

யாழ். பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி விஞ்ஞான கற்கைகள் பீடம் கிளிநொச்சியில் மிகவிரைவில் அமைக்கப்படவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் வியாழக்கிழமை 14-08-2014 தெரிவித்தார். வடமாகாணத்தில் உடற்பயிற்சி மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுவர்களுக்கு யாழ். போதனா வைத்தியசாலையில் இயங்கும் விளையாட்டு, மருத்துவ அலகின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு யாழ். போதனா வைத்தியசாலையின் மாணவர்கள் விடுதியின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (14) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே துணைவேந்தர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், உடற்கல்வி விஞ்ஞானத்தில் இளமாணிக் கற்கைகள் விரைவில் ... Read More »

இராணுவத்தில் இணைந்த தமிழ் இளைஞர்கள் ஈச்சமோட்டையில் அட்டகாசம் 

யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை சனசமூக நிலையம் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்கு பின்னர் குறித்த பகுதிக்கு வந்தவர்கள் சனசமூக நிலைய கதவினை உடைத்துக் கொண்டு உட்சென்றவர்கள் அங்கிருந்த கதிரைகள், மேசைகளை, அலுமாரிகளை உடைத்து எறிந்ததுடன் விளையாட்டு பொருட்களையும் எடுத்து வெளியில் வீசியுள்ளனர். மேலும் அங்கிருந்த கதிரைகளை எடுத்துச் சென்று ஈச்சமோட்டை குளத்திற்குள் வீசிவிட்டும் சென்றுள்ளனர். இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் ... Read More »

Scroll To Top