Sunday , October 22 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / இலங்கைச் செய்திகள் (page 464)

பதிவு வகை: இலங்கைச் செய்திகள்

Feed Subscription

புலம்பெயர் தமிழர்களுக்கு யாழ். மாவட்ட வர்த்தக சங்கத்தலைவர் வேண்டுகோள்

வடக்கில் பொருட்களை கொள்வனவு செய்து பொருளாதாரத்தை உயர்த்துங்கள். விடுமுறை காலத்தில் தமது ஊருக்கு வரும் போது வேறு நாடுகளில் அல்லது புறநகரப்பகுதிகளில் பொருட்களை கொள்வனவு செய்யாது போரினால் பாதிக்கப்பட்டு பொருளாதார ரீதியில் நலிவடைந்துள்ள உங்கள் பகுதியில் கொள்வனவு செய்து வருமானத்தினை உயர்வடைய செய்யுமாறு யாழ். மாவட்ட வர்த்தக சங்கத்தலைவர் ஜெயசேகரம் புலம்பெயர் நாட்டில் உள்ளவர்களுக்கு கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். யாழ் பிராந்திய உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர் வருமான வரி செலுத்துபவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ... Read More »

புளியந்தீவு நடராஜப் பெருமானுக்கு கொடியேற்றம்

அனலைதீவு – புளியந்தீவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ நாகராஜேஸ்வரி  அம்பாள் சமேதர நாகேஸ்வரன் திருக்கோவில் வருடாந்த பிரம்மோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம் – 2014  மிகவும் பெருவிமர்சையாக  பூர்வாங்க கிரியைகளுடன் 29-08-2014  ஆரம்பித்தது. அதனைத்  தொடர்ந்து  துவஜாரோகணம் என்றழைக்கப்படும் கொடியேற்றத்திருவிழா  நண்பகல் 12.00 மணிக்கு 30-08-2014  (சனிக்கிழமை) அன்று வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது. சிறப்புத்திருவிழாக்களாக இடம் பெறவுள்ள வேட்டைத்திருவிழா ( 5-9-2014 ) இந்த முறை அனலை தீவு வடக்கு ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில் இடம் பெறவுள்ளமை சிறப்பம்சமாகும். சப்பை ரதத்திருவிழா ... Read More »

வவுனியாவில் காணாமல்போனோர் உறவினர்களின் ஆர்ப்பாட்டம்

30-08-2014 லன்று சர்வதேச காணாமல் போனவர்கள் தினமாகும். அத்தினத்தினை முன்னிட்டு காணாமல்போனோர் உறவினர்களால் வவுனியா நகரில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு பொலிஸார் மற்றும் படைப்புலனாய்வாளர்கள் கடுமையான அச்சுறுத்தல் விடுத்தபோதும் குறித்த போராட்டம்இ வெற்றிகரமான நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வட மாகாணத்தில் யுத்தத்தின் முன்னரும்இ பின்னரும் காணாமல்போனவர்களை தேடி தருமாறு கோரி காணாமல்போனவர்களின் உறவினர்கள் வவுனியா நகரசபை மண்டபத்தில் கவனயீர்ப்பு கூட்டம் ஒன்றிணை ஏற்பாடு செய்திருந்தனர்.அது தொடர்பான பதிவுகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.     Read More »

பாப்பரசர் 1ம் பிரான்ஸிஸ்க்கு விசேட இலச்சினை வெளியீடு

பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் ஆண்டகை எதிர்வரும் ஜனவரி 12ல் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வதை கொழும்பு உயர் மறை மாவட்டம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதுடன் பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயம் தொடர்பான இலச்சினையையும் வெளியிட்டுள்ளது. இலச்சினையின் கருப்பொருள் மற்றும் உள்ளடக்கமாக அநுராதபுர யுகத்திற்கு உட்பட்ட புனித தோமையாரின் சிலுவையும் மகுடத்தில் பரிசுத்த பாப்பரசரின் மகுடத்தில் உள்ள மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள்இ இலங்கையின் அப்போஸ்கர் பரிசுத்த பாப்பரசரின் மகுடத்தில் உள்ள மண் நிறம், செம்மஞ்சள், பச்சை, மஞ்சள், நிறங்கள் இலங்கையில் வாழும் பல் மதங்களைக் குறிக்கின்றன ... Read More »

“கானல் நீராகிப் போன” யாழ்ப்பாணத்துக்கான குடிநீர் பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் கருத்து

யாழ்ப்பாணத்து நிலத்தடி நீர்பாசனத்திற்கும் நேரடி நுகர்விற்கும் பொருத்தமற்றதாக மாறிக்கொண்டிருக்கின்றது. நிலத்தடியில் நன்னீரின் அளவு, நன்னீரின் வில்லைகள் என்பன மிக வேகமாகக் குறைந்து கொண்டு வருகின்றன. இவ்வாறு நன்னீர் தரத்திலும், அளவிலும் குறைந்து செல்கின்ற போக்கினை மாற்றி பிரச்சினையினைக் குறுகிய காலத்தினுள் கட்டுப்பாட்டிற்குக் கீழ் கொண்டு வருவதற்கு ஏதாவது உள்வாரியான சாத்தியமான வழிவகைகள் உண்டா என்பது தான் இங்கு போதியளவு பேசப்படாத, பேசத்தயங்குகின்ற பிரச்சினையாகும். தற்போதுள்ள வாய்ப்புகளின் படி இத்தகைய போக்கினை பின்னோக்கித் திருப்புவதற்கு உள்வாரியான தீர்வுகள் ஆகக் குறைந்தது அடுத்த ஐந்து, ஆறு ஆண்டுகளுக்குள் ... Read More »

மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் ‘சாஹித்திய ரத்ணா’ விருது

இலங்கையின் இலக்கிய உயர் விருதான ‘சாஹித்திய ரத்ணா’ விருது இம்முறை மலையகத்தின் மூத்த படைப்பாளியும் மலையக இலக்கியத்தை வளர்த்தெடுத்த மூலவர்களில் முக்கியமானவருமான தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கின்றது. இலங்கை வரலாற்றில் மலையகத்தை சார்ந்த ஒருவர் சாஹித்திய ரத்ணா விருது பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விருது மூலம் தேசிய மற்றும் சர்வதேசிய ரீதியில் மலையக இலக்கியத்திற்கு கௌரவித்தினை பெற்றுக் கொடுத்துள்ள அவரை நாமும் வாழ்த்துவோம்.     Read More »

கிளிநொச்சியில் குளத்தில் மூழ்கி மூன்று மாணவிகள் உயிரிழப்பு

கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் குளிக்கச் சென்ற மூன்று பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தார்கள். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை நண்பகல் 3.00 மணியளவில் கிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள கந்தன்குளத்தில் இடம்பெற்றது. கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த ச.தாட்சாயினி (வயது 17), இவரது சகோதரியான ச.நவதாரணி (வயது 11), விநாயகபுரத்தைச் சேர்ந்த எஸ்.நிசாந்தினி (வயது 19) ஆகியோரே குளத்தில் உள்ள சகதியில் சிக்கி உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இவர்களது சடலங்கள் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  தற்போது நிலவி வரும் வரட்சியினால் குறித்த மாணவிகளின் வீட்டில் ... Read More »

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய டொல்பின் மீனினம்

நெடுந்தீவுக் கடற்கரைப் பகுதியில் இறந்த நிலையில் டொல்பின் வகை மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது. நேற்று சனிக்கிழமை காலை இந்த டொல்பின் கரையொதுங்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த டொல்பினை பெருமளவான பொதுமக்கள் பார்வையிட்டனர். இறந்த நிலையில் கரையொதுங்கிய இந்த டொல்பினை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குழி வெட்டிப் புதைத்து சூழல் மாசுபடாமல் பாதுகாத்துள்ளானர். Note ;- எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்துக் கொள்ளுங்கள். இந்த இணையத்தை மற்றவா்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள். உங்கள் உறவாக நாம் எப்போதும் கை கொடுப்போம்.சமூகத்திற்கு ஒவ்வாத ... Read More »

கலைஞர்கள் வாழும் பொழுது கௌரவிக்கப்பட வேண்டியவர்கள்

சப்த தீவுகளில் ஒன்றாகிய அனலைதீவு 2ஆம் வட்டாரத்தை சேர்ந்த சிற்பக்கலைவல்லுநர் ஆசாரியார் ஐ.லம்போதரன் அவர்களால் உருவாக்கப்பட்டு இன்று (30-08-2014) பொற்பதி பிள்ளையார் திருக்கோவில் வெள்ளோட்டம் நடைபெற்ற சித்திர தேரினது பதிவுகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது. Note:- எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்துக் கொள்ளுங்கள். இந்த இணையத்தை மற்றவா்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள். உங்கள் உறவாக நாம் எப்போதும் கை கொடுப்போம்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள். எமது இணைய மின்னஞ்சல் முகவரி ... Read More »

யாழில் கனரக வாகனங்கள் சிறிய வீதிகள் ஊடாகச் செல்ல தடை சட்டம் நடைமுறை

கனரக வாகனங்கள் யாழ்.குடாநாட்டில் சிறு வீதிகளின் ஊடாக போக்குவரத்தில் ஈடுபட விரைவில் தடை விதிக்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன என யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார். யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார். வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து இது குறித்த எச்சரிக்கைப் பலகைகள் உரிய வீதிகளில் நடப்படவுள்ளன எனவும் அவர் கூறினார். அண்மைக்காலமாக விபத்துக்கள் அதிகரித்துச் செல்கின்றன. இதனால் உயிர் இழப்புக்களும் ஏற்படுகின்றன. இவ்வாறான சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கு பொலிஸாரினால் ... Read More »

Scroll To Top