Wednesday , April 26 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / இலங்கைச் செய்திகள் (page 5)

பதிவு வகை: இலங்கைச் செய்திகள்

Feed Subscription

உயர் காவல்துறை அதிகாரியாக செயற்பட்டு கான்ஸ்டபிளிடம் பண மோசடி

புத்தளம் பிரதி காவல்துறை மாஅதிபரின் தனிப்பட்ட உதவியாளராக தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் சிலாபம் பொலிஸில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ஒருவரிடம் 24,000 ரூபா வரை நிதி மோசடி செய்துள்ளார். தமக்கு அவசர தேவையான பணம் வேண்டும் எனவும், ஈஸி கேஷ் முறையில் தமக்கு பணத்தை அனுப்புமாறும் தொலைபேசி அழைப்பு ஒன்றின் மூலம் கோரியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். நேற்று மாலை (17) 5.40 அளவில் சிலாபம் நகரில் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபில் ... Read More »

இலங்கை மக்களுக்கு சிறந்த வாழ்க்கை முறையினை பெற்றுக் கொடுப்போம்: ரணில்

வியட்நாம் மக்கள் அனுபவிக்கும் சிறந்த ஒரு வாழ்க்கை முறையினை போன்று எமது நாட்டு மக்களுக்கும் சிறந்த வாழ்க்கை முறையினை பெற்றுக் கொடுக்க நல்லாட்சி அரசு முயற்சிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வியட்நாமுக்கான உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணிலுக்கும், வியட்நாம் பிரதமருக்கும் இடையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த 30 ஆண்டு யுத்தத்திற்கு பின்னர் வியட்நாம் துரிதமாக வளர்ச்சி அடைந்துள்ளது எனவும் வியட்நாமை முன்னுதாரணமாக கொண்டு நாமும் எமது நாட்டை ... Read More »

நல்லாட்சி அரசு தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது: சம்பந்தன்

நல்லாட்சி அரசு தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் அதன் காரணமாகவே பல்வேறு போராட்டங்களில் தமிழ் மக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் நல்லாட்சி அரசு எந்த ஒரு முன்னேற்றத்தையும் அடைய வில்லை என அவர் குற்றம் சாட்டியிருந்தார். எமது மக்களின் விருப்பத்தை மீறி எந்த ... Read More »

போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை: சுவாமிநாதன்

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பிலான விசாரணைகளை உள்நாட்டு நீதிபதிகளை கொண்ட குழுவினராலேயே முன்னெடுக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள சிதம்பரம் ஆலயத்தில் வழிபாடு செய்த அவர் இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உள்ள நாட்டில் இடம் பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக வெளிநாட்டு நீதிபதிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான வளம் இலங்கையின் நீதித்துறையில் உள்ளது என்றும் அமைச்சர் ... Read More »

மீதொடமுல்ல அனர்த்தம்: உயிரிழப்புக்கள் 26 ஆக உயர்வு

மீதொடமுல்ல குப்பை மேடு இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலியானவர்களில் 12 ஆண்களும் 14 பெண்களும் அடங்குகின்றனர். இவர்களுள் 7 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 14 ஆம் திகதி பிற்பகல் கொலன்னாவ, மீதொடமுல்ல குப்பை மேட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் சுமார் 150 இற்கு மேற்பட்ட வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் 180 குடும்பங்களைச் சேர்ந்த 625 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் பலர் புதையுண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு ... Read More »

யுத்தத்தில் மீட்கப்பட்ட ஒரு பில்லியன் பெறுமதியான நகைகளை ஒப்படைக்க நடவடிக்கை

யுத்த காலத்தின் போது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வீடுகளிலிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் ஏனைய ஆபரணங்களை மீண்டும் உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, மத்திய வங்கிக்கு முன்வைக்கப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு ஏற்ப, இராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்ட 37.7 கிலோ கிராம் தங்க ஆபரணங்கள் தமது கட்டுப்பாட்டில் உள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன் பெறுமதி சுமார் ஒரு பில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ... Read More »

இந்தமுறை தொழிலாளர் தினத்தில் உலக சாதனை படைப்போம்?

எதிர்வரும் தொழிலாளர் தினத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உலக சாதனை படைக்கும் என்று கடற்றொழில் துறை இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராய்ச்சி தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் கூட்டு எதிர்க்கட்சி ஆகியன நடாத்தும் மே தின கூட்டத்தை விடவும், ஐக்கிய தேசியக் கட்சி பலம் மிக்க மே தினக் கூட்டமொன்றை நடாத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஹம்பாந்;தோட்டை பகுதியில் இன்று (16) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். Read More »

விபத்தில் ஒருவர் பலி, இருவர் காயம்

பூநகரி – முட்கொம்பன் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலை யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி ஊடாக பயணித்த வாகனம் ஒன்று, பூநகரி – பரந்தன் பாதையிலிருந்து முட்கொம்பன் நோக்கிச் செல்வதற்கு திருப்பிய போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், இதன்போது காயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பிரதான பாதையிலிருந்து முட்கொம்பன் வீதிக்கு திரும்ப முற்பட்ட வாகனத்தை முந்திச் செல்ல ... Read More »

வட.கிழக்கில் காணிவிடுவிப்பு தொடர்பாக கூட்டமைப்புடன் முக்கிய பேச்சுவார்த்தை

வட.கிழக்கில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் காணப்படும் காணிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெறவுள்ளது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தனவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையே நாளையதினம் (திங்கட்கிழமை) இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி சந்திப்பில் முப்படையினைச் சேர்ந்த அதிகாரிகளும், அமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பின்போது இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதுடன் இவற்றுக்கான தீர்வுகளும் எடுக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More »

Scroll To Top