Monday , September 25 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / உலகச் செய்திகள்

பதிவு வகை: உலகச் செய்திகள்

Feed Subscription

அமெரிக்காவிற்கு எதிராக கடும் நடவடிக்கை வடகொரியா திட்டவட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு எதிராக, வரலாற்றில் முதன் முறையாக கடுமையான எதிர் நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார். வடகொரியாவை முற்றாக ஒழிப்போம் என்ற ட்ரம்பின் அச்சுறுத்தலையடுத்து, வடகொரிய ஜனாதிபதி இன்று (வெள்ளிக்கிழமை) இந்த அதிரடி பதிலை வெளியிட்டுள்ளார். ஜொங் உன்னின் பதிலடி குறித்து வடகொரிய அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ட்ரம்ப் மனநிலை பாதிக்கப்பட்டவர் என சுட்டிக்காட்டியுள்ள வடகொரிய ஜனாதிபதி, போர் அறிவிப்பு குறித்த ட்ரம்பின் பிரகடனமானது மிகவும் ... Read More »

டொனால்ட் ட்ரம்பை அசிங்கப்படுத்திய வடகொரியா

ஐ.நாவில் அமெரிக்க ஜனாதிபதி ஆற்றிய உரை நாய் குரைத்ததை போன்று இருந்ததாக வடகொரியாவின் சிறந்த இராஜதந்திரிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஐ.நாவின் 72 ஆவது பொதுக் கூட்டத்தொடரின்போது, ட்ரம்ப வடகொரியாவின் நடவடிக்கைகள் தொடர்பில் காரசாரமான உரையொன்றை ஆற்றியிருந்தார். வடகொரியாவின் தொடர் ஏவுகணை நடவடிக்கைகளுக்கு எதிராக பல தடைகள் ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வடகொரியாவின் நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அத்துடன் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ... Read More »

அம்பலமானது KFC சிக்கனின் ரகசியம் இனியும் அடிமையாகாதீர்கள்

உலகில் உயிரினங்களை கொல்லும் பெரிய பண்ணையை வைத்திருப்பதே KFC சிக்கன் தான். இங்கே என்ன நடக்கிறது என்பதை ஆங்கில ஊடகமான BBC தற்போது போட்டு உடைத்து உள்ளது. இங்கே வளர்க்கபப்டும் சிக்கனின் ஆயுட் காலம் எவ்வளவு தெரியுமா? வெறும் 35 நாட்கள் தான். இந்த சிக்கன் அனைத்தும் “இருபால் உயிரினமாகும்”. அவை ஆண் அல்லது பெண் கிடையாது. அதனால் அவை வேகமாக வளர்கிறது. அதற்காக ஒரு நச்சுப் பதார்த்தத்தை அவர்கள் தீனியில் கலந்து கொடுக்கிறார்கள். இதனை உண்ணும் இந்த சிக்கன் , வெறும் 35 ... Read More »

வங்கிகளில் ATM அட்டை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

இலங்கையில் பிரபல வங்கிகளின் அனைத்து ATM இயந்திரங்களுக்கு முன்னால் தற்போது அறிவித்தல் ஒன்றை காட்சிப்படுத்தியுள்ளது. குழுவொன்று இணைந்து வங்கி நிர்வாக சபை என அடையாளப்படுத்தி, போலி தகவல் வெளியிட்டு பயனாளர்களின் ATM அட்டையின் இரகசிய இலக்கங்களை பெற்றுக் கொள்ளும் மோசடி நடவடிக்கை தொடர்பிலேயே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த அறிவித்தலில், “அடையாளம் காணப்படாத குழுவொன்றினால் வங்கி நிர்வாக சபை ஊழியர்கள் போன்று செயற்பட்டு, வாடிக்கையாளர்களின் ATM அட்டையில் உள்ள தரவுகளை கையில் கொண்டு செல்லும் இயந்திரத்தில் பெற்று கொள்கின்றனர். அவ்வாறு பெற்றுக் கொள்ளும் தரவுகளில் தங்கள் வங்கி ... Read More »

தொழில் நிறுவனங்களையும் வேலை தேடுபவர்களையும் இணைக்கும் செயலி

பணியாளர்களை தேடும் தொழில் நிறுவனங்களையும் தொழில் தேடும் பணியாளர்களையும் இணைக்கும் வகையில் புதிய தொலைபேசி செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனூடாக பல நிறுவனங்கள் மாத்திரமின்றி வேலை கிடைக்காமல் தவிக்கும் ஊழியர்களும் பயனடைய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. “ஹையர் மீ” என்னும் நிறுவனமே குறித்த செயலியை அறிமுகம் செய்தள்ளது. உங்கள் தொலைபேசியின் கூகுள் பிளே ஸ்ரோறில் “ஹையர் மீ” என்றே பெயரிடப்பட்டுள்ள இந்த அப்ஸ்சை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இதில் இலவசமாக பெயர், முகவரி, புகைப்படம், வீடியோக்கள், என்பவற்றை பதிவு செய்யலாம். ... Read More »

வடகொரிய எல்லையில் தீவிரம் தொடரும் போர் பயிற்சிகள்

வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது ஆறாவது முறையாக ஏவுகணை சோதனை நடத்தியுள்ள வடகொரியாவின் செயலால், அமெரிக்காவும் தென்கொரியாவும் போர் பயிற்சியை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் குவாம் தீவில் இருந்து வந்த அமெரிக்காவின் B-1B ரக குண்டு வீச்சு விமானங்கள் இரண்டு, ஜப்பானில் இருந்து வந்த F-35 ரக ஜெட் விமானங்கள் நான்கு, தென்கொரியாவின் F-15K ரகத்திலான நான்கு விமானங்கள் ஆகியவை குண்டு வீச்சு உள்ளிட்ட போர் பயிற்சியில் ஈடுபட்டதாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ... Read More »

நியூ­யோர்க்கில் இன்று ஆர்ப்பாட்டம்

நியூ­யோர்க்கில் உள்ள ஐ.நா. தலை­மை­ய­கத்தில் 72 ஆவது பொதுச்­சபைக் கூட்­டத்­தொ­டரில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்று உரை­யாற்­ற­வுள்ள நிலையில், அவ­ருக்கு எதி­ரான போராட்டம் ஒன்றை நடத்த நாடு கடந்த தமி­ழீழ அர­சாங்கம் ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டுள்­ளது. இது­தொ­டர்­பாக, நாடு கடந்த தமி­ழீழ அர­சாங்­கத்­தினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள செய்­திக்­கு­றிப்பில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது, இலங்கை அர­சாங்கம் ஒரு குற்­ற­வாளி என்ற தொனிப்­பொ­ருளில் இலங்கை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஐ.நா. உரைக்கு எதி­ரான மக்கள் போராட்­ட­மொன்று நியூ­யோர்க்கில் இடம்­பெற இருக்­கின்­றது. ஐ.நா. பொதுச்­ச­பையின் வரு­டாந்தக் பொதுக்­கூட்­டத்தில் பங்­கெ­டுக்கும் இலங்கை ஜனா­தி­பதி இன்று 19 ... Read More »

உலகம் முழுவதும் 81 கோடி பேர் பசியால் தவிக்கின்றனர்

உலகம் முழுவதும் 81.5 கோடி பேர் பசியால் தவிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் உலகம் முழுவதும் சுமார் 81.5 கோடி பேர் பசியால் வாடுகின்றனர் எனவும் இது உலக மக்கள் தொகையில் 11 சதவீதமாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் ஆசியாவில் மட்டும் 52 கோடி பேரும் ஆபிரிக்காவில் 24 கோடி பேரும் பசியால் வாடுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது. உள்நாட்டுப் போர், பருவநிலை மாற்றத்தால் ஆண்டுதோறும் பசியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது எனவும் கடந்த ... Read More »

மூன்றாம் உலக மகாயுத்தம் வெடிக்குமா

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகரான எச் .ஆர் .மக்மாஸ்டர் என்பவர் , வடகொரியாவின் வெள்ளிகிழமை ஏவுகணைச் சம்பவத்தின் பின்னர் , அமெரிக்கா இராணுவத் தாக்குதல் வழியை நாடலாம் என்று தெரிவித்திருக்கிறார். . உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தும் , வட கொரியா கடந்த வெள்ளியன்று பாலிஸ்டிக் ஏவுகணைப் பரிசோதனை ஒன்றை மேற்கொண்டிருந்தது . “ஆனால் நாம் விரும்புவது அதுவல்ல. உலகநாடுகளை அழைத்து , போரைத் தவிர்க்க எதைச் செய்யலாம் என்பதையே நாம் விரும்புகிறோம் “என்று வெள்ளைமாளிகை அறிக்கை ஒன்றில் இவர் தெரிவித்துள்ளார் . “ தற்போதைய ... Read More »

லண்டன் குண்டுவெடிப்பு 18 வயது இளைஞன் கைது

லண்டன் சுரங்க ரயிலில் நடந்த குண்டுவெடிப்பில் சுமார் 24 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களை வேட்டையாடிய போலீஸார் 18 வயது இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். ஆனாலும், ஒரு நபருக்கு மேல் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் அதிகாரிகள் ரகசிய புலனாய்வு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதால் விவரங்களை வெளியிட இடமில்லை என்று தெரிவித்துள்ளனர். இங்கிலிஷ் கால்வாய், டோவர் துறைமுகப் பகுதியிலிருந்து 18 வயது இளைஞர் ஒருவரை கெண்ட் போலீஸ் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் இவர் ... Read More »

Scroll To Top