Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / உலகச் செய்திகள் (page 10)

பதிவு வகை: உலகச் செய்திகள்

Feed Subscription

பார்வையற்ற அகதியின் உண்மை கதை! சாதனை மனிதனின் வாழ்க்கை

கடந்த மாதம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது மகன் ஆலன் பட்டம் பெற்றதைப் பார்த்தபோது, ஆஃப்ரா அவர் பிறந்த தருணத்தை நினைத்துக்கொண்டார். “உங்கள் குழந்தை பார்வையற்றவராக இருப்பதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்,” என்று அப்போது பாக்தாத்தில் உள்ள அவரின் ஒரு அண்டை வீட்டுக்காரர் கூறினார். அவரது மகனின் உடல் நிலை, அங்கு ஒரு விலக்கப்பட்ட விவகாரமாக இருந்ததால், அப்போது அந்நகரில் ஆஃப்ரா ஒரு பேசுபொருளாக்கப்பட்டார். அப்போது 1995-ஆம் ஆண்டு. இராக் அதிபராக சதாம் ஹுசைன் இருந்தார். வளைகுடா போர் முடிந்து மூன்று ஆண்டுகளே ஆகியிருந்தது. அந்நாட்டின் ... Read More »

பிரித்தானியாவில் 150 பேரின் குடியுரிமை பறிபோகிறது!

பிரித்தானியாவில் இருந்து வெளியேறிய குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகள் உள்ளிட்டவர்களின் குடியுரிமையை பறித்து அவர்கள் நாடு திரும்புவதற்கும் அரசு தடை விதித்துள்ளது. பிரித்தானியா அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் 150க்கும் மேற்பட்டோரின் குடியுரிமை பறிக்கப்படுகிறது. மட்டுமின்றி சிரியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று பயங்கரவாதிகளை திருமணம் செய்துள்ள பிரித்தானிய பெண்களும் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பேசிய பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரி ஒருவர், இனிமேல் பிரித்தானியாவுக்கு திரும்ப முடியாதவர்களின் பட்டியல் அதிகரித்துள்ளது அதிர்ச்சி தருவதாக உள்ளது, ஆனால் எங்களின் முதன்மையான ... Read More »

இலங்கை சென்ற சுவிஸ் யுவதிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

சுவிட்சர்லாந்து நாட்டு பல்கலைக்கழக மாணவி ஒருவரை கடத்தி சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சாரதியை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் ஹர்ஷ கெக்குனவெல இன்று உத்தரவிட்டுள்ளார். அதற்கமைய இந்த சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணை மேற்கொண்டு, அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அனுராதபுரம் தலைமை பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் அனுராதபுரம், விஜயபுர, விஜய மாவத்தை பகுதியை ... Read More »

இளம் பெண்ணின் விவாகரத்திற்கு காரணமான டொனால்ட் டிரம்ப்

டொனால்டு டிரம்ப் மீதும் அவரின் குடியரசு கட்சியின் மீதும் பற்று வைத்த பெண்ணை அவர் கணவர் விவாகரத்து செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. Lynn Aronberg என்ற பெண் அமெரிக்காவின் Miami Dolphins கால்பந்து அணியின் முன்னாள் சியர் லீடராக இருந்துள்ளார். இவர் Dave Aronberg என்ற நபரை கடந்த 2015ல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், Lynn-ம் அவர் கணவர் Dave-ம் பரஸ்பர சம்மதத்தோடு விவாகரத்து பெற்று கொள்வதாக அறிவித்துள்ளனர். இந்த விவகாரத்துக்கு அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முக்கிய காரணமாக உள்ளார் என்பது ... Read More »

நிறைமாத கர்ப்பிணி மற்றொரு பெண்ணிற்கு பிரசவம் பார்த்த அதிசயம்

நிறைமாத கர்ப்பிணியாக பிரசவத்துக்கு பெண் மருத்துவர் மருத்துவமனைக்கு வந்த நிலையில், வேறு பெண்ணுக்கு அவர் பிரசவம் பார்த்த தருணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Kentucky மாகாணத்தை சேர்ந்தவர் Amanda Hess. மகப்பேறு மருத்துவராக உள்ளார். நிறைமாத கர்ப்பிணியான இவர், தான் பணிபுரியும் மருத்துவமனையிலேயே தன் பிரசவத்துக்காக சேர்ந்துள்ளார். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கும் என்ற நிலையில் அவர் இருந்துள்ளார். இந்நிலையில் அவரின் பக்கத்து அறையில் Leah Halliday என்ற பெண்ணும் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது Leah Halliday வலியால் துடித்துள்ளார் அந்த நேரத்தில் மருத்துவமனையில் வேறு மருத்துவர்கள் ... Read More »

உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது

1. உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது. 2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய். 3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது. 4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும். 5. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம். 6. பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது. 7. மலையாள நடிகர் பிரேம் நசீர் 85 கதாநாயகிகளுடன் நடித்து உலக சாதனை புரிந்தவர். ... Read More »

மனைவியை சீரழிக்க நண்பர்களுக்கு அனுமதி வழங்கிய கொடூர கணவன்!!

விவாகரத்துக்கு சம்மதிக்காத மனைவியை நண்பர்களை விட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் அரியானா மாநிலம் சிர்ஷா பகுதியைச் சேர்ந்த பெண்ணை அவரது கணவர் விவாகரத்து செய்ய விரும்பினார். ஆனால் அந்த பெண் சம்மதிக்க வில்லை இதனால் ஆத்திரம் அடைந்த கணவர், தனது நண்பர்கள் 3 பேரை அழைத்து வந்து மனைவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துமாறு தெரிவித்துள்ளார். ஆனால் அந்த பெண் தப்பி ஓடி உள்ளார். பின்னர் துப்பாக்கி முனையில் அந்த அபலை பெண் மூன்று மிருகங்களால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட ... Read More »

ஏலத்தில் விடப்பட்ட அமெரிக்க ஜனாதிபதியின் ஓவியம் – எத்தனை டொலர் தெரியுமா?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வரைந்த ஓவியம் 29,184 டொலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மான்ஹாட்டனில் உள்ள பெரியளவிலான கட்டிடங்களை குறிக்கும் வகையில் ஜனாதிபதி டிரம்ப் ஒரு ஓவியத்தை வரைந்தார். டிரம்பின் படைப்பில் அவருக்கு சொந்தமான டிரம்ப் டவர் கட்டிடத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டில் தொண்டு நிறுவனத்திற்காக நடத்தப்பட்ட ஏலத்தில் இந்த ஓவியம் முதன் முதலில் விற்பனைக்கு வந்தது ஓவியத்தை ஏலத்தில் வாங்கிய நபர் பின்னர் அதை நேட்டி சாண்டர்ஸ் என்ற ஏல நிறுவனத்திடம் கைமாற்றியுள்ளார். இந்நிலையில், மீண்டும் அந்த ஓவியம் ... Read More »

755 தூதரக அதிகாரிகள் உடனடியாக வெளியேற உத்தரவு

ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் 755 பேர் உடனே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் நலனுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அபாயகரமானதாக விளங்குவதாகவும், அமெரிக்காவையும், அதன் நட்பு நாடுகளையும் பலவீனப்படுத்துவதாகவும் ரஷியா, ஈரான், வடகொரியா ஆகிய 3 நாடுகள் மீது குற்றச்சாட்டு அங்கு கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷியா நேரடியாக தலையிட்டதாகவும், உக்ரைன், சிரியா ஆகிய நாடுகளில் தனது ராணுவத்தின் மூலம் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் ... Read More »

கட்டுநாயக்கவில் திடீரென்று தரையிறங்கிய பெண் வானோடி!

ஆப்கானிஸ்தான் நாடின் தேசிய விமான சேவையைச் சேர்ந்த பெண் வானோடி Shaesta Waiz உலகத்தை சுற்றி வருகிறார். ஒரேயொரு இயந்திரத்தைப் பூட்டிய விமானத்தின் மூலமே இவர் இந்த உலகம் சுற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் இவர் திடீரென்று ஸ்ரீலங்காவின் கட்டு நாயக்க விமான நிலையத்தில் தறையிறங்கியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன. இவரது தரையிறக்கப் பட்டியலில் ஸ்ரீலங்கா உள்ளடங்காதபோதிலும் வானில் நிலவிவரும் சீரற்ற கால நிலையே இந்த தரையிறக்கத்துக்குக் காரணமெனச் சொல்லப்பட்டுள்ளது. இதுவரை பதினெட்டு நாடுகளில் தரையிறங்கியுள்ள இவர், Beechcraft Bonanza A36 என்ற ... Read More »

Scroll To Top