Tuesday , August 22 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / உலகச் செய்திகள் (page 106)

பதிவு வகை: உலகச் செய்திகள்

Feed Subscription

 அமெரிக்காவில் சிறுத்தையின் பிடியில் சிக்கிய சிறுவன்!

கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவில் இளைஞனொருவன் சிறுத்தையின் கூண்டில் சிக்கிக்கொண்டு தப்பிக்க முடியாமல் உயிரிழந்த சம்பவம் மிகவும் பரவலாக பேசப்பட்டது. அனைத்து உள்ளங்களை சஞ்சலப்படுத்திய விடயம் இது. இதே போன்ற இன்னுமொரு சம்பவம் நேற்றுமுன் தினம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் லைட் ரொக் மிருகக்காட்சி சாலையிலுள்ள சிறுத்தைக் கூண்டுக்குள் சிறுவன் ஒருவன் விழுந்துஇ தாக்கப்பட்டுஇ பலத்த காயங்களோடு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தந்தை மற்றும் தாத்தாவுடன் மிருககாட்சிசாலைக்கு சென்றுள்ளான் இந்த சிறுவன்இ 16 அடி உயரமான கூண்டின் ... Read More »

எகிப்து உச்சநீதிமன்றம் அருகே வெடிகுண்டு தாக்குதல்!

எகிப்தில், உச்சநீதிமன்றத்தின் அருகில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக எகிப்து உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்த 12 பேரில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எகிப்தில் கடந்த ஆண்டு முகமது மோர்சி அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, காவல்துறை மற்றும் ராணுவத்தினரை குறி வைத்து நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் ... Read More »

அமெரிக்காவின் உயர்விருதுக்கு நோ பயர் சோன் (NO FIRE ZONE) விவரணப்படம் பரிந்துரை!

இலங்கையின் இறுதிகட்ட யுத்ததின்போது தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரங்களை கொண்டு சனல் 4 தொலைகாட்சி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட நோ பயர் சோன் (NO FIRE ZONE) விவரணப்படம் அமெரிக்காவின் உயர் தொலைக்காட்சி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நோ பயர் சோன் (NO FIRE ZONE) விவரணப்படம் நேற்று திங்கட்கிழமை 2104ம் ஆண்டின் சர்வதேச எமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித குலத்துக்கு எதிரான கொடுமைகளை, போர்க்குற்றங்களை சாட்சியங்களுடன் இந்த விவரணப்படம் கொண்டிருப்பதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். Read More »

ஈராக்கில் 17 பேர்களை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொலை செய்தனர்

ஈராக் நாட்டில் அரசுக்கு எதிராக தீவிரவாத போராட்டங்களில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர் நேற்று ஒரே நாளில் 17 பேர்களை கொலை செய்திருப்பதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈராக் அரசு டிவி சேனல் ஒன்றில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து கொண்டிருந்த  ராத் அல் அஜ்ஜாவி என்ற  37 வயது நபரையும் அவருடைய உடன் பிறந்த தம்பியையும் கடந்த 7ஆம் தேதி கடத்தி சென்ற ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், தாங்கள் ஆரம்பிக்க இருக்கும் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிய வற்புறுத்தியதாகவும், அதற்கு ராத் அல் அஜ்ஜாவி இணங்காததால் அவரையும் ... Read More »

பாலியில் மகாபாரத கதையில் வரும் சிலைகள்!

பாலி நாட்டில் மகாபாரதக் கதைக்கரு மக்களின் அன்றாட வாழ்வியலில் பின்னிப்பிணைந்துள்ளது என்பதனை எடுத்துக்காட்டும் முகமாக மகாபாரதக் கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகள் பலவற்றினை சிலைகளாக வீதியின் இரு மருங்கிலும் படைக்கப்பட்டுள்ளது. அவற்றின் சில பதிவுகள் இதோ!. Read More »

மிகக் குறைந்த வயதில் நோபல் பரிசு வென்றவர் மலாலா

சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ள வெறும் 17 வயதே ஆகும் மலாலா யூசுஃப் ஸயீ, பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர். அப்பிராந்தியத்தில் தாலிபான்களின் கரம் வலுப்பெற்று, பெண் பிள்ளைகள் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பப்படுவது தடைபட்டபோது, சிறுமிகளின் கல்வி உரிமைக்காக மலாலா குரல்கொடுத்து வந்தார். 2012 ஒக்டோபரில் தனது பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் இவர் தலையில் சுடப்பட்டிருந்தார். பாகிஸ்தானிய மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிய அவருக்கு மேல் சிகிச்சை வழங்க பிரிட்டன் உதவியது. பர்மிங்ஹாம் நகரில் மிகப் பெரிய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல் நலம் தேறிய ... Read More »

விமான நிலையத்தில் காணப்படும் இந்து சமய புராணக்கதைச்சிலைகள்

பாங்காக் விமான நிலையத்தில் காணப்படும் மிகப்பெரிய சிலைத்தொகுதி இதுவாக அமைந்துள்ளது. அமிர்தம் பெறுவதற்காக தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த கதை உருவப்படுத்தப்பட்டுள்ளது. Read More »

பாகிஸ்தான் இராணுவத்திடமும் எதிர்க்கும் திறன் உள்ளது:பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை

பாகிஸ்தான் இராணுவத்திடமும் எதிர்க்கும் திறன் உள்ளது என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறியுள்ளார். கடந்த இரண்டு வாரங்களாக இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியத் தாக்குதலில் ஈடுப்பட்டு வருவதில் அப்பாவி மக்கள் சிலரும் பலியாகியுள்ளனர். பலர் படு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.பாகிஸ்தான் ராணுவம் ராணுவ நிலைகள் மீதுமட்டும் குறி வைக்காமல் 80 கிராமத்து மக்களின் குடியிருப்புக்களையும் குறிவைத்து தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றனர்.இதனால் கடும் காட்டமாக பிரதமர் நரேந்திர மோடியும், பாதுகாப்புத் துறை அமைச்சர் அருன்ஜெட்லியும் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தனர். ... Read More »

சிரியாவின் கோபனி நகரில் உக்கிர சண்டை- ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் வீழ்கிறது?

சிரியாவின் எல்லை நகரமான கோபனி நகரை கைப்பற்றுவதற்காக உக்கிர யுத்தத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகளின் வான்படை தாக்குதல்களையும் மீறி கோபனி நகரின் முக்கிய பகுதிகள் இன்று தீவிரவாதிகள் வசமாகி இருக்கிறது. சிரியா-துருக்கி எல்லையில் உள்ளது கோபனி நகரம். இங்கு குர்து இன மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த நகரைக் கைப்பற்றுவதற்காக கடந்த மாதம் 16-ந் தேதி ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதலைத் தொடங்கினர். ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிராக குர்து ஆயுதம் தாங்கிய படையினர் யுத்தம் நடத்தி வருகின்றனர். அதே ... Read More »

பலர் முன்னிலையில் பெண்கள் மேல் ஏறி நின்று அடித்து உதைக்கும் போலிச்சாமியார்! (அதிர்ச்சி வீடியோ)

போலிச்சாமியார் ஒருவன் பேயை போக்குகிறேன், உடலில் உள்ள நோயை போக்குகிறேன் என தன்னை பார்க்க வரும் பெண்களின் கழுத்தில் ஏறி மிதித்து கொடுமை படுத்தியுள்ளான். இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் சாகும் நிலையில் கிடக்கும் அப்பெண்களை கண்டுகொள்ளாமல், அனைத்து மக்களும் உட்கார்ந்து கைதட்டி இந்த கொடூர செயலை வேடிக்கை பார்ப்பதுதான். வடமாநிலத்தில் மக்கள் இன்னும்  மூடநம்பிக்கையில் அதிகமாக மூழ்கியுள்ளனர். விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ச்சியடைந்தும், நாட்டில் உள்ள மக்கள் மிகவும் பின் தங்கியுள்ளனர். இவர்களை போன்ற மூட நம்பிக்கை கொண்ட மக்களால் தான் இன்னும் போலிச்சாமியார்கள் ... Read More »

Scroll To Top