Sunday , August 20 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / உலகச் செய்திகள் (page 2)

பதிவு வகை: உலகச் செய்திகள்

Feed Subscription

பிரான்சில் வேகமாக பரவி வரும் சிக்கன்குனியா

முதல் தடவையாக பிரான்ஸ் சிக்கன்குனியா தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Var மாவட்டத்தில் இரண்டாவது நபர் இந்த தாக்குதலில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இந்த இரண்டாம் நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி சுகாராத ஆய்வு மையம் அறிவித்துள்ளது. முதலாம் நபர் வசிக்கும் அதே பகுதியில் தான் இரண்டாம் நபரும் அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும், வேகமாக பரவக்கூடிய நோய் என்பதால் அப்பகுதி உள்ள அனைத்து பகுதிகளிலும் நோய் பரவாமல் தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அறிய முடிகிறது. பிரான்சில் அடையாளம் காணப்பட்டுள்ள அளவில் பெரிய ... Read More »

வயிற்று வலியால் துடிதுடித்து இறந்த பெண்ணின் வயிற்றில் இருந்தது என்ன?

வயிற்று வலியால் துடிதுடித்து உயிரிழந்த பெண்ணொருவரின் சாம்பலில் இருந்து கத்திரிக்கோல் ஒன்று மீட்கப்பட்ட சம்பவமொன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியா, ஹரியான மாநிலத்தில் நிர்மலா என்னும் 50 வயதுடைய பெண் வயிற்றுவலியால் துடித்துள்ளார். அவருடைய குடும்பத்தினர் அந்த பெண்ணின் வயிற்றுவலியை கண்டுகொள்ளவில்லை. சிறிது நேரத்தில் அப்பெண் அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்து போயுள்ளார். அப்பெண்ணை யாரும் மருத்துவமனைக்கு எடுத்து சொல்லாததால் பரிதாபமாக இறந்து போனாள். பிறகு இறுதி சடங்குகள் நடைபெற்று அந்த பெண்யை எரித்துள்ளனர். சாம்பலில் பெரிய அளவுடைய கத்திரிக்கோல் ஒன்று தென்பட்டது. பிறதுதான் தெரிந்தது. ... Read More »

குவாம் தீவு தாக்குதல்: வடகொரிய தலைவருக்கு விளக்கம்

அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய தீவான குவாமில் தாக்குதல் நடத்துவதற்கான திட்டத்தை, வடகொரிய அதிகாரிகள் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜொன் உன்னிற்கு விளக்கமளித்துள்ளனர். வடகொரியாவின் அரசாங்க ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது. எனினும் அவர் இந்தத் திட்டத்துக்கு இன்னும் அனுமதிவழங்கவில்லை என்று கூறப்படுகிறது. வெளியாகியுள்ள அறிக்கைகளின்படி, அமெரிக்காவின் அடுத்தக்கட்ட செயற்பாடுகளைப் பொறுத்தே இந்த திட்டத்தை அனுமதிப்பதா? இல்லையா? என்பதை அவர் தீர்மானிப்பார் என்று தெரியவருகிறது. Read More »

மருத்துவதுறையில் புதிய சாதனை!

தாயின் கருவிலேயே குழந்தையின் மரபணுக்களை மாற்றலாம் என்ற புதிய சாதனையை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் படைத்துள்ளனர். மனிதனுக்கு பிறவியிலேயே ஏற்படும் உடல் குறைபாடுகளை தடுக்க மரபணுக்களை கருவிலேயே மாற்றி அமைக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் உடல் குறைபாடுகள் ஏற்பட காரணமாயிருக்கும் மரபணு கண்டுபிடிக்கப்பட்டு அது நீக்கப்படுவதுடன் ஆரோக்கியமான மரபணுவை உட்செலுத்தப்படும். இந்த ஆராய்ச்சி மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் மரபணு காரணமாக குறைபாடுகள் முற்றிலும் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. Read More »

மருத்துவர்களின் அலட்சியத்தால் சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

சிறுவனுக்கு சாதாரண வைரஸ் தொற்று தான் என மருத்துவர்கள் பெற்றோரிடம் கூறிய நிலையில் நோய் பாதிப்பு அதிகமாகி சிறுவன் உயிரிழந்துள்ளான். பிரித்தானியாவின் மான்செஸ்டரில் உள்ள Wigan நகரை சேர்ந்தவர் Thomas (38), இவர் மனைவி Joanne (34), இவர்களின் மகன் Connor Horridge (6). Connor-க்கு திடீரென கடுமையான காது வலியும், உடல்நலக் கோளாறும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர் Connor-ஐ தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவனை பரிசோதித்த மருத்துவர்கள் இது வைரஸ் தொற்று தான், இதுகுறித்து பெரிதாக நீங்கள் கவலையடைய தேவையில்லை என ... Read More »

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் – இரண்டு வாரங்களில் பதிவான குறைந்த பட்ச விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக நேற்றைய தினம் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,257 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது கடந்த இரண்டு வாரங்களில் பதிவான குறைந்த பட்ச விலை என குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க டொலரின் பலவீனமே தங்கத்தின் விலை வீழ்ச்சிக்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. உலக சந்தையில் தங்கத்தை அவுன்ஸ் கணக்கில் விலை சொல்வார்கள். ஒரு அவுன்ஸ் என்பது 32 கிராம், அதாவது நான்கு பவுண். இது ... Read More »

அமெரிக்காவில் அதிகமானவர்களுக்கு பப்பாளி பழத்தினால், சால்மோனெல்லா பக்றீரியாத் தொற்று

அமெரிக்காவில் 100 க்கும் அதிகமானவர்களுக்கு பப்பாளி பழத்தினால், கொடிய சால்மோனெல்லா பக்றீரியாவினால் உணவு நஞ்சாதல் ஏற்பட்டுள்ளது. நியூயார்க் மாநிலத்தில் 16 மாநிலங்களில் இந்தத்தொற்று ஏற்பட்டுள்ளதோடு இதனால் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 35 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மெக்ஸிக்கோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மரடோல் வகைப்பப்பாளிப் பழங்களில் இந்த பக்றீரியாக்கள் இருந்ததற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக நோய் கட்டுப்பாட்டு மையம் (CDC) கூறியுள்ளது. மெக்சிகோவில் உள்ள Campeche என்ற பண்ணை ஒன்றிலேயே சல்மானேல்லாத்தொற்று ஆரம்பித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அமெரிக்காவின் கரீபினா, காவி மற்றும் வலேரி போன்ற ... Read More »

திருணமத்திற்கு ஆயத்தமான இளம் யுவதி பலி!!

திருமணத்திற்கு ஆயத்தமான பெண்ணொருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ள சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளவர் Guzel Zakirova என்ற 23 வயதான யுவதி என வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. திருமண நிகழ்விவை முன்னிட்டு அவர் தனது நண்பியுடன் சிகையலங்காரம் செய்து கொண்டு மீண்டும் திரும்பும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது அந்த யுவதி மோட்டார் வாகனத்தை செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர் செலுத்திய மோட்டார் வாகனம் Bashkortostan பகுதயில் மேலும் ஒரு மோட்டார் வாகனத்துடன் மோதி இந்த ... Read More »

வாடகைக்கு வரும் டிரம்ப் வாழ்ந்த வீடு – வாடகை எவ்வளவு தெரியுமா?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வளர்ந்த வீடு வாடகைக்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியூயோர்க் நகரில் அமைந்துள்ள டிரம்பின் வீட்டை வாடகைக்கு எடுக்க நினைப்பவர்கள், நாள் ஒன்றுக்கு 777 டொலர் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 20 பேர் தங்கக்கூடிய இந்த வீடு வாடகைக்கு விடப்படும் என இணையம் மூலம் வீடு வாடகைக்கு விடும் சேவை செய்து வரும் ஏர் பி என் பி நிறுவனம் அறிவித்துள்ளது. டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவான பின்னர் இரண்டு மாதங்களில் குறித்த வீட்டை 2.14 மில்லியன் டொலர் மதிப்பில் விற்பனை ... Read More »

பிரித்தானிய நகரங்களில் நவீன அடிமைகள் -மனிதக்கடத்தல் அதிர்ச்சித் தகவல்

பிரித்தானியாவின் பெரிய நகரங்களில் நவீன அடிமைத்துவம் மற்றும் மனிதக்கடத்தல் நிலவரங்கள் எதிர்பார்த்த அளவைவிட அதிகமாக இருப்பதாக பிரித்தானிய தேசிய குற்றத்தடுப்பு முகமை அமைப்பு எச்சரித்துள்ளது. இவ்வாறான சட்டவிரோத நகர்வுகளால் சுமார் பத்தாயிரம் முதல் பதின்மூவாயிரம் மக்களே பாதிக்கப்பட்டிருக்கலாம் ஆரம்பதில் நினைத்தாலும் தற்போது அதனைவிட ஆயிரக்கணக்கில் பாதிக்கபட்ட மக்கள் இருப்பதாகவும் மேற்படி அமைப்பு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இந்தவிடயத்தில் இதுவரை பகிரங்கமான சம்பங்கள் சொற்பமே எனவும் வெளியில் வராத பல விடயங்கள் இருப்பதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. நியூகாசல் பகுதியில் சிறுமிகள் உட்பட பலவீனமான பெண்களை போதையூட்டி ... Read More »

Scroll To Top