Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / உலகச் செய்திகள் (page 20)

பதிவு வகை: உலகச் செய்திகள்

Feed Subscription

டொனால்ட் ட்ரம்ப்பிற்கு எச்சரிக்கை.

அமெரிக்காவின் ஒஹியா மாகாணத்தில் பல அரசாங்க இணைத்தளங்கள் அத்துமீறி ஊடுறுவப்பட்டுள்ளன. ஒஹியா மாகாண ஆளுநரது இணையத்தளமும் இவ்வாறு ஊடுறுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவானவர்களாலேயே இவ்வாறு இணைத்தளங்கள் ஊடுறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு ஊடுறுவியவர்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. Read More »

வடகொரியாவில் காட்டுமிராண்டித்தனமான ஆட்சி நடக்கிறது – டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று வடகொரியா கடுமையாக சாடியுள்ளது. அமெரிக்காவின் வெர்ஜீனியா பல்கலைக்கழக மாணவரான ஒட்டோ வார்ம்பியர் (22) கடந்தாண்டு வடகொரியாவுக்கு பயணம் செய்தபோது, அந்நாட்டு அரசால் உளவு குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். அதன்பின், அரசின் பிரச்சார சுவரொட்டியை திருட முயன்ற குற்றச்சாட்டில் 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் வாம்பியரின் உடல்நிலை மோசமாகி கோமா நிலைக்கு சென்றதால், கடந்த வாரம் விடுவிக்கப்பட்டார். அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்த வாம்பியர் சில தினங்களுக்கு ... Read More »

இனி ஏழைகள் இங்கு வாழக் கூடாது! டிரம்ப் சர்ச்சை பேச்சு

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்தே அவரிடம் இருந்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது. அந்த நிலையில் தற்போது அவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்து என்னவெனில், ‘பணக்காரர்களுக்கு மட்டுமே உயர்பதவிகளில் இடம் உண்டு என்றும், ஏழைகளுக்கு அதுபோன்ற பதவியை அளிக்க எனக்கு விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளார்’. ட்ரம்பின் இந்த கருத்து அமெரிக்காவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஒரு பதவியை ஒருவரிடம் ஒப்படைக்கும் முன் அவர் அந்த பதவிக்கு தகுதியானவர்தானா, அனுபவம் உள்ளவரா என்றுதான் ... Read More »

குளவியை மென்று தின்ற ஜனாதிபதி

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது.குளவியை மென்று தின்றார் கொஸ்டா ரிக்காவின் ஜனாதிபதி சோலிஸ் ரிவேரா. மத்திய அமெரிக்க நாடானா கொஸ்டா ரிக்காவின் அதிபர் சோலிஸ் ரிவேரா பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது, பறந்துவந்த ஒரு குளவி அவரது வாயில் தெரியாமல் நுழைந்து விட்டது. பேச்சுவாக்கில் அதை மென்று விட்டார். பத்திரிகையாளர்கள் அதைப் பார்த்துச் சிரித்ததும், மிச்சத்தையும் மென்று விழுங்கிய அதிபர், இது சுத்தமான புரதம் என்று நகைச்சுவையாகக் கூறிச் சமாளித்தார். இந்தக் காட்சியை ஊடகங்களின் கமராக்கள் படம்பிடித்தன. செய்தியாளர்கள் சூழ்ந்திருக்க, இந்தக் காட்சி நேரலையிலும் ஒளிபரப்பானது. Read More »

கட்டிபிடிக்க மறுத்த இவங்கா டிரம்ப் – வைரலான புகைப்படம்

அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப் மகள் இவங்கா டிரம்பின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதியின் மகளான இவாங்கா டிரம்ப் வாஷிங்டனில் உள்ள Capitol Hill-ல் சட்ட வல்லுனர்களை சந்திப்பதற்காக சென்றிருந்தார். அப்போது அவரை அமெரிக்க பாரளுமன்றத்தின் புளோரிட மாகண செனட் உறுப்பினரான Marco Rubio வரவேற்றுள்ளார். அப்போது அவர் இவங்கா டிரம்பை மரியாதை நிமித்தமாக கட்டிபிடிக்க முயன்றுள்ளார். ஆனால், அவர் அவ்வாறு செய்யும் போது, இவாங்கா டிரம்ப் கண்டுகொள்ளாமல் நிற்பது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது. ஆனால், இது தவறான ... Read More »

இஸ்ரேலில் காணாமல் போகும் குழந்தைகளின் பரிதாப கதைகள்..! கண்ணீர்விடும் பெற்றோர்..!

இஸ்ரேலில் குழந்தைகள் காணாமல் போவது சர்வ சாதாரண நிகழ்வாகிவிட்டது. 1969 களில் இருந்தே இந்த கலவர பூமியில் குழந்தைகள் வளர்வதற்கு ஒரு சாபக்கேடான பூமியாகவே இருந்து வருகிறது. அதிலும் யேமினில் இருந்து இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்த யூதர்களின் குழந்தைகள் காணாமல் போவது அதிசயம் தான் என்கிறார்கள். அவர்களின் பெற்றோரும் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. போரின்போது இறந்திருக்கலாம் அல்லது யாராவது கடத்திச் சென்று பணக்கார அமெரிக்க யூதர்களுக்கு விற்பனை செய்திருக்கலாம் என்று எண்ணி தங்களை திருப்தி படுத்திக்கொள்கின்றனர். லியா ஆரோனி 50ஆண்டுகளுக்கு முன்னர் தொலைந்து போன குழந்தையை ... Read More »

நாட்டின் மிக மோசமான ஜனாதிபதி யார்.? மாளிகை முழுக்க காண்டம்..!பாட்டில்…ரத்தக்கறை..??

நாடு முழுக்க அப்படி ஒரு சர்வே எடுத்தார்கள். அதாவது நாடு குடியரசு ஆனதில் இருந்து இது வரை சிறந்த ஜனாதிபதி யார், படு மோசமான ஜனாதிபதி யார்..? மிக நுணுக்கமாக நடத்தப்பட்ட ஆய்வு இது. மிக கவனமாக எடுத்தார்கள். காரணம் ஜானதிபதி தான் தேசத்தின் அடையாளம். அப்படி ஒரு ஆய்வை மேற்கொண்ட முடிவுகளை அவர்கள் மீடியாக்கள் முன்பாக வெளியிட்டனர். ஆடிப் போனது தேசம். ஆம் அமெரிக்க தேசம். அமெரிக்க வரலாற்றில் மிகச்சிறந்த ஜனாதிபதியாக ஆப்ரகாம் லிங்கன்..! இல்லையே இடிக்குதே.. மிகச்சிறந்த உலகப் புகழ் பெற்ற ... Read More »

மனைவி குழந்தைகளுடன் சவுதியில் செட்டிலாக நினைப்பவர்களுக்கு வருகிறது ஆபத்து

சவுதியில் புதிதாக குடும்ப வரி அமல்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு வேலைபார்த்து வரும் வெளிநாட்டினர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள். சவுதியில், மனைவியுடன் தங்கியிருந்தால் மாதத்திற்கு 100 ரியால் வரி கட்ட வேண்டும். மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தங்கியிருந்தால் மாதத்திற்கு 300 ரியால் வருடத்திற்கு 3600 ரியால் வரிசெலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வரி வரும் 2020 ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு ஒரு முறை 100 ரியால் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சவுதியில் தங்கி வேலை செய்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ... Read More »

பள்ளிவாசல் நன்கொடை பெட்டிகளிலிருந்து$12K திருட்டு!

மிசிசாகாவில் அமைந்துள்ள பள்ளிவாசல்களில் வைக்கப்பட்டிருந்த பல நன்கொடை பெட்டிகளிலிருந்து 12,000 டொலர்கள் திருடப்பட்டுள்ளது. இந்த மாத முற்பகுதியில் மிசிசாகாவில் உள்ள ஆறு பள்ளிவாசல்களில் இருந்து 12,000 டொலர்களை காணவில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. இது சம்பந்தமாக 58-வயதுடைய நபர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யூன் மாதம் 4-தொடக்கம் 17-ந்திகதிக்கிடைப்பட்ட காலப்பகுதியில் இத்திருட்டுக்கள் நடைபெற்றுள்ளன. பள்ளிவாசல் திறந்திருந்த சமயத்தில் சில திருட்டுக்களையும் இரு தடவைகள் பள்ளிவாசல்களை உடைத்தும் இந்நபர் திருடியுள்ளார். Read More »

பேய் வீடொன்றில் ஆயா வேலை பார்க்க சம்பளம் என்ன தெரியுமா?

வீட்டில் இருந்து ஆயா வேலை பார்ப்பதற்கு ஸ்கொட்லாந்தை சேர்ந்த குடும்பம் ஒன்று ஒருவரை தேடுகின்றது. ஸ்கொட்லாந்தின் எல்லையில் அமைந்துள்ள சிறிய கிராமத்தில் இவர்களது வரலாற்று சிறப்பு மிக்க வீடு அமைந்துள்ளது. ஐந்து மற்றும் ஏழு வயதுடைய இரண்டு பிள்ளைகளை வாரத்தில் நான்கு இரவுகள் கவனிக்க ஆயா ஒருவர் தேவைப்படுகின்றது. பெற்றோர்கள் வேலை காரணமாக அடிக்கடி வெளியே போக வேண்டிய நிலை. இதனால் இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளனர் என vd Childcare.co.uk தெரிவித்துள்ளது. இந்த வேலைக்கு வருடமொன்றிற்கு £50,000 (C$84,186.67), சம்பளம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயா ... Read More »

Scroll To Top