Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / உலகச் செய்திகள் (page 3)

பதிவு வகை: உலகச் செய்திகள்

Feed Subscription

உலகின் மிகவும் பெரிய மரத்­தா­லான ‘ரோலர் கோஸ்டர்

கிழக்கு சீனாவில் மரத்­தா­லான ‘ரோலர் கோஸ்டர்’ விளை­யாட்டு உப­க­ர­ண­மொன்று திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த முதலாம் திகதி திறந்­து­வைக்­கப்­பட்­டுள்ள இந்த உப­க­ரணம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன. அன்­ஹுயி மாகா­ணத்தில் பன்­டாவைல்ட் பொழு­து­போக்கு பூங்­காவில் திறந்து வைக்­கப்­பட்­டுள்ள இந்த 1,060 மீற்றர் நீளமும் 32 மீற்றர் உய­ர­மு­மு­டைய ரோலர் கோஸ்டர் உப­க­ரணம், உலகில் மரத்­தா­லான மிகவும் பெரிய ரோலர் கோஸ்டர் உபகரணமாக விளங்குகிறது. Read More »

வரவிருந்த விமானச் சேவை ஒன்றை ரத்துச் செய்துள்ளது

கரபியன் பிராந்தியத்தில் சூறாவளி இர்மா வரப்போகிறது என்ற காரணத்தால் , கரபியன் விமானச் சேவைகள் தடைப்பட்டுள்ளன . விமானங்கள் வந்திறங்கும் முக்கிய மையமான போர்டோரிகோ விமான இறங்கு தளம் அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தி உள்ளது. நேற்று செவ்வாயன்று பிரிட்டனிலிருந்து இங்கு வரவிருந்த விமானச் சேவை ஒன்றை ரத்துச் செய்துள்ளது . அதேபோல பிரிட்டிஷ் எயர்வேஸ் விமானமொன்று அன்டிகுவாவுக்கு வரவிருந்த பயணத்தை ரத்துச் செய்துள்ளது . அத்துடன் பயணிகள் அற்ற ஒரு விமானத்தை அனுப்பி, நேரத்தோடு அங்குள்ளவர்களை அன்டிகுவாவிலிருந்து கொண்டுவர ஏற்பாடு செய்திருக்கின்றது . அதேபோல வேஜின் ... Read More »

அமெரிக்கா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ரஷ்யா எச்சரிக்கை

அமெரிக்காவில் அமைந்துள்ள ரஷ்ய தூதரக நிலையங்களை மூடப்பட்டமைக்கு எதிராக அமெரிக்காவுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் அமைந்திருந்த துணைத் தூதுவர் காரியாலயம், வொஷிங்டன் மற்றும் நியூயோர்க்கில் அமைந்திருந்த தூதரக இணை நிறுவனங்களை மூடுமாறு அமெரிக்கா உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து, குறித்த காரியாலயங்கள் மூடப்பட்டதுடன், அவற்றில் பணியாற்றிய அதிகாரிகளும் வெளியேற்றப்பட்டிருந்தனர். இந்த நிலையில், குறித்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸனுடன், ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். குறித்த கலந்துரையாடலின் ... Read More »

உலகையே உலுக்கும் “ப்ளூ வேல்” வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

தற்போது உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் விளையாட்டு “ப்ளூ வேல்”, ரஷ்யாவில் அறிமுகமான இந்த விளையாட்டு உலக நாடுகளில் பல இளைஞர்களின் உயிரை எடுத்துவிட்டது. கடந்த சில நாட்களாக சிறுவர்கள் மத்தியில் இந்த விளையாட்டு கால் பதித்துள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ப்ளூ வேல் விளையாட்டின் பின்னணியிலிருந்ததாக சந்தேகிக்கப்படும் சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகளின் மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி 5,000ற்கும் மேற்பட்டோர் ‘ப்ளூ வேல்’ நிர்வகர்களாக (அட்மினாக) செயல்படுகின்றனர் ... Read More »

மணப்பெண்ணை கற்பழித்து தெருவில் வீசி சென்ற கொடூரம்..

கென்யாவின் தலைநகரம் நைரோபியாவை சேர்ந்த ஆங்கிலிகன் போதகர் டெர்ரி கோபங்கா. மறுநாள் அவருக்கு திருமணம். அவர் போதகர் என்பதால், சர்ச்சின் உறுப்பினர்கள், ஒட்டுமொத்த குடும்பம் என அனைவரும் ஒன்றாக குழுமியிருந்த தருணம் அது. டெர்ரியின் வருங்கால கணவர், அவர் விரும்பிய, கனவுக் கண்ட அந்நபர் மற்றும் டெர்ரி மிகவும் ஆத்மார்த்தமாக எதிர்பார்த்து காத்திருந்த நாளது. நைரோபியின் செயின்ட் கதீட்ரல் ஆலயத்தில் அவர்களது திருமணம் நடக்கவிருந்தது. மிகுந்த கனவுகளுடன், தனது திருமணம் நாள் கனவுகள் கண் முன் மெய்ப்பிக்கும் மறுநாளை எதிர்நோக்கி நிம்மதியாக டெர்ரி கழித்த ... Read More »

பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது

பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட தீவிர வலது சாரி அமைப்பை சேர்ந்த நால்வரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த நவ நாஜிகள் குழுவை சேர்ந்தவர்கள் இராணுவத்தில் பணி புரிபவர்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது பிரித்தானியாவின் தடைசெய்யப்பட்ட நசனல் அக்சன் என்ற வலதுசாரி குழுவை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே நால்வரையும் கைதுசெய்துள்ள பிரித்தானிய காவல்துறையினர் அவர்களது உடமைகளை சோதனை செய்து வருகின்றனர். கைதுசெய்யப்பட்ட நால்வரும் மேற்கு மிட்லான்ட் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் புலனாய்வு தகவல்களை ... Read More »

தாக்குதல் நடத்தினால் கண்டிப்பாகத் திருப்பி அடிப்போம்! ஐநா கூட்டத்தில் நிக்கி ஹாலே

உலக நாடுகளின் எச்சரிக்கைகளை மீறி, ஆறாவது முறையாக அணுகுண்டுச் சோதனை நடத்தி, அதைப் பெருமையுடன் பறைசாற்றியது வடகொரியா. இதை எதிர்த்து ஐ.நா சபை, பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தைக் கூட்டியது. இதில் பேசிய அமெரிக்கா, ‘போர் வேண்டுமென்று வடகொரியா பிச்சை எடுக்கிறது’ என்று விமர்சித்துள்ளது. உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில், தொடர் ஏவுகணை மற்றும் அணுகுண்டுச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. முன்னதாக, அமெரிக்காவின் போர் மிரட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், வடகொரியாவில் புதிய ஏவுகணைகளின் அறிமுகமும் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இதனால், ... Read More »

சல்வார் கமீஸில் கலக்கிய இந்திய மல்யுத்த வீராங்கனை!

உலக மல்யுத்தப் பொழுதுபோக்கு (டபிள்யூ.டபிள்யூ.இ), இந்தியப் பங்கேற்பாளர்களுக்குப் புதியதல்ல. WWE சாம்பியனான கிரேட் காளியின் பயிற்சியின் கீழ், நிறைய மல்யுத்த வீரர்கள் உருவாகிறார்கள். அந்த வரிசையில், இந்தியாவின் முதல் பெண் மல்யுத்த வீரராக ஹரியானாவின் கவிதா தேவியும் தற்போது இணைந்துள்ளார். முதல் போட்டியில், நியூஸிலாந்து மல்யுத்த வீரர் டகோட்டா காய் (Dakota kai) உடன் போட்டிபோட்ட கவிதா, முதல் சுற்றில் தோல்வி அடைந்தாலும், அவரது மல்யுத்தத் திறன்கள் மற்றும் அவரது ஆடை (சல்வார் கமீஸ்) மல்யுத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. பஞ்சாப் மல்யுத்த ஊக்குவிப்பு ... Read More »

பெகி வைட்சன் பூமி திரும்பினார்

விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த 665 நாட்களாக கடமையாற்றிய நிலையில் விண்வெளி வீராங்கனை பெகி வைட்சன் (Peggy Whitson) பூமிக்கு திரும்பியுள்ளார். 1996ஆம் ஆண்டு முதல் விண்வெளி நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்த அவர், நாசா நிலையத்தில் பணியாற்றுகிறார். அவருடன் மேலும் இரு உதவியாளர்கள் நேற்று பூமியை வந்தடைந்துள்ளனர். பூமியில் இருந்து 250 மைல் உயரத்தில், 10 ஆயிரம் கோடி அமெரிக்க டொலர்கள் செலவில் உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் காலத்துக்கு காலம் பல நாட்டு விண்வெளி நிபுணர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் நாசாவை சேர்த்த ... Read More »

ஜேர்மனியியில் இருந்து 70 ஆயிரம் பேர் வெளியேற்றம்

ஜேர்மனியின் பிராங்க்பேர்ட் நகரின் பல்கலைக்கழக வாளகமொன்றில் அண்மையில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சக்தி வாய்ந்த குண்டு இன்றைய தினம் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் அதன் பொருட்டு அங்குள்ள சுமார் 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் தற்காலிகத் தங்குமிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குண்டானது 2ம் உலக மகாயுத்தத்தின் போது இங்கிலாந்து விமானப் படையினரால் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   Read More »

Scroll To Top