Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / உலகச் செய்திகள் (page 4)

பதிவு வகை: உலகச் செய்திகள்

Feed Subscription

கூட்டுச் சேர்ந்த தென் கொரியா! அமெரிக்கா… சிக்கலில் வடகொரியா

அமெரிக்கா- வடகொரியா இடையில் பல மாதங்களாகப் பிரச்னை நிலவி வரும் நிலையில், தற்போது இரு தரப்புகளுக்கு இடையிலான மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் வடகொரியா, ஜப்பானின் வான் வழியைத் தாண்டி ஏவுகணைச் சோதனை நடத்தியது பிரச்னையின் வீரியத்தை இன்னும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஒன்றாக இணைந்து வடகொரியாவுக்கு எதிராகச் செயல்பட முடிவு செய்துள்ளன. உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் தொடர் ஏவுகணைச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. முன்னதாக, அமெரிக்காவின் போர் மிரட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ... Read More »

மகனை கொலை செய்த தாய்!! காரணம் அறிந்தால் திகைத்திடுவீர்கள்

தனது மகனை கொலை செய்த தாயை அமெரிக்க காவல்துறை கைது செய்துள்ளது. தனது 6 வயதான மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 18 வயதான மகனை இவ்வாறு துப்பாக்கியால் சுட்டு அவர் கொலை செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சகோதரனால் தான் பாலியல் வன்புணர்வுக்கு உட்டுபடுத்தப்பட்டதாக 6 வயதான மகள் அவரின் தாயிடம் கூறியுள்ள நிலையில், தாய் கடுமையாக கோபமடைந்து தனது சகோதரரின் உதவியுடன் இந்த கொலையை செய்துள்ளார். சகோதரனின் உதவியுடன் தனது மகனை காட்டுப்பகுதிக்கு கொண்டு வந்து துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல ஆயத்தமான போது ... Read More »

ஆற்றில் இருந்து ரோகிங்கயா முஸ்லிம்களின் உடல்கள் மீட்பு

மியன்மார் மற்றும் பங்களாதேஸ் எல்லையில் உள்ள ஆற்றில் இருந்து 20 ரோகிங்யா முஸ்லிம்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வின்படி இதுவரையில் 50 ஆயிரம் ரோஹிங்யாக்கள் மியன்மாரில் ராகஹைன் மாநிலத்தை விட்டு வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 27 ஆயிரம் ரோகிங்யாக்கள் மியன்மாரில் இருந்து பங்களாதேஸுக்கு அடைக்கலம் கோரி சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது Read More »

இந்தியாவுக்கு வெள்ள நிவாரணம் அறிவித்த கூகுள்

இந்தியா உள்பட மூன்று நாடுகளுக்கு வெள்ள நிவாரணாமாக 1 மில்லியன் டாலர் வழங்க உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியா, நேபாளம் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்ய கூகுள் நிறுவனம் முன்வந்துள்ளது. அதன்படி இந்தியா உள்பட 3 நாடுகளுக்கும் நிவாரண தொகையான 1 மில்லியன் டாலர் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதை தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியாவிற்கான கூகுள் நிறுவன துணைத்தலைவர் ... Read More »

9 வயது சிறுவனை கொன்று, சடலத்தை தின்று, ரத்தத்தை குடித்த வாலிபர்!

16 வயதான வாலிபர், 9 வயது சிறுவனை கொன்று உடலை ஆறு பாகங்களாக அறுத்து, அந்த சடலத்தை தின்று, ரத்தத்தை குடித்த கொடூர சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. 9 வயது சிறுவனை கொன்று, சடலத்தை தின்று, ரத்தத்தை குடித்த வாலிபர்! பஞ்சாப் மாநிலம், லூதியானா மாவட்டத்தில் சுமார் ஏழு மாதங்களுக்கு முன் திங்கள் நாளில் 9 வயதான தீபு குமார் என்ற சிறுவன் காணவில்லை என அப்பகுதி காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மறுநாளில் துக்ரி நகரில் ஒரு காலியான நிலப்பரப்பில் தீபு ... Read More »

எகிப்து நாட்டில் தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து: 14 பேர் பலி..!

எகிப்து நாட்டில் தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்ததாகவும், 32 பயணிகள் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எகிப்து நாட்டின் மத்தியப் பகுதியான பெனி சூயெப் நகரை அந்நாட்டின் தலைநகரான கெய்ரோவுடன் இணைக்கும் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஒரு சுற்றுலா பஸ் இன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியே வந்த லாரியும் – பேருந்தும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிலரது ... Read More »

மான்செஸ்டர் நகருக்கு வெட்கிரைண்டர் வந்த கதை

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்திற்கு இணையான பருத்தி தொழிலில் புகழ்பெற்றதனால் மும்பை இந்தியாவின் மான்செஸ்டர் எனவும், கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனவும் பெருமை பெற்றது. இதையும் தாண்டி கோவை வெட்கிரைண்டர் தொழிலுக்கு புகழ் வாய்ந்தது. கடந்த ஜெயலலிதா ஆட்சியில் 5 ஆண்டுகளில் தமிழகம் முழுக்க விநியோகம் செய்யப்பட்ட சுமார் 1.50 கோடி கிரைண்டர்கள் கோவையிலிருந்து விநியோகம் செய்யப்பட்டவைதான். இந்த தொழிலில் மட்டும் இங்கே 700க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் ஈடுபடுகின்றன. மாதத்திற்கு 1லட்சம் கிரைண்டருக்கு மேல் உற்பத்தியாகிறது. இதன் மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ... Read More »

மர்ம நபர்களால் கொல்லப்பட்ட தந்தை ; உயிரை விட்ட தாய் ; ஒரே நாளில் அனாதையான 3 குழந்தைகள்

இரட்டை குழந்தைகள் பிரசிவித்த தாயொருவர் பத்து நாள் உயிருக்கு போராடி கடையில் தனது கணவனின் இறுதி கிரிகையன்று உயிரிழந்தமையால் அத்தம்பதிகளின் மூன்று குழந்தைகளும் அனாதையாகியுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் மீளா சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் ஜெவேயின் சுக்யின் மனைவி ஸ்டெபானி கேசர்ஸ் இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்றுள்ளது. மீண்டும் கர்ப்பமடைந்த ஸ்டீபனி வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் வீட்டில் இருந்த ஜெவேயின் மர்ம நபர்கள் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இடம்பெற்று மூன்று ... Read More »

நடுத் தெருவில் விட்டப்பட்டார் டொனால்ட் ட்ரம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இணைய பாதுகாப்பு குழுவின் அனைத்து உறுப்பினர்களும் தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர். இந்த குழுவில் ஏழு சிறப்பு நிபுணர்கள் அங்கம் வகிக்கின்றனர். அவர்கள் அனைவரும் தமது பதவி விலகல் கடிதங்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இணையம் சார்ந்த பாதுகாப்பு விடயங்களில் அலட்சியமாக செயற்படுவதாக கூறி அவர்கள் தமது பதவிகளை பதவி விலகியுள்ளனர். அத்துடன், அமெரிக்காவில் இடம்பெற்றுவரும் இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் டொனால்ட் ட்ரமப் செயற்படவில்லையென்பதையும், குறித்த இணைய நிபுணர்கள் காரணமாக குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன Read More »

நடுகடலில் இரண்டாக பிளந்த கப்பல் – நடந்தது என்ன…?

கருப்பு கடல் பகுதியில் மங்கோலிய சரக்கு கப்பல் ஒன்று நடுக்கடலில்இரண்டாக பிளந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. The Leonardo என்ர மங்கோலிய சரக்கு கப்பல் 114மீ நீளமானது. நடுகடலில் நங்கூரமிடப்பட்டுருந்த அந்த கப்பல் திடீரென இரண்டாக பிளந்தது. அந்த கப்பலில் இருந்த 11 ஊழியர்களை துருக்கி துறைமுக அதிகாரிகள் விரைந்து மீட்டனர். ஆனால், கப்பலின் ஒரு பகுதி கடலுக்குள் மூழ்கியது. அந்த கப்பல் தனது பயணத்தை துவங்கி 42 ஆண்டுகள் ஆனதால் இவ்வாறு நடந்திருக்ககூடும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான வீடியோ தற்போது ... Read More »

Scroll To Top