Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / உலகச் செய்திகள் (page 5)

பதிவு வகை: உலகச் செய்திகள்

Feed Subscription

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்

உலகின் முன்னணி சமூக வலைத்தளங்கள் ஃபேஸ்புக்கும் டுவிட்டரும் தான். ஃபேஸ்புக் அளவிற்கு டுவிட்டர் லாபகரமாக இல்லை என்றாலும் டுவிட்டருக்கு என்று உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.இந்த நிலையில் நேற்று திடீரென ஃபேஸ்புக் சில மணி நேரம் நிலை தடுமாறியது. இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் சிறிது நேரம் ஃபேஸ்புக்கில் நுழைய முடியாமல் அதன் பயனாளிகள் தவித்தனர். ஃபேஸ்புக் முடங்கியதற்கு என்ன காரணம் என்று டுவிட்டரில் அனைவரும் கேள்வி கேட்டனர் இந்த நிலையில், ஃபேஸ்புக் நிறுவன உரிமையாளர் மார்க் ஜூக்கர்பெர்க் ... Read More »

ஈராக்கில் பயங்கரம்!! – தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 500 உடல்கள்

ஈராக்கில் 2 புதைகுழிகளில் 500க்கும் மேற்பட்டோரின் உடல்கள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஈராக்கில் 2014ம் ஆண்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் தொடங்கியது. ஈராக்கின் 2ஆவது பெரிய நகரமான மொசூல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய தேசம் என்ற தனி நாட்டை உருவாக்கினார்கள். தற்போது அமெரிக்க ராணுவம் உதவியுடன் ஈராக் ராணுவம் மொசூல் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளை மீட்டுள்ளது. அங்கு இராணுவம் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளது. மொசூல் அருகே படவுஸ் நகரில் மத்திய சிறைச்சாலை உள்ளது. அங்கு 2 மிகப் பெரிய ... Read More »

என் மகளின் பேச்சை கேட்டு 20 நாளாச்சு!! கண்ணீர் சிந்தும் ஏழைத்தாய்

மும்பை மருத்துவமனையில் வலியால் துடித்து அழும் 9 வயதுச் சிறுமியின் சிகிச்சைக்கு நல்லுள்ளங்களிடம் நிதியுதவி கேட்கிறார் அவரின் தாய். மும்பையில் குப்பை பொறுக்கும் தொழில் செய்பவரின் மனைவி லட்சுமி. அவர்களுக்கு 3 மகள்கள், 1 மகன். அவர்களின் கடைசி மகளான 9 வயது சசிகலா சுட்டிப்பெண். லட்சுமியின் கணவர் மாதம் 5 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றி வருகின்றார். விடாமல் பேசி விளையாடி துருதுருவென்று இருக்கும் சசிகலா வரலாற்று பரீட்சைக்கு படித்துக் கொண்டிருந்தபோது கால் வலிக்கிறது என்று தெரிவித்துள்ளார். காய்ச்சலும் அடித்துள்ளது. உடனே ... Read More »

ஏவுகணை திட்ட விபரங்களை கசிய விட்ட வடகொரியா: காரணம் என்ன?

வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் ஒரு ஆயுத தொழிற்சாலையை மேற்பார்வையிட்டது பற்றிய செய்தி வெளியீட்டில், அந் நாட்டின் இன்னும் சோதிக்கப்படாத ஏவுகணை அமைப்புகளின் விவரங்கள் தற்செயலாக வெளியாகியுள்ளன. பாதுகாப்பு அறிவியல் ஆய்வு நிலையத்தில் அதிபர் கிம் மேற்கொண்டது பற்றிய அறிக்கையோடு கேசிஎன்ஏ அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட புகைப்படங்கள், அந்த நிலையத்தின் சுவர்களில் ஹவாசொங்-13 மற்றும் புக்குக்சொங்-3 என்று அழைக்கப்படும் ஏவுகணைகளைப் பற்றிய சுவர் வரைப்படங்களை காட்டுகின்றன. ஹவாசொங்-13 ஏவுகணை மூன்றடுக்கு எரிபொருள் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஒன்று எனத் ... Read More »

பாரம்பரியங்களும் சட்டங்களும் எதிர்காலமும்

இந்திய வரலாற்றில் மாத்திரமல்ல, அண்மைக்கால உலக வரலாற்றிலும், மிக முக்கியமான தீர்ப்பொன்றை, இந்திய உச்ச நீதிமன்றம், நேற்று முன்தினம் வழங்கியிருக்கிறது. ‘முத்தலாக்’ என்று அழைக்கப்படுகின்ற விவாகரத்து முறை, இந்திய அரசமைப்புக்கு முரணானது எனவும், அந்நடைமுறையைத் தடை செய்வதாகவும், அந்நீதிமன்றம் அறிவித்தது. இது, மிகவும் முக்கியமான தீர்ப்பாக அமைந்தது. அதைவிட, எதிர்காலத்தில் பல முக்கியமான தீர்ப்புகளுக்கான முன்னோடியாகவும் கூட, இது அமையக்கூடும். இதனால்தான், இது பற்றியும் இதைப் போன்ற வேறு சில விடயங்கள் பற்றியும் ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. முத்தலாக்’ என்பது, “தலாக், தலாக், ... Read More »

ஏமன் தலைநகர் அருகே விமானத் தாக்குதல்: 41 பேர் பலி

ஏமன் நாட்டின் தலைநகர் சனா அருகே உணவு விடுதி ஒன்றின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 41 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவத்தில் ஐக்கிய நாடுகள் மன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகளே இந்தத் தாக்குதலை நடத்தியதாக சனா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்திருப்பதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனக் கருதப்படுகிறது. மட்டுமின்றி இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து 13 பேர் மாயமானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக சவுதி அரேபியக் கூட்டுப் ... Read More »

காற்று மற்றும் மின்சாரத்தில் உணவு தயாரிப்பு

காற்று மற்றும் மின்சாரம் மூலம் உணவு தயாரிக்கும் முறையொன்றை, பின்லாந்தில் உள்ள வி.டி.டி. தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம், லபீர்னந்தா தொழில் நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து இச்சாதனை புரிந்துள்ளனர். காற்றில் இருந்து கார்பன்டை ஆக்சைடை பிரித்து எடுத்து அதிலிருந்து புரோடீன் பவுடர் தயாரித்துள்ளனர். அதை மனிதர்கள் மற்றும் விலங்குகள் உணவு பொருளாக பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளனர். இந்த புரோடீன் பவுடரை மின்சாரத்துடன் சேர்த்து எங்கு பயன்படுத்தினாலும் அது உணவுப் பொருளாக மாறும் மேலும் இதை நிலத்தில் பயன்படுத்துவதன் மூலம் பயிர்கள் செழித்து ... Read More »

டொனால்ட் டரம்ப் வழங்கிய உறுதிமொழி

அமெரிக்க துருப்புகள் ஆப்கானில் தொடர்ந்து போராடப்போவதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதி அளித்துள்ளார். ஆப்கானில் இருந்து படைகளை வாப்பஸ் பெறுவதான அவரது முந்தைய வாக்குறுதியை மாற்றிக்கொண்டே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 16 ஆண்டுகளாக ஆப்கானில் யுத்தம் புரியும் அமெரிக்கப் படைகள் விரைவாக வாபஸ் பெறப்பட்டால் யூகிக்க முடியாத விளைவுகள் ஏற்படலாம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆப்கானில் அமெரிக்காவின் மூலோபாய திட்டம் குறித்து டிரம்ப் கடந்த திங்கட்கிழமை நாட்டு மக்களுக்கு முதல் முறை உரையாற்றினார். ஜனாதிபதி பதவியை ஏற்கும் முன்னர் ஆப்கானில் இருந்து ... Read More »

கரடி தாக்கியவர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார்

சொந்தக் கார்களில் பயணம் செய்து காட்டு மிருகங்களை பார்த்து ரசிக்கும் வனவிலங்குப் பூங்காவொன்றில் , ஒருவர் கரடியால் தாக்கப்பட்டுள்ளார் . சீனாவின் பெய்ஜிங் நகர் அருகே உள்ள இந்தப் பூங்காவில் , குறிப்பிட்ட நபர் காரில் சென்றுகொண்டிருந்த சமயம் கார்க் கண்ணாடியைத் திறந்ததாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது . தோள்பட்டைக் காயங்களுடன் உயிர் பிழைத்தார் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள் இதே பூங்காவில் கடந்த வருடம் ஒரு புலி பெண்ணொருத்தியைத் தாக்கி மரணப்படுக்கையில் கிடத்தி இருந்தது .தாயும் மகளும் காருக்கு வெளியே வந்த சமயம் புலிகள் ... Read More »

மர்மப் பொதியால் வெள்ளை மாளிகையில் ஏற்பட்ட பரபரப்பு!

அமெரிக்க அரசுத் தலைவர் வாயில்தளமான வெள்ளை மாளிகையில் ஏற்பட்ட மர்மப்பொதிப் பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது. சந்தேகத்துக்கு உரிய வகையில் வெள்ளை மாளிகை வளாகத்தில் மர்மப்பொதி ஒன்று இனங்காணப்பட்டிருந்தது. உடனடியாகவே வெள்ளை மாளிகையினை மூடிய காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள வீதிகளையும் காவல்துறையினர் தற்காலியமாக மூடியிருந்தனர். தீவிர சோதனைகளுக்கு பின்னர் குறித்த மர்மப்பொதி ஆபத்து விளைவிக்க கூடிய ஒன்றல்ல என்பது கண்டறியப்பட்டதனை தொடர்ந்து மீளவும் வழமைக்கு திருப்பியது வெள்ளை மாளிகை Read More »

Scroll To Top