Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / உலகச் செய்திகள் (page 87)

பதிவு வகை: உலகச் செய்திகள்

Feed Subscription

வில்லியம் மற்றும் கேட் தம்பதியினரின் ஐந்தாவது திருமண நாள் இன்று

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் அவரது துணைவி இளவரசி கேட் மிடில்ட்டன் ஆகியோர், இன்று (வெள்ளிக்கிழமை) அவர்களது ஐந்தாவது திருமண நாளை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். இந்த தம்பதியினருக்கு 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் திகதி ஜோர்ஜ் அலெக்சான்டர் லுயிஸ் என அழைக்கப்படும் குட்டி இளவரசர் பிறந்தார். இவரது பிறப்பு முழு உலக நாடுகளிடையே மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு மே 02 ஆம் திகதி, இந்த தம்பதியினருக்கு குட்டி இளவரசி சார்லட் எலிசபெத் டயானா பிறந்தார். ... Read More »

ஐ.எஸ் இன் சுரங்கப்பாதைகளை 907 KG பங்கர் பஸ்ரர் குண்டு வீசி தாக்கியழிப்பு

ஈராக்கில் நிலைகொண்டுள்ள ஐ எஸ் தீவிரவாதிகளின் சுரங்கப்பாதை வலையமைப்பினை பிரித்தானிய போர் விமானங்கள் பங்கர் பஸ்ரர் எனும் நிலவறை தகர்ப்பு குண்டுகளை வீசி தகர்த்துதழித்துள்ளன. மேற்கு ஈராக் மலைகளிலிருந்து உள்ள குகைகளின் நுழைவாயில்களை இலக்குவைத்து இந்த விமானத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. பிரித்தானிய முதல் தடவையாக ஐ எஸ் இன் நிலைகள் மீது பங்கர் பஸ்ரர் குண்டுகளை வீசி தாக்கியழித்துள்ளது. ரோயல் விமானப்படைக்குச் சொந்தமான ரோர்னடோ (Tornado) ஜெட் போர் விமானங்கள் ஐ எஸ் தீவிரவாதிகளின் சுரங்கப்பாதை வலையமைப்பு மீது தாக்குதல் நடத்தி தாக்கியழித்த காணொளிகள் பிரித்தானிய ... Read More »

அழகு ராணியாக முடிசூட்டப்பட்ட இவர் யார் தெரியுமா

பிரிட்டனைச் சேர்ந்த றக்பி வீராங்கனையொருவர் அழகு ராணியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கோல் டொபின் எனும் இந்த யுவதி பிரிட்டனின் வேல்ஸ் பிராந்தியத்தின் டொனிரிபெய்ல் நகரைச் சேர்ந்தவர். 23 வயதான இவர் சௌத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டுத் துறையில் பட்டம் பெற்றவர். அதேவேளை விளையாட்டுப் போட்டிகளிலும் அவர் ஆர்வம் கொண்டவர். வேல்ஸின் டெவ் வெல் றக்பி கால்பந்தாட்டக் கழகமானது தனது 127 வருட கால வரலாற்றில் முதல்தடவையாக மகளிர் றக்பி அணியொன்றையும் கடந்த வருடம் ஆரம்பித்தது. அவ்வணியின் சார்பில் போட்டிகளில் பங்குபற்றிய கோல் டொபின், முதலாவது ட்ரை ... Read More »

சீனாவின் பால் மற்றும் கையடக்கதொலைபேசி இறக்குமதிக்கு தடை

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மற்றும் கையடக்கதொலைபேசிகள் தரக்குறைவாகவும், பாதுகாப்பு இல்லாமையால் இருப்பதால் இந்தியா தடைச் செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஐ.எம்.இ.ஐ எண் இல்லாத ஒரு சில கையடக்கதொலைபேசிகள் தடைச் செய்யப்பட்டுள்ளது. உலக வணிக அமைப்பு விதியின் படி தற்போது, குறிப்பிட்ட நாட்டின் இறக்குமதியை முழுமையாக தடைச் செய்ய முடியாது என்றும் அவர் மேலும், தெரிவித்தார். Read More »

வட கொரியாவிற்கான சமிக்கையாக கூட்டு இராணுவப் பயிற்சி நிறுத்தப்படவில்லை: ஒபாமா

வட கொரியா அணுவாயுத சோதனைகளை கைவிடுவதற்கு சாதகமான சமிக்கையாகவே அமெரிக்க – தென்கொரிய பாரிய வருடாந்த கூட்டு இராணுவப் பயிற்சி கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற கருத்தை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மறுத்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜேர்மனிய அதிகர் ஏஞ்சலோ மெர்கலுடன் இணைந்து, ஜேர்மனியில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடான்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஒபாமா, “நாம் தீவிரமான எந்தவொரு வாக்குறுதியையும் வழங்கத் தயாராக இல்லை. அவர்கள் அணுவாயுத சோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தீர்மானித்துள்ள நிலையிலேயே, ... Read More »

செல்பீ படம் பிடித்த பொலிஸ் உத்தியோகத்தர் நெருக்கடியில்

உத்தியோகபூர்வ பொலிஸ் வாகனத்தில் துப்பாக்கியை ஏந்தியவாறு டொப்லெஸ்ஸாக செல்பீ படம்பிடித்த மெக்ஸிகோ பெண் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவர் நெருக்கடியில் சிக்கியுள்ளார். நில்டோ கார்சியா எனும் இப்பெண் மெக்ஸிகோவின் வட பிராந்திய நகரான எஸ்கோபெடோ நகரில் பணியாற்றியவர். அவர் தனது பொலிஸ் ரோந்து வாகனத்திலிருந்தவாறு பிடித்துக்கொண்ட செல்பீ படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார். இப் புகைப்படம் மெக்ஸிகோ பொலிஸ் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு வந்ததையடுத்து, நில்டோ கார்ஸியா கட்டாய விடுமுறையில் அனுப்பப் பட்டுள்ளார். அவர் பணியிலிருந்து நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப் படுகிறது. இதேவேளை இவ் விடயம் குறித்து ... Read More »

உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்ன இருக்கிறது கல்வி முறை?

உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ? ?பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பாடசாலைக்கு செல்லத் தொடங்குகிறது… ?ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை… ?கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை… ?எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, ... Read More »

250 பெண்களின் தலையை வெட்டி கொலையால் பெரும் அதிர்ச்சி

250 பெண்ககளின் தலைகளை வெட்டி கொலை செய்த சம்பவம் ஒன்று உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை பிடித்து உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், பல பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்வதுடன் அவர்களை சந்தையில் செக்ஸ் அடிமையாக விற்று வருகிறார்கள். ஈராக்கை சேர்ந்த மொசுல் நகரைச் சேர்ந்த இளம் பெண்களை கடத்தி செக்ஸ் அடிமைகளாக்க முயன்ற தீவிரவாதிகளின் செயலுக்கு ஒத்துழைக்க மறுத்த 250 பெண்களின் தலையை வெட்டி ஐ.எஸ் அமைப்பினர் கொலை செய்துள்ள தகவல் தற்சமயம் வெளியாகி மிகுந்த ... Read More »

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு தலையில்லா முண்டத்தைப் “பரிசாக அனுப்பிய “ஐ.எஸ்.ஐ.எஸ்”

உலகையே அச்சுறுத்தி வரும் தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ்ஸுக்கு அமைதிச் செய்தி அனுப்பிய ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு, பதிலுக்கு அந்த அமைப்பு தலை துண்டிக்கப்பட்ட உடல் ஒன்றின் படத்தை அனுப்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர். இவர் சமீபத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு அமைதிச் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் பேச்சுவார்த்தை நடத்த தான் தயாராக இருப்பதாகவும், ஐஎஸ் அமைப்பு தீவிரவாதத்தைக் கைவிட்டு விட்டு அமைதிப் பாதைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். ஆனால் அதற்குப் பதிலாக தலை துண்டிக்கப்பட்ட உடல் ... Read More »

மல்யுத்த வீராங்கனை சைனா மர்ம மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி

உலகப் புகழ்பெற்ற ரெஸ்ட்லிங் என்ற மல்யுத்த வீராங்கனை சைனா, அமெரிக்காவில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. சைனாவின் இந்த மர்ம மரணம் மல்யுத்த ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1990 களில் மிகவும் பிரபலமான ரெஸ்ட்லிங் வீராங்கனையாக திகழ்ந்து வந்தவர் சைனா. இவரின் இயற்பெயர் ஜோனி லாரர். உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் சைனாவுக்கு உண்டு. கடந்த பல ஆண்டுகளாக போட்டிகளில் எதிலும் கலந்துகொள்ளாத சைனா, தனது கலிபோர்னிய பண்ணை வீட்டில் வசித்துவந்தார். இந்நிலையில் திடீரென்று இன்று (புதன்) கலிபோர்னியா பண்ணை ... Read More »

Scroll To Top