Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் (page 10)

பதிவு வகை: செய்திகள்

Feed Subscription

அடுத்தது என்ன சூறாவளி ஜோஸ் யு எஸ் கனடாவை தாக்கலாம்

இர்மாவின் தாக்கம் அடங்கும் வேளையில் யு.எஸ்சின் பார்வை சூறாவளி ஜோசின் மீது திரும்பியுள்ளது. கரிபியன் தீவுகளின் வடபகுதியில் நிலை கொண்டிருக்கும் ஜோஸ் அடுத்த வாரம் யு.எஸ்சின் கிழக்கு மற்றம் கனடாவை தாக்கலாம் என கருதப்படுகின்றது. ஜோஸ் தற்போது ஒரு மூன்றாம் வகையில் இருந்து 2ம் வகை சூறாவளியாக குறைந்துள்ளது. குளோபல் செய்தி வானிலை ஆய்வாளர் றொஸ் Hull அடுத்த சில நாட்களில் 1ம் வகைக்கு பலவீனமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார். தற்சமயம் இது அட்லான்டிக்கிற்கு வெளியே சுற்றிக்கொண்டிருப்பதாகவும் நிலப்பகுதிகளிலிருந்து வெகு தூரத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ... Read More »

மரத்தில் கூடாரம் அமைத்து உண்ணாவிரத போராட்டம்

நான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு எனக்கே அதிகாரம் உண்டு. இதன் மூலமாக எனது 5 பிள்ளைகளுடைய கல்வி மற்றும் பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டும். அரசாங்கம் நான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு இடமளியேன் என கோரி வட்டகொடை மடக்கும்புர வேவஹென்ன கிராமத்தின் எம்.ஜி.பந்தல பண்டார மரத்தில் கூடாரம் அமைத்து உண்ணாவிரதத்துடன் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். தனக்கு சொந்தமான காணியில் வளர்க்கப்பட்டுள்ள மரங்களை வெட்டுவதற்கு தாம் அனுமதிகளை பெற்றிருந்த வேளையில் அதனை அரச சொத்தாக அபகரிக்க திட்டம் தீட்டுகின்றார்கள். இந்த மரங்களை வளர்த்ததால் அதனை வெட்டும் தருவாயில் எனது ... Read More »

மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டியதில் 08 மாணவிகள் உட்பட 11 பேர் வைத்தியசாலையில்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா கிலன்டில் லங்கா பிரிவில்இ இன்று காலை பாடசாலைக்கு சென்ற மாணவிகளை வழியில் இடைமறித்த இனந்தெரியாத மர்மநபர்கள் இருவர், கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளதால், அம்மாணவிகள் மயக்கமுற்று கீழே விழுந்துள்ளனரெனவும் பிரதேச மக்களின் உதவியுடன் அவர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் எட்டு மாணவிகளும், மூன்று மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் பகுதியில் அமைந்துள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் 5, 6, 7, 8, 9, 10 ... Read More »

புதிய வரி முறை ஏப்ரல் முதல்

புதிய இறைவரிச் சட்டமூலத்திலுள்ள வரி முறைகளை ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுல்படுத்த, திரைசேரி தீர்மானித்துள்ளது. நிதி அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது. Read More »

யாழில் பொதுச் சுகாதார பரிசோதர்கள் ஆர்ப்பாட்டம்

அகில இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கமும், இணைந்த சேவைகள் உத்தியோகத்தர்களும் இணைந்து இன்று யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியிருந்தனர். வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் தாபன விதிக்கோவைக்கு எதிராக செயற்பட்டு 5 பொது சுகாதார பரிசோதகர்களின் வேதனங்களை நிறுத்தி அவர்களை சேவையிலிருந்து நீக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ். ரெலிகொம் முன்றலிலிருந்து இன்று நண்பகல் 12.00 மணியளவில் ஆரம்பமாகிய இந்தப் பேரணி, யாழ். பண்ணையிலுள்ள சுகாதார அமைச்சின் அலுவலகம் வரை சென்றது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மாகாண சுகாதார ... Read More »

கனேடிய தமிழர்களுக்கு ஏற்பட்ட நிலை

17 வருடங்களின் பின்னர் கனடாவிலிருந்து இலங்கை செல்ல விரும்பிய தமிழ் குடும்பம் ஒன்று முகங்கொடுத்த நெருக்கடி தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. லண்டன் ஊடாக இலங்கை செல்வதற்கான பயண ஏற்பாடுகளை டொரொன்டோ வாழ் இலங்கை குடும்பம் ஒன்று செய்தது.  குறித்த காலப்பகுதியில் விமான நிலையத்திற்கு சென்ற போதும், அவர்களின் பயணத்தை தொடர முடியாத அவல நிலை ஏற்பட்டது. எயார்கனடா ஊடாக லண்டன் பயணிப்பதற்காக சென்ற மகேஸ்வரன் குடும்பத்தினர், மேலதிகமாக 4000 டொலர்களை செலவிட்டு அடுத்த நாளே அவர்களின் பயணத்தை ஆரம்பித்தனர். கடந்த ஜுன் ... Read More »

ஒன்ராறியோவில் பல்கலைக்கழக மாணவர்களிற்கு இலவச பயிற்சி

ரொறொன்ரோ-இந்த வருடம் ஒன்ராறியோவில் இலவச ரியுசன் பெற்ற கல்லூரி-படிப்பு மாணவர்களின் எண்ணிக்கை 185,000 என ஒன்ராறியோவின் இரண்டாம் நிலை கல்விக்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் புதிய திட்டமொன்றின் கீழ் இந்த இலவச நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது. மேம்பட்ட கல்வி அமைச்சர் டெப் மத்தியு இந்த ரியுசன் தொகையை இன்று அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இத்தொகை ஒன்ராறியோவின் முழு-நேர கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் தொகையை விட மூன்றில் ஒரு பங்கு மேலானதெனவும் கூறப்படுகின்றது. கடந்த வருட வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட புதிய ஒன்ராறியோ ... Read More »

இனி ஆண்டின் முதல் மாதம், எங்கள் நாட்டின் தமிழ் மாதம்: கனடா நாட்டின் அதிரடி அறிவிப்பின் பின்னணி..?

யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற கனியன் பூங்குன்றனாரின் உலகப்புகழ்பெற்ற முழக்கத்தை இன்று உலகமெங்கும் தமிழர்கள் பறைசாற்றி வருகின்றனர். கனடாவில் ஜனவரி மாதத்தை தமிழ் மரபு மாதமாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நாடு தழுவிய அளவில் கொண்டாடும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த வருடம்  நிறைவேறியது.   கடந்த மே மாதம் இந்த மசோதாவை கனடிய நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி, ஒரு தனிநபர் மசோதாவாகத் தாக்கல் செய்திருந்தார். இனி வரும் ஆண்டுகளில் கனடாவில் ஜனவரி மாதம் ‘தமிழ் மரபுத் திங்கள்’ என்று நாடு முழுவதும் ... Read More »

தனியார் வைத்தியசாலையின் கழிவுகளை தனியார் காணியில் கொட்டும் முயற்சி

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பெரிய உப்போடை பகுதியில் தனியார் வைத்தியசாலையின் கழிவுப்பொருட்களை கொட்டுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கையினை பொதுமக்கள் தடுக்க முற்பட்டபோது அங்கு பதற்ற நிலையேற்பட்டது. மட்டக்களப்பில் இயங்கும் பிரபல தனியார் வைத்தியசாலையில் உள்ள கழிவுகளை பெரிய உப்போடை வாவிக்கரை வீதியில் உள்ள தனியார் காணியொன்றில் கொட்ட முற்பட்டபோதே இந்த நிலைமையேற்பட்டது. மட்டக்களப்பு திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு நிலையத்தில் குப்பைகொட்டுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு வைத்தியசாலை கழிவுகளை அங்கு கொட்ட முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மட்டக்களப்பு வாவிக்கு அருகில் இவ்வாறு தனியார் கழிவுகளை கொட்டி புதைக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ள்பட்டதாகவும் ... Read More »

வெலிகடை சிறைச்சாலை சம்பவம்: மனு ஒத்திவைப்பு

வெலிகடை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்க, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிப்பதை இரண்டாவது முறையாக மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இன்று குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை என தெரியவந்துள்ளது. எனவே, மனு மீதான விசாரணைகளுக்கு பிரிதொரு தினத்தை வழங்குமாறு அவரது சார்பில் கோரப்பட்டது. இதற்கமைய, குறித்த மனுவை ஒக்டோபர் ... Read More »

Scroll To Top