Friday , October 20 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் (page 2)

பதிவு வகை: செய்திகள்

Feed Subscription

குளத்தில் மூழ்கி விமானப்படை வீரர் உயிரிழப்பு

திருகோணமலை மஹதிவுல்வெவ குளத்திற்கு நீராடச்சென்ற விமானப்படை உத்தியோகத்தரொருவர் 18.10.2017 மாலை நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மொறவெவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் கிபிஸ்ஸ-நாகல்வெவ பகுதியைச் சேர்ந்த 026816 எனும் இலக்கமுடைய ஹபுகொட கலகாவகெதர நோமன் ஜெயரெட்ண (33 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமானப்படை தளத்திலிருந்து மொறவெவ விமானப்படை தளத்திற்கு கட்டிட நிர்மானப்பணிக்காக வந்த 15 பேர் இன்றைய தினம் விடுமுறை காரணமாக குளத்திற்கு நீராடச்சென்றிருந்த போதே நீரில் மூழ்கியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. உயிரிழந்த விமானப்படை வீரரின் சடலம் மஹதிவுல்வெவ ... Read More »

குப்பை மேடு சரிந்ததால் சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதை சேதம்

நல்லத்தண்ணி சிவனொளிபாத மலைப் பகுதியில் இருந்த குப்பைமேடு சரிந்தமையால் சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதை சேதமாகியுள்ளது. சிவனொளிபாத மலையின் மாகிரிதம்ப எனும் பகுதியிலே ​நேற்று மதியம் குப்பை மேடு சரிந்துள்ளது. பருவகாலத்தில் மலையுச்சிக்கு செல்லும் பாத யாத்திரிகளினால் வீசப்பட்ட பிளஸ்ரிக் போத்தல்கள் உட்பட கழிவுகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த குப்பை மேடே இவ்வாறு சரிந்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வந்த அடை மழையினால் சேகரித்து வைக்கப்பட்டிருந்த கழிவுகளை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாகவும், உடனடியாத அக் கழிவுகளை அகற்ற நடடிக்கை எடுப்பதாகவும் சிவனொளிபதமலை ... Read More »

வானிலிருந்து வீழ்ந்த மர்மப் பொருள் எரிகல் என உறுதி மாத்தறையில் சம்பவம்

விண்கல் ஒன்றின் பாகம் என கருதப்படும் மர்ம பொருள் ஒன்று மாத்தறை பிரதேசத்தில் நேற்று இரவு வீழ்ந்துள்ளதாக ஆதர் சி கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. புவியின் வளிமண்டலத்தில் எதிர்பாராத விதமாக நுழைந்த விண்கல்லின் பகுதியே அங்கு வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த எரிகல்லை பொது மக்கள் தொட முயற்சிக்க வேண்டாம் எனவும் அது பற்றி தகவல் தெரிவிக்க 0714800800 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைக்குமாறும் அந்த மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஆதர் சி கிளார்க் மத்திய நிலையம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு ... Read More »

இளம் பெண் கைது கனடா பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

கனடா – ரொறொன்ரோவைச் சேர்ந்த மருத்துவர் எனச் சந்தேகிக்கப்படும் 19 வயது யுவதி ஒருவரை, முறையற்ற வகையில் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவத்தினை (பிளாஸ்ட்டிக் சேர்ஜரி) செய்த குற்றத்திற்காக பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த யுவதி வீடு ஒன்றில் நிலத்திக் கீழ் அமைக்கப்பட்டிருந்த அறை ஒன்றில் வைத்து பெண் ஒருவருக்கு அண்மையில் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையினை செய்து வைத்துள்ளார். எனினும் இருவாரங்களின் பின்னர் சிகிச்சை பெற்றுக் கொண்ட பெண்ணுக்கு தொற்று நோய் ஏற்பட்டு வேறு ஓர் மருத்துவரிடம் சென்று மீண்டும் ஒட்டுறுப்பு அறுவையினை செய்து ... Read More »

தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக் கொண்ட கனேடிய பிரதமர்

தீபாவளித் தினத்தை முன்னிட்டு டுவிட்டர் மூலமாக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்ட கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்துக்களின் பண்டிகையான தீபாவளி தினத்தை முன்னிட்டு ட்ரூடோ தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் “தீபாவளி முபாரக்… ஒட்டாவில் நாங்கள் இரவு கொண்டாடவுள்ளோம், தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என பதிவேற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து, முபாரக் எனப்படும் வார்த்தை ஓர் அரபுச் சொல் எனவும் தீபாவளி வாழ்த்துக்கு அதனை பயன்படுத்தியது தவறு எனவும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. எந்தவொரு பண்டிகைக்கும் ட்ரூடோ தனது வாழ்த்துக்களைத் தொடர்ந்தும் தெரிவித்து ... Read More »

பாடசாலை பேரூந்தினால் மோதப்பட்ட 7 வயது சிறுவன்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் அபொட்ஸ்வோட் என்ற இடத்தில் 7வயது சிறுவன் அவனது வீட்டின் முன்னால் பாடசாலை பேரூந்தினால் மோதப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இரண்டாம் வகுப்பில் படிக்கும் 7வயதுடைய குர்ராஜ் என்ற இச்சிறுவன் அக்டோபர் 6ல் மோதப்பட்டான்.இச்சம்பவம் சமூக மீடியாவில் பகிரப்பட்டதை தொடரந்து பகிரங்கமானது. கல்சா மிசன் பள்ளி மாணவனான இவன் பாடசாலையில் இருந்து வீட்டில் விடப்பட்ட பின்னர் சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தை தொடர்ந்து சாரதியின் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதாக சீக்கிய சுதந்திர பள்ளி தெரிவித்துள்ளது. சிறுவன் பேரூந்திற்கு முன்னால் கடந்து செல்லும் போது மோதப்பட்டது பின்னர் வாகனம் ... Read More »

கூகுளின்சகோதரி கம்பனி ரொறொன்ரோவில் உயர்-தொழில் நுட்ப சமுதாயத்தை உருவாக்குகின்றது

ரொறொன்ரோவின் பன்முக கலாச்சார மக்கள் தொகை மற்றும் கனடாவின் குடியேற்ற கொள்கை இரண்டும் நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரத்தை 50மில்லியன் அமெரிக்க டொலர்கள் திட்டத்திற்கு தெரிந்தெடுக்க காரணமாக அமைந்ததென Alphabetன் நிர்வாக தலைவர் எரிக் சிமித் தெரிவித்தார். கனடா குடியேறுபவர்களின் வீடு என தெரிவித்த இவர் தொழில் நுட்பம் புலம் பெயர்ந்தோர் மூலம் இயக்கப்படுவதாகவும் தெரிவித்தார். 2015 மத்திய தேர்தலின் பின்னர் தான் ட்ரூடோவை சந்தித்த போது கலிபோர்னியாவில் இருக்கும் முன்னணி தொழில் நுட்ப மையமான சிலிக்கோன் பள்ளத்தாக்கு போன்ற அடுத்த ... Read More »

கனடாவில் ஒரு பெண்ணிற்கு சிறந்த நகரம் எது

அண்மை காலங்களில் ஆண் பெண்ணிற்கான ஊதிய இடைவெளி மிக மோசமாக இருப்பினும் பெண் ஒருவருக்கு கனடாவில் சிறந்த நகரம் விக்டோரியா என ஆய்வு ஒன்று கண்டுபிடித்துள்ளது. பொருளாதார மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பிற்கான பெண்களின் அணுகல், கல்வி, சுகாதாரம் மற்றும் தலைமைத்துவ நிலைமைகள் குறித்து பெண்கள் மற்றும் ஆண்களிற்கிடையிலா வேறுபாடுகளின் அடிப்படையில் கொள்கை மாற்றுக்கான கனடிய மையம் நடாத்திய கணிப்பில் கனடாவின் 25 பெரிய நகரங்களில் விக்டோரியா முதலிடத்தை பெற்றுள்ளது. விக்டோரியாவில் மட்டுமே ஆண்களை விட அதிகமான பெண்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனரெனவும் அறிக்கை தெரிவிக்கின்றது. ... Read More »

காணாமல் போயிருந்த 19 வயது பெண் கைது; இரண்டு சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்கு

கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய வத்சலா பெரேரா உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 15 வயது மற்றும் 14 வயதுடைய ஏனைய இரண்டு சிறுமிகளையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த, ஒன்றரை வயது குழந்தையின் தாயான 19 வயதுடைய வத்சலா பெரேரா, அவரது கணவரின் 15 வயதுடைய சகோதரி மற்றும் அயல் வீட்டில் வசிக்கும் 14 வயதான தமிழ் சிறுமி ஆகிய முவரும் காணாமல் ... Read More »

முச்சக்கரவண்டி 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 220 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். கொழும்பு குணசிங்கபுர பகுதியிலிருந்து ஹட்டனிற்கு சென்று கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை ரம்பாதெனிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. முச்சக்கரவண்டி சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட மூவர் பயணித்துள்ளதாகவும், மூவரும் பலத்த ... Read More »

Scroll To Top