Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் (page 20)

பதிவு வகை: செய்திகள்

Feed Subscription

இன்று முதல் பொலிதீன் பயன்பாட்டுக்கு தடை

இன்று முதல் தெரிவு செய்யப்பட்ட சில வகையான பொலிதீன் பயன்பாடு தடைக்கு வருவதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் கலாநிதி லால் மர்வின் தர்மசிறி கூறினார். சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டமாக இது நடைமுறைக்கு வருகின்றது என்று அவர் கூறினார். எவ்வாறாயினும் இன்று முதல் பொலிதீன் தடை செய்யப்படும் என்ற போதிலும், வருகின்ற ஜனவரி மாதம் வரை அதனை நடைமுறைப்படுத்துவதில்லை என்று அதிகாரிகள் அறிவித்திருப்பதாக பொலிதீன் தயாரிப்பாளர்கள் மற்றும் மீள்சுழற்சியாளர்கள் சங்கத்தின் தலைவர் அநுர விஜேதுங்க கூறினார். இதேவேளை பொலிதீன் பயன்பாட்டில் இருந்து விடுபடுவதற்காக போதுமான ... Read More »

வெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு!

வெப்ப மண்டல புயல் ஹார்வே ரெக்சஸ் சுத்திகரிப்பு நிலையங்களை தாக்கியதன் காரணமாக கனடாவில் எரிவாயு விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை அளவில் கனடாவில் எரிவாயுவின் மொத்த விலை சராசரியாக இரண்டு அல்லது நான்கு சதத்தால் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நுகர்வோர் சில சந்தைகளில் அதிக விலை உயர்வை காணலாம் எனவும் மூத்த பெற்றோலிய ஆய்வாளர் தெரிவித்துள்ளார். கல்கரி, மொன்றியல் மற்றும் ஒட்டாவா போன்ற சந்தைகளில் மொத்த விலை அதிகரிப்பை ஒரு சாக்காக வைத்து எரிவாயு விலையை லிட்டர் ஒன்று 10சதம் மேலதிகமாக ... Read More »

மருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

2016-டிசம்பர் மாதம் தனது மருத்துவ மனைவியை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ரொறொன்ரோ நீதிமன்றம் புதன்கிழமை பிற்பகல் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. தனது மனைவியான டாக்டார் எலனா விறிக்-ஷாம்ஜியை கொன்றதாக டாக்டர் மொகமட் ஷாம்ஜி குற்றம் சுமத்தப்பட்டார்.இவரது உடல் சூட்கேஸ் ஒன்றிற்குள் வைக்கப்பட்டிருந்ததை டிசம்பர் 1-ல் கிளெயின்பேர்க் என்ற இடத்தில் ஒரு வீதியின் பக்கத்தில் கிடக்க கண்டு பிடிக்கப்பட்டது. குடும்ப மருத்துவரான இவரை குரல்வளை நெரிக்கப்பட்டு, அடித்து கொல்லப்பட்டார் எனவும் இச்சம்பவம் இருவரும் இவர்கள்து மூன்று பிள்ளைகளுடன் வசித்த இவர்களது ... Read More »

கனடாவின் தமிழர் திருவிழா! பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்

கனடா தமிழ் விழாவை சிறப்பித்த அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் ‘வணக்கம்’ ட்வீட் தற்போது பல்லாயிரக்கணக்கான லைக்குகளை அள்ளியது மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான கனடா தமிழர்களின் பாராட்டுகளையும் குவித்து வருகிறது. கனடாவின் டொரன்டோ நகரில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்ற ‘தமிழர் திருவிழா’ நடைபெற்றது. பேதமின்றி பல நாட்டு மக்களுக்கும் ஆதரவுக்கரம் நீட்டும் நட்பு நாடுகளின் பட்டியலில் எப்போதும் முதலிடத்தில் இருக்கும் நாடு ‘கனடா’. கலாசார வேற்றுமைகள் மறந்து உலகின் அத்தனை நாடுகளின் பல முக்கிய விழாக்களை அந்தக் கலசாரத்துக்குச் சொந்தமான மக்களோடு இணைந்து ... Read More »

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இல்லை

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என, வட மாகாண முதலமைச்சரின் பெயரில் வௌியாகியுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களில் தொடர்ந்தும் அவர்களுடன் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சி.வி.விக்னேஸ்வரனின் பெயரில் வௌியாகியுள்ள குறித்த அறிக்கை மேலே தரப்பட்டுள்ளது. Read More »

சைட்டத்திற்கு எதிராக தீப்பற்றிய இரவு

மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி விவகாரம் தொடர்பில் மருத்துவ பீட மாணவர்கள் ​நேற்று இரவு 07.00 மணியளவில் தீப்பற்றிய இரவு என்ற போராட்டத்தை மலையகத்தில் முன்னெடுத்தனர். அந்தவகையில், தலவாக்கலை நகரின் மத்திய பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னால் சைட்டத்துக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என கோரி தீப்பந்தங்களை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பி, 50ற்கும் அதிகமானோர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தேசிய எதிர்ப்பு போராட்டத்தை நாடாளவிய ரீதியில் முன்னெடுத்தமைக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், மருத்துவ பீட மாணவர்கள், மக்கள் விடுதலை முன்னணியின் ... Read More »

யாழில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் 53 வயதுடைய வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், புங்கன்குளம் புகையிரத நிலையத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஆசீர்வாதப்பர் வீதிப் பகுதியைச் சேர்ந்த ஆர். அருள்நேசன் (வயது 53) என்ற வயோதிபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். உயிரிழந்தவர் பிரபல தமிழ் பாட ஆசிரியர் மீராவின் கணவர் என்பது ... Read More »

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு இதுவரை அழைப்பு இல்லை

செப்டம்பர் மாதம் இடம்பெற உள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழாவிற்கு இதுவரை தனக்கு அழைப்பு கிடைக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார். அதேவேளை கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பல உறுப்பினர்களுக்கு ஆண்டு விழாவிற்கான அழைப்பு கிடைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். கேட்டே பிரதேசத்தில் உள்ள விகரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்விற்கு பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே மஹிந்த ராஜபக்‌ஷ இதனைக் கூறியுள்ளார். Read More »

எகிப்து நாட்டில் தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து: 14 பேர் பலி..!

எகிப்து நாட்டில் தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்ததாகவும், 32 பயணிகள் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எகிப்து நாட்டின் மத்தியப் பகுதியான பெனி சூயெப் நகரை அந்நாட்டின் தலைநகரான கெய்ரோவுடன் இணைக்கும் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஒரு சுற்றுலா பஸ் இன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியே வந்த லாரியும் – பேருந்தும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிலரது ... Read More »

அமெரிக்காவால் மிகவும் தேடப்பட்ட நபர் கனடிய மிதிவண்டி ரோந்து பொலிசாரால் கைது!

யு.எஸ்சினால் மிகவும் தேடப்பட்டுவந்த சந்தேக நபர்களில் ஒருவரை துவிச்சக்கர வண்டியில் ரோந்து சென்ற மொன்றியல் பொலிஸ் கைது செய்துள்ளது. Katay-Khaophone Sychantha-காஓ எனவும் அறியப்பட்ட இந்நபர் கடந்த புதன்கிழமை மொன்றியல் பொலிஸ் அதிகாரிகள் வழக்கமான சைக்கிள் வழி ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த சமயம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இவருடன் மற்றொரு மனிதனும் போதை பொருட்கள் வைத்திருந்ததால் தடுக்கப்பட்டார். Sychantha ஓட முயன்ற போது உடனடியாக பொலிசாரால் கைது செய்யப்பட்டதாக பொலிசாரின் அறிக்கை தெரிவிக்கின்றது. பொலிசார் அடையாள அட்டையை கேட்ட போது Sychantha அமெரிக்க அடையாள அட்டை ... Read More »

Scroll To Top